அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்

மூர் மார்க்கெட் தெரியும். மூர் விதி (Moore's Law) தெரியுமா?

கணினி யுகம் தொடங்கிய 50-களில் கணினிகளின் திறன் (Computing Power) ரொம்பவும் குறைவு. கணினிகளின் மூளையாகச் செயல்படும் டிரான்சிஸ்டர்களை அடுக்கி, குளிரூட்டப்பட்ட அறைகளில் அவற்றை இயக்குவதற்குப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. சிலிக்கான் தொழில்நுட்பம் வளர வளர... கணினிகளின் திறன் அதிகரித்தபடி இருக்க, 1965-ல் கோர்டன் மூர் கணினி யுகத்தின் எதிர்கால வளர்ச்சி ஒரு ஃபார்முலாவின் அடிப்படையில் இருக்கும் என தீர்க்கதரிசனமாகச் சொன்னார். அந்த ஃபார்முலாவின்படி, கணினித் திறன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பானபடி செல்ல வேண்டும். ஆனால், அவர் கணித்ததற்கும் மேலாக, 18 மாதங் களில் கணினித்திறன் இரண்டு மடங்காகிச் சென்றுகொண்டு இருக்கிறது.

இதில் இன்ட்ரஸ்டிங்கான விஷயம்... கணினித் திறன் அதிகரித்தபடி இருக்க, கணினிகளின் சைஸ் சிறியதாகியபடியே போகிறது. 60-களில் டேட்டா சென்டர்களில் ஜயன்ட் சைஸில் இருந்த கணினி, 80-களில் பொதுஜனம் பயன்படுத்தும் வகையில் மேசையில் (Desktop) வந்து அமர்ந்து, மடிக் கணினியாக (Laptop) மெலிந்து, பின்னர் கையலகமாகி (Palmtop), இப்போது இணையப் புத்தகமாகவும் (Notebook), குளிகையாகவும் (Internet Tablet) சுருங்கி இருக்கிறது.

கணினியைக் கடுகு அளவில் மாற்றியதில் பெரும் பங்கு இணையத்துக்கு உண்டு. அதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், டெக் உலகில் சென்ற வாரத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வை முதலில் பதிவு செய்ய வேண்டும். சில மாதங்களுக்கு முன்னால், கூகுள் நிறுவனம் க்ரோம் (http://new.google.com/chrome ) என்ற புதிய ப்ராசஸரை அறிமுகம் செய்தது நினைவிருக்கலாம். மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ராசஸருக்கு சவாலாகக் கருதப்பட்ட க்ரோம் விரைவில் கணினியையே இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டமாக 'Chrome OS' என்ற பெயரில் வரப் போகிறது என கூகுள் அறிவிக்க, கலங்கிப் போய் நிற்கிறது மைக்ரோசாஃப்ட்.

ஏன்? காரணம் இருக்கிறது.

மைக்ரோசாஃப்டின் ஆதார அடித்தளமான விண்டோஸ் இப்போது உலகில் 90 சதவிகிதக் கணினிகளை இயக்குகிறது. மைக்ரோசாஃப்டின் ஆதிக்கம் இத்தனை வியாபித்திருப்பதன் காரணம் சந்தேகமின்றி அதன் பிரத்யேகத் தொழில்நுட்பமான விண்டோஸ்.

இணையம் அறிமுகமான தொடக்கக் காலத்தில், இத்தனை வலுவாக ஊன்றியிருக்கும் விண்டோஸை வீழ்த்த முடியாதென்ற ஆணவம் தொனிக்கும் வகையில் நடந்து வந்த மைக்ரோசாஃப்ட், சில ஆண்டுகளில் இணையத்தின் இமாலய பலத்தைப் புரிந்துகொண்டாலும், அதைச் சரிவரப் பயன்படுத்தத் தவறி, விண்டோஸையும் விட முடியாமல் தவிக்கிறது.

வெயிட் எ மினிட்! விண்டோஸ் என்பது கணினிக்குள் அமர்ந்துகொண்டு அதை இயக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம். இணையம் என்பது கணினிகள் மற்றும் நெட்வொர்க் உபகரணங்களின் தொகுப்பு. விண்டோஸ் (அல்லது அதைப் போன்ற ஆப்பிள் போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம்) மூலமாகத்தானே இணையத்துக்குச் செல்ல முடியும்? இது இப்படி இருக்க, இணையம் எப்படி விண்டோசுக்குப் போட்டியாக வர முடியும் என்று கேட்கத் தோன்றலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், நானும் அப்படித்தான் கேட்டிருப்பேன். ஆனால், எதிர்காலத் தொழில்நுட்பம் இணையத்தையே ஆபரேட்டிங் சிஸ்டமாகக் கொண்டு இயங்கப்போகும் அறிகுறிகள் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட் டன. அதைப் புரிந்துகொள்ள மென்பொருட்களின் வியாபார அடிப்ப டைகளைப் புரிந்துகொள்வது அவசியம். கடைக்குச் சென்று கணினி ஒன்றை வாங்குகிறீர்கள். இந்த hardware உபகரணம் உங்களுக்குச் சொந்தமாகிறது. இந்த உபகரணத்தில் இயக்குவதற்காக, மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் (Microsoft Office) போன்ற மென்பொருளையும் வாங்குகிறீர்கள். CD அல்லது DVD வடிவில் உங்களுக்குக் கொடுக்கப்படும் இந்த மென்பொருள் உங்களுக் குச் சொந்தமானதல்ல; அதை ஒரே ஒரு கணினி யில் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள். இணையத்தின் வருகை இந்தக் கட்டுப்பாட்டைத் தவிடுபொடியாக்கியது. உங்களது கணினி என்பது இணையத்தில் பொருத்தப்பட்ட ஒரு வாசல் மட்டுமே. தேவையான மென்பொருளை நீங்கள் இணையத்தில் அமைந்திருக்கும் பெருங்கணினி (Server) ஒன்றில் நுழைந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், மென்பொருளின் லைசென்ஸ் வாங்குவதைவிட அதைச் சேவையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Software as a Service, சுருக்கமாக, SaaS என அழைக்கப்படும் மென்பொருள் சேவை ஐ.டி. இண்டஸ்ட்ரியின் இப்போதைய ஹாட் டாபிக். இதைத் தொடங்கிவைத்த நிறுவனம் new.salesforce.com. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான SaaS சேவைத் தளங்கள் இணையத்தில் வெளியிடப் பட்டு வருகின்றன.

Chrome OS இதில் எங்கே வருகிறது என்பதையும், முக்கியமான SaaS  தளங்களையும் அடுத்த வாரத்தில் பார்க்கலாம்.

சமீபத்தில் விர்ஜின் அட்லான்டிக்கில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து நியூயார்க் சென்று வந்தது அப்படி ஒரு fan-tech-tastic அனுபவம். தானாகவே Self check-in செய்த பின்னர், விமானத்தில் ஏறி அமர்ந்தால் நமக்கு முன் விரியும் கணினியின் பயன்பாடு மலைக்கவைக்கிறது.இ-மெயில் பார்த்து பதிலளிக்கவேண்டுமா? மியூஸிக் கேட்க வேண்டுமா? டி.வி. பார்க்க வேண்டுமா? எல்லாம்முடியும். தாகம் எடுக்கிறதா? தண்ணீர் கேட்கப் பணியாளரை அழைக்க வேண்டியதில்லை. கணினியில் shopping cart எடுத்து checkout செய்துவிட்டால் போதும். அடுத்த நிமிடத்தில் தண்ணீர் பாட்டிலைத் தருகிறார் பணியாளர். (தண்ணீர் தவிர வேறு எது வேண்டுமானாலும், கிரெடிட் கார்டு கொடுக்க வேண்டியது நல்ல கமர்ஷியல் யுக்தி). போரடிக்கிறதா? வீடியோ கேம்ஸ் விளையாடலாம். மற்ற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுடன் text chat பண்ணலாம். (என்னுடன் பயணித்த நண்பர் அடுத்த சீட்டில் அமர்ந்தபடி என்னுடன் chat செய்ய அடம்பிடித்தது செம காமெடி. விர்ஜின் அட்லாண்டிக்கின் நிறுவனர் ரிச்சர்ட் ப்ரான்சன் நம்மூர் விஜய் மல்லையா போலவே பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் தொழிலதிபர்!

-Logoff