Published:Updated:

ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்

ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்


08-07-09
ஆலயம் ஆயிரம் காஷ்யபன் ஓவியம்: ஜெ.பி., படம்:பொன்.காசிராஜன்
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்

க்கல் தொழிலை மேற்கொண்டு இருந்த அயன் அகங்கார மேலீட்டால், அரனைப் பகைத் துக்கொள்ள, அவனுக்குப் பாடம் கற்பிக்கப் பர மேஸ்வரன் அயனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தான்.

பஞ்சமுகப் பிரமன் நான்முகனானதோடு, படைத்தல் தொழிலின் ரகசியத்தையும் இழந்தார்.

அக்கணத்தோடு அகங்காரம் தொலைத்து, வங்கக் கடலின் கரையோரம் கயிலைநாதனைப் பிரதிஷ்டை செய்து, பறிக்கப்பட்ட தனது படைத்தல் தொழிலைத் தனக்கே அருளுமாறு வேண்டி தவத்தில் ஆழ்ந்தார்.

பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, கபால ஈஸ்வரனாகக் காட்சி அளித்த பரமனும், பிரமனின் பிழை பொறுத்து, ஆக்கல் தொழிலை அவருக்கு அருளினான். அயன் பிரதிஷ்டை செய்த லிங்கத்திலேயே கபாலீஸ்வரனாக எழுந்துஅருளி அண்டியவருக்கு அருள்பாலிக்கத் தொடங்கினான்.

அதன்பின், ஒரு சமயம் அன்னை உமையவள் அகிலாண்டேஸ்வரனைப் பிரிய நேரிட்டது. பிரிவினால் பெருந்துயர் அனுபவித்த அன்னை, மயில் வடிவம் தாங்கி கபாலீஸ்வரன் உறையும் தலம் சேர்ந்து, அங்கிருந்த புன்னை மரத்தடியில் புன்னை வன நாதரைப் பிரதிஷ்டை செய்தாள்.

இமைப்பொழுதும் நீங்கா நினைவுடன், இறைவனைத் தொழுது தவம் இயற்றினாள். ஈசனும் மனம் இரங்கினான். தன்னில் ஒருபாகம் அளித்துத் தன் ஆலயத்திலும் இடம் அளித்தான். மயில் உருவில் அன்னை மகேசனைத் தொழுத தலம் மயிலை என்றாகியது.

தரும மிகு சென்னையின் மையத்தின் மயிலாப்பூர் என்று அழைக்கப்படும் புராதனமான திருமயிலைத் திருத்தலம் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பல்லவர்கள் இத்தலத்தில் இருந்த பழைய ஆல யத்தைக் கற்றளியாகக் கட்டினர்.

அந்த ஆலயம் கடல் சீற்றத்தால் பொலிவிழந்து போக, விஜயநகர மன்னர்கள் தற்போதைய ஆலயத்தை300 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கட்டினர்.

கிழக்கு வாயிலை அழகிய வண்ணச் சுதைச் சிற்பங்கள் கொண்ட 120 அடி உயர ராஜகோபுரம் அலங்கரிக்கிறது.

உள்ளே நுழைந்தவுடன் எதிர்கொள்பவர் நர்த்தன கணபதி. அவருக்கு இடதில் நவக்கிரகங்களின் சந்நிதியும் சோமசுந்தரேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளன.

கணபதிக்கு வலதுபுறம் அண்ணாமலையாரும்,உண்ணா முலை அன்னையும் எழுந்தருளி அன்பர்களுக்கு ஆசி வழங்குகிறார்கள்.

ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்

தென் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி. வாகனமான மயில் அவரை எதிர்கொண்டு நிற்க, கருவறையில் சிங்கார வேலரையும், உடன் உறையும் வள்ளி, தேவசேனாவையும் கண் குளிரத் தரிசிக்கலாம்.

ஆலயத்தின் மேற்கு வாயிலுக்கு வெளியில்பிரமாண்ட மான தெப்பக் குளம் அமைந்துள்ளது. உள்ளே கொடி மரம். பலி பீடம். நந்தி தேவர்.

மேற்கு நோக்கி அமைந்த கருவறை. அப்பரும் திருஞான சம்பந்தரும் திருவடிவைத்த இந்தக் கருவறை யில் ஆதிகுருவாக விளங்கும் அருளாளன் உருவங்கள் கடந்த சிவலிங்கமாகக் காட்சி தருகிறார்.

அடி, முடி அறிய முடியாத ஜோதி உருவாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து, தேவர்களும் முனிவர்களும் தேடித் தேடித் துதிக்கும் பரமனாக இருந்தாலும், பிட்டுக்கு மண் சுமந்த பித்தனல்லவா இவன்? அதனால் காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கு பவருக்குக் காட்சிக்கு எளியனாய் காணக் கிடைக் கிறான். கோஷ்டத்தில் துர்கை, தட்சிணாமூர்த்தி மற்றும் செல்வகணபதி ஆகியோர் எழுந்தருளி உள் ளார்கள்.

கருவறை உள்பிராகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் மூலவ மற்றும் உற்சவ மூர்த்திகளைத் தரிசிக்கலாம்.

ஈசனுக்கு வலது புறம் தெற்கு நோக்கிஅமைந்து உள்ளது காக்கும் அன்னை கற்பகாம்பாளின் சந்நிதி. அன்னை நின்ற திருக்கோலத்தில்அருள் பாலிக்கிறாள்.

கேட்டவருக்குக் கேட்டவற்றை வாரி வழங்கும் கற்பகத் தருவான அன்னையின் கருணை நிறை கண் களைக் கண்டவர்களுக்கு, அவள் அருளைத் தவிர வேறு எதையுமே யாசிக்கத் தோன்றாது.

மேற்கு மதிலின் வடக்குப் பகுதியில் ஞானசம்பந்தரையும், அங்கம்பூம்பாவையையும் ஒரே சந்நிதியில் காணலாம்.

அங்கம்பூம்பாவை யார்?

அவள் சிவநேசன் என்பாரின் செல்வப் புதல்வி. கபாலீஸ்வரனுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டு இருந்த அவள், ஞானசம்பந்தரைப் பற்றி அறிந்தது முதல் அவரையே மணாளனாக அடைய அவாக் கொண்டாள்.

விதி வேறுவிதமாக விளையாடியது. அரவம் தீண்டி அங்கம்பூம்பாவை ஆருயிர் துறந்தாள். சிவநேசரோ, மகளின் எலும்புகளை ஒரு குடத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். ஒரு சமயம் மயிலை வந்த ஞானசம்பந்தர் அங்கம்பூம்பாவை பற்றி அறிந்து, அவளது குருத்துஎலும்புகள் உள்ள குடத்தை ஆலயப் பிராகாரத்தில் இடச் செய்தார்.

பின்னர் அவர் பூம்பாவைப் பதிகம் பாட, அங்கம்பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். ஞானத் தந்தையான சம்பந்தரைப் பணிந்து, அவர் ஆணைப்படி மகேசன் தொண்டு புரிந்து மண்ணுலகம் நீங்கினாள்.

வடக்குப் பிராகாரத்தில் தலவிருட்சமான புன்னை மரத்தையும், புன்னைவன நாதரையும் மயில் வடிவில் பூஜை செய்யும் மகாசக்தி உமையவளையும் தரிசிக் கலாம்.

ஈசானிய மூலையில், தனிச் சந்நிதியில் சனீஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார். ஆலயத்தில் அனுதினமும்ஆறு கால பூஜை! தேவாரத் தலங்களில் ஒன்றாக, பெருமைகள் பலகொண்ட இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் நாயன்மார்கள் அறுபத்து மூவருக்கும் அமர்க்களமான திருவிழா நடைபெறுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் கூடி தரிசித்து ஆனந்திக்கும் அற்புதத் திருவிழா இது.

கற்பகாம்பாளும் கபாலீஸ்வரனும் ஒன்றாக எழுந்தருளி அருள்பாலிக்கும் மயிலை, கயிலைக்கு ஒப்பானது.

மயிலையே கயிலை! கயிலையே மயிலை!

ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
 
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
-தரிசிப்போம்...
ஆலயம் ஆயிரம் - கயிலையேயான மயிலையில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்