Published:Updated:

உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

பாரதி தம்பி, படம்: கே.கார்த்திகேயன்.
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கிரஹப்பிரவேசம்
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்
உங்களுக்கு ஒரு சொந்த வீடு!
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

'பக்கத்து வீட்டைப் பார்!' - இதுதான் இந்த வார விஷயம். நாம் ஏன் பக்கத்து வீட்டைப் பார்க்க வேண்டும்? சேலம் ராஜ்குமாரின் கதைதான் இந்தக் கேள்விக்கான பதில்.

ராஜ்குமார், மத்திய அரசு ஊழியர். 15 வருடங்கள் சேமித்த பணத்தை வைத்து, 15 லட்ச ரூபாய்க்கு நகரின் மையத்தில் ஒரு ஃப்ளாட் வாங்கினார். அவர் காலையில் வேலைக்குப் போனால் வீடு திரும்ப இரவாகிவிடும் என்பதால், தன் ஃப்ளாட்டைச் சுற்றி யார் யார் இருக்கிறார்கள், என்ன வேலை செய்கிறார்கள் என்பது எல்லாம் அவ்வளவாகத் தெரியாது. யாராவது லிஃப்டில் பார்த்துச் சிரித்தால் பதிலுக்குச் சிரிப்பார், அவ்வளவே. அவரது மனைவியும் வேலைக்குப் போகிறார். இதற்கிடையே இவர்களின் எதிர் ஃப்ளாட்டுக்குக் குடி வந்தது ஒரு குடும்பம். அவர்களைத் தேடி அடிக்கடி ஆட்கள் வந்து போவார்கள். ஞாயிற்றுக்கிழமையானால் தேடி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான் 'சனி' பிடித்தது ராஜ்குமாருக்கு.

''திடீர்னு என்னைக் கூப்பிட்ட எதிர்வீட்டுக்காரர், 'சார், தப்பா நினைச்சுக்காதீங்க. கடன்காரங்க தொல்லை தாங்க முடியலை. நீங்க எனக்காக ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க. நான் வீட்டுக்குள்ளே இருக்கேன். வெளியில கதவைப் பூட்டி சாவியை ஜன்னல் வழியா தூக்கி உள்ளே போட்டுருங்க சார். ப்ளீஸ்!'னு கெஞ்சிக் கேட்டார். அந்த நேரத்துல அவரைப் பார்த்தா பாவமா இருந்துச்சு. கதவைப் பூட்டி சாவியை உள்ளே எறிஞ்சேன். அவரைத் தேடி வந்த சிலர், என் வீட்டுக் கதவைத் தட்டி அவர் எங்கே போயிருக்கார்னு கேட்டப்போ, காட்டிக்கொடுக்க மனசு வரலை. 'தெரியாது'ன்னு சொல்லிட்டேன். மனசுக்குள்ள ஏதோ தப்புப் பண்ணிட்ட குறுகுறுப்பு. ஏன்னா, அந்த வீட்டுக்கு அவர் வந்தே மூணு மாசம்தான் ஆகுது. அந்த நிமிஷம் வரைக்கும் அவர் பேர்கூட எனக்குத் தெரியாது.

ரெண்டு, மூணு மாசம் கழிச்சு இன்னொரு ஞாயிற்றுக்கிழமை. திமுதிமுன்னு போலீஸ் உள்ளே வந்துச்சு. மோப்ப நாய் அந்த எதிர் வீட்டுக்குள்ளே தாவிக் குதிக் குது. விசாரிச்சா எதிர் வீட்டு ஆளு கடத்தல் நகை களை வாங்கி விக்கிற ஆளாம். எனக்குப் பகீர்னுச்சு. அந்த மோப்ப நாய் என் வீட்டுக்கும் ஓடி வந்துருமோன்னு பயம். போலீஸ் இழுத்துட்டுப் போகும்போது அந்த ஆளு வேற எங்க வீட்டையே பாத்துக்கிட்டுப் போறான்!'' - விவரிக்கும்போது ராஜ்குமாரின் குரலில் இப்போதும் நடுக்கம். அதன் பிறகு எதிர் வீட்டுக்காரர் என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு ராஜ்குமாரும் போய் வந்தார். 'எதற்கு வம்பு' என பூட்டு-சாவி

உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

விவகாரத்தையும் சொன்னார். போலீஸ் அவரையும் ஒரு சாட்சியாகச் சேர்த்தது. அபார்ட்மென்ட் முழுக்க விஷயம் தெரியவந்த நிலையில் ராஜ்குமார் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர்.

சென்னைதான் அவரது சொந்த ஊர் என்பதால் சந்தோஷமாகக் கிளம்பினார்கள். அதற்கு முன் சேலம் வீட்டை விற்கும்போது வெடித்தது பஞ்சாயத்து. 'எதிர் வீட்டு' விவகாரத்தைக் காரணமாக்கி, அப்போதைய சந்தை மதிப்பைவிட 5 லட்ச ரூபாய் குறைத்துக் கேட்டார்கள். வேறு வழியின்றி நஷ்டத்துக்கு வீட்டை விற்றுவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது.

பொதுவாக, நகரங்களில் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. பெரும்பாலும் பெயர்கூடத் தெரிந்துவைத்துஇருப்பது இல்லை. இது நல்லதல்ல. பொதுநலமாக இல்லாமல் சுயநலமாகவேனும் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார், அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். 'குடியிருக்க' என வீடு வாங்கிவிட்டு உள்ளே வேறு ஏதாவது பிசினஸ் செய்வார்கள். 'நமக்கென்ன?' என இருக்க வேண்டாம். உங்கள் அபார்ட்மென்ட் அசோசியேஷனில் தைரியமாகச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் பேங்க் ஆட்கள் விசாரிக்க வருவார்கள். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சட்டத்துக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால், அது வெளியே தெரியவரும்போது அவரோடு சேர்த்து நீங்களும்தான் பாதிக்கப்படுவீர்கள். யாரோ

உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்

செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டி, உங்கள் வீட்டின் விலையையும் குறைப்பார்கள். இது தேவை இல்லாத ஒன்று. பக்கத்து வீட்டுக்காரர்களைக் கவனிப்பதால், அவர்களால் உங்களுக்குப் பிரச்னை வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.

சென்னை மாதிரியான பெருநகரங்களிலும், இதர மாவட்ட நகரங்களிலும் நகர எல்லைக்குள் வீட்டுமனை வாங்கி வீடு கட்டுவது என்பது நடுத்தர மக்களுக்கு இயலாத ஒன்று. அவர்களுக்கான ஒரே தேர்வு புறநகர்ப் பகுதிகள்தான். நீங்கள் தமிழ்நாட்டின் எந்த புறநகருக்குப் போனாலும் குவித்துவைத்த மணல் மேட்டுக்குப் பக்கத்தில் டூ-வீலரை நிறுத்திவிட்டுக் கட்டப்பட்டுக்கொண்டு இருக்கும் தன் கனவு வீட்டைப் பார்த்துக்கொண்டு இருப்பார் ஒரு மத்திய வயதுக்காரர். இன்றைய புற நகரங்கள் நடுத்தர வர்க்கத்து மக்களால் நிரப்பப்படுகின்றன. ஒரு வகையில் யாரோ ஒருவர் தன்னுடைய ரசனைக்கு ஏற்ப கட்டிய வீட்டை நாம் வாங்குவதைவிட, நமக்கே நமக்கான வீட்டை நாமே முன் நின்று கட்டுவது என்பது மனதுக்கு நெருக்கமான அனுபவம். 'வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறோம். அதை என் ரசனைக்கு ஏற்ப, எனக்குப் பிடித்த வடிவத்தில் கட்டுவேன்' என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? பேசுவோம் அதைப் பற்றியும்!

 
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்
-இன்னும் பிரவேசிக்கலாம்...
உங்களுக்கு ஒரு சொந்த வீடு! கிரஹப்பிரவேசம்