Published:Updated:

ஹாய் மதன்-கேள்வி பதில்

ஹாய் மதன்-கேள்வி பதில்

ஹாய் மதன்-கேள்வி பதில் .
ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ஹாய் மதன்-கேள்வி பதில்
கன்னத்தில் முத்தமிட்டால் ஆள் அவுட்!
ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்

எஸ்.சேதுகுமாரி, கள்ளக்காம்பட்டி.

சினிமாக்களில் கேரட், ஆரஞ்சு, மக்காச் சோளங்களைப் பல்லாயிரக்கணக்கில் பரப்பி, அவற்றின் மீது நடிக, நடிகையர் செருப்புக் கால்களுடன் நடனமாடுகிறார்கள். அவை பிறகு என்னவாகின்றன?

சினிமாவில் அப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது நானும் உங்களைப் போலக் கவலைப்படுவது உண்டு. மிதிப்பதற்கு முன்பு புதுச் செருப்புகளையாவது ஹீரோ, ஹீரோயின் அணிந்துகொள்கிறார்களா, பிற்பாடு அந்தக் காய்கறிகளை நீரில் அலம்புகிறார்களா என்றெல்லாம் தெரியவில்லை!

மார்க்கெட்டுக்குப் போய், பிறகு யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் அந்தக் காய்கறிகள் வரலாம். 'இந்த மக்காச்சோளத்தை இந்த ஹீரோயின் மிதித்தது' என்று குறிப்பாக அதன் மீது 'லேபிள்' ஒட்டினால் ரொம்பத் தீவிர ரசிகர்கள் வேண்டுமானால் கண்ணில் ஒற்றிக்கொண்டு சாப்பிடலாம். மற்றவர்கள்?! மத்திய விவசாய மந்திரி இந்த மாதிரிக்காட்சி களுக்குத் தடை விதித்தால்கூட நல்லது!


தெ.ம.ஸ்வர்ணா, நாகர்கோவில்-3.

கைச்சுவைக்கு என்று இந்தக் காலத்தில் பத்திரிகை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை இருப்பதைப் போன்று, மன்னர் காலத்தில் வாழ்ந்த மக்கள் நகைச்சுவைக்காக ஏதாவது ஏற்படுத்தி இருந்தார்களா? அப்படி இருந்தால் அதை நகைச்சுவையுடன் விளக்கவும்!

வேதங்களே காது வழியாக ஓதப்பட்டபோது, ஜோக்குகள் அப்படி வந்திருக்காதா? மன்னர்கள் அதற்காகவே காமெடியன்களைத் தர்பாரில் நியமித்து இருந்தார்கள். தவிர, தெருக் கூத்துகளில் ஜோக் விஷயத்தில் புகுந்து (அத்துமீறிக்கூட) விளையாடுவார்கள்!


ஹாய் மதன்-கேள்வி பதில்
'ஃபீனிக்ஸ்' பழனி, கோயம்புத்தூர்-3.

ந்திய ஜனாதிபதி விடுமுறை எடுக்கலாமா? (இதுவரை யாரேனும் லீவ் லெட்டர் கொடுத்து இருக்கிறார்களா?)

லீவ் லெட்டரை ஜனாதிபதி யாருக்குக் கொடுப்பார்? தனக்குத்தானே கொடுத்துக்கொள்ள வேண்டியதுதான். உண்மையில் பதவிக் காலம் முழுவதுமே நம்ம ஜனாதிபதிக்கு விடுமுறை மாதிரிதான். விடுமுறையை இன்னும் ஜோராகக் கொண்டாட வேண்டும் என்றால், இருக்கவே இருக்கிறது வெளிநாட்டுப் பயணம்!


மஞ்சு வாசுதேவன், நவி மும்பை.

டுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள், பிறர் தங்களுக்கு அட்வைஸ் செய்தால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது இல்லையே, ஏன்?

அட்வைஸ் என்பது உதை மாதிரி. மற்றவர்களுக்குத் தரலாம். வாங்கக் கூடாது!


ஹாய் மதன்-கேள்வி பதில்
சிவபாரதி, சிதம்பரம்.

'வெட்கித் தலை குனிந்தான்...' 'அவளுக்கு வெட்கத்தால் முகம் சிவந்து போனது'-இரு வெட்கங்களுக்கும் மூளை எவ்விதம் கட்டளை இடுகிறது. இதுவும் ஒருவகை அனிச்சைச் செயல்தானே?

ன்று-எதிராளியை நேரில் பார்க்க முடியாமல், அவமான உணர்வில் தரையைப் பார்ப்பது. வெட்கத்தால் முகம் சிவப்பது அடியோடு வேறு வகை. ஒரு காலத்தில் பெண் பார்க்கப் போகும்போது வேண்டும் என்றே எசகுபிசகாக ஜோக் அடிப்பார்கள். பெண்ணின் முகம் சிவந்தால் அவள் கன்னி கழியாதவள் என்று முடிவு கட்டப்படும். உடலிலேயே மென்மையான பகுதி கன்னம். அங்கே ரத்தம் அதிகம் பாய்ந்தால் உடனே சிவப்பது கண்கூடாகத் தெரிகிறது. கோபத் தால் சிவப்பது வேறு. அப்போது மொத்தமாகச் சிவக்கும். வெட்கம் என்றால் கன்னத்தின் மையத்தில் இருந்து சிவப்பு பரவும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் ஸினோரா டொஃபானா என்னும் மேக்கப் சாதனங்கள் விற்கும் பெண்மணி, பெண்களின் கன்னத்தைச் சிவக்கவைப்பதற்கு என்றே ஸ்பெஷல் க்ரீம் ஒன்றைத் தயாரித்தார். பிரமாத விற்பனை! அந்த க்ரீமில் விஷம் கலந்து இருக்கும். கணவனை (அல்லது காதலனை) க்ளோஸ் பண்ண முடிவு எடுக்கும் பெண்கள் அதைத் தடவிக்கொண்டு தழுவலில் ஈடுபடுவார்கள். கன்னத்தில் தொடர்ந்து முத்தம் கொடுக்கும் கணவன்(அல்லது காதலன்) கொஞ்ச நேரத்தில் ஆள் அவுட்!

ஹாய் மதன்-கேள்வி பதில்

 
ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்