Published:Updated:

ஹாய் மதன்-கேள்வி பதில்

ஹாய் மதன்-கேள்வி பதில்


08-07-09
கேள்வி-பதில், ஹாய் மதன்
ஹாய் மதன்-கேள்வி பதில்
ஹாய் மதன்-கேள்வி பதில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
விலங்கு நம்பர் 1
ஹாய் மதன்-கேள்வி பதில்

சிவபாரதி, சிதம்பரம்.

ஈகோ இல்லாத மனிதன்?

ஹாய் மதன்-கேள்வி பதில்

ஈ இல்லாத ஊர்கூட இருக்கலாம். ஈகோ இல்லாத மனிதன் கிடையாது. இங்கே ஈகோ என்றால், கர்வம் என்று சுலபமான அர்த்தம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஈகோ என்றால், 'நான் உணர்கிற நான்' என்றார் ஃப்ராய்டு. இதுதவிர, உள்ளுணர்வு சம்பந்தப்படும் Id என்பதும், சிந்தித்து (கடமை உணர்வு, குற்ற உணர்வு போன்ற விஷயங்களை) முடிவுகட்டும் Super Ego என்பதும் மொத்தமாகச் சேர்ந் ததுதான் மனிதன். இந்த எல்லாவற்றுக்குள்ளும் உள்ளே நமக்கே தெரியாமல் மறைந்து, பொதிந்துகிடப்பது Self (ஆன்மா என்றும் சொல்லலாம்). Self-ஐப் புரிந்துகொள் ளத்தான் ஞானிகளும் அலைகிறார்கள். ஆஸ்கர்வொயில்டு அமெரிக்கா சென்றபோது, விமான நிலையத்தின் கஸ் டம்ஸ் அதிகாரிகள் அவரிடம்,'டிக்ளேர் பண்ண ஏதாவது கொண்டுவந்திருக்கிறீர்களா' என்று கேட்டார்கள். பதிலுக்கு வொயில்டு புன்னகையுடன், 'என் ஜீனியஸ் மட்டும்!' என்றார். இது (அவர் சொன்னது உண்மையென்றாலும்கூட) வேறு வகை.

பீட்டில்ஸ் பாப் இசைக் குழுவினர், 'நாங்கள் யேசுநாதரை விடப் புகழ்பெற்றுவிட்டவர்கள்!' என்றார்கள்! இது எல்லாம் பரவலாக கர்வம் என்கிற அர்த்தத்தில் நம் பயன்படுத்துகிற ஈகோ.

ஜி.மாரியப்பன், தேனி.

சிங்கம், புலி, சிறுத்தை, யானை, வரிக் குதிரை, மான், ஒட்டகச்சிவிங்கி - இந்த ஏழு மிருகங்களில் எது மிகவும் அழகானது? எது மிகவும் ஆபத்தானது?

ஹாய் மதன்-கேள்வி பதில்

விநாயகரே யானை ரூபத்தில் இருப்பதால், பெரும்பாலா னவர்களுக்கு யானைதான் முதல் அழகு. ஒட்டகச்சிவிங்கி, ஸல்வடோர் டாலி ஓவியங்களைப் போலத் தனி அழகு. வரிக்

குதிரை ஏதோ ஹைவேஸ் டிபார்ட்மென்ட் தயாரித்தது போல இருக்கிறது. அழகிய பெண்ணோடு இருக்கும்போது மானும் அழகு. சிங்கத்தில் ஆண் மட்டும் கம்பீர அழகு. புலியின் பக்கத்தில் சிறுத்தை நின்றால் சேவகன் மாதிரி இருக்கிறது. ரசனை மிகுந்த ஆர்ட் டைரக்டர்கள் உருவாக்கியது போலிருக்கிறது புலியின் (புலிக்கே செகண்ட் பிரைஸ்!) அழகு. இவற்றில் சிறுத்தைதான் ஆபத்து. மரத்தின் மீது ஏறினாலும்கூட, மனிதனால் தப்பிக்க முடியாது!

ஹாய் மதன்-கேள்வி பதில்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

இப்போதெல்லாம் டூயட் பாடல்களில் கதாநாயகன், நாயகியின் முகங்களை க்ளோசப்பில் இயக்குநர்கள் காண்பிக்க யோசிக்கிறார்களே?

நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு காலத்தில் டூயட் பாடலின்போது, அருவி, மலைகள் போல 'ஸீனரி'யைக் காட்டுவதிலேயே கேமராமேன் குறியாக இருப்பார். யார் ஹீரோ, ஹீரோயின் என்பதைப் புரிந்துகொள்ளவே எரிச்சலுடன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும்! இப்போது எவ்வளவோ தேவலை. ('க்ளோசப்'பில் சிலரைப் பார்க்கச் சகிக்கவில்லை என்றால், கேமராமேன் பாவம், என்ன பண்ணுவார்!)

ஆர்.ராஜலட்சுமி, ஹூப்ளி.

அரசர்கள் வரும்போது 'பராக் பராக்!' என்று (சினிமா மற்றும் நாடகங்களில்கூட) சொல்கிறார்களே, 'பராக்' என்பது தமிழ் வார்த்தையா?

'பராக்' என்றால் 'கவனம் செலுத்து' என்றும் அர்த்தம் உண்டு('உஷார்! அரசர் வருகிறார், கவனமாக இருங்கள்!'). 'பராக்கிரம' என்பதன் சுருக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம் (அதாவது, வீரமும் வல்லமையும் மிகுந்த!) ஆனால், ஜாக்கிரதையாக 'க்'கோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு அரசர் வரும்போது சேவகன் 'பராக்கு!' என்று முழங்கித் தொலைக்க, அப்போது அரசரும் எங்கேயோ பராக்குப் பார்த்துக்கொண்டு இருக்க, சேவகனுக்கு வேலை போய்விட்டது! (திருக்குறளில்கூட 'கவனமின்மை' என்கிற அர்த்தத்தில் 'பராக்கு' என்கிற வார்த்தை வருகிறது.)

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் குணம் பெண்களுக்கு ஆதி காலத்தில் இருந்தே இருந்திருக்குமோ?

இருந்திருக்கலாம்! காரணம், அவளுடைய முதலீடு (investment) ரொம்பப் பெரிசு. கணவனைத் தேர்ந்தெடுத்து அவனுடன் நம்பிக்கையோடு கூடி, 10 மாதம் சுமந்து, குழந்தை பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கி... பெரிய பொறுப்பு அவளுக்கு இருப்பதால் 'பொசஸ்ஸிவ்' ஆகவும், சந்தேகத்துடனும் இருக்கிறாள். வீட்டுக்கு இரவில் திரும்பி வந்த கணவனின் உடையை (ஏதாவது பெண்ணின் தலைமுடி ஒட்டிக்கொண்டு இருக்கிறதா என்று) பரிசோதித்த மனைவி, அப்படி எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் கணவனிடம், 'மொட்டை அடித்துக்கொண்ட கேர்ள் ஃப்ரெண்ட் யாராவது உங்களுக்கு இருக்காளாக்கும்' என்று கேட்டாளாம்!

காவ்யா ரவிகுமார், செங்கல்பட்டு.

நிஜ மகிழ்ச்சி என்பது என்ன?

ஒருவர் உங்களிடம் 'இது ரொம்ப கஷ்டமானது. உங்களால் இதைச் செய்ய முடியாது!' என்கிறார். அதை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து காட்டுகிறீர்கள். அப்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் நிஜ மகிழ்ச்சி!

க.குமரேசன், சென்னை-49.

மணமேடையிலேயே மணமகன் மணமகளுடன் பேசலாமா?

ஓலைச் சுவடியில் இருந்து ஒரு ஓலையை எடுத்து எழுத்தாணியால் நீங்கள் எழுதி அனுப்பியிருக்க வேண்டிய கேள்வி இது! எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க? மணமேடையிலேயே பேசி, சிரித்து, கிள்ளி, கிச்சுகிச்சு மூட்டி, வாக்குவாதத்தில் இறங்கி, சண்டை போட்டுக்கொண்டு, அங்கேயே விவாகரத்து பண்ணுகிற அளவுக்கு இந்தக் காலத்துப் பசங்க முன்னேறிட்டாங்க! என்னங்க, இப்பப் போய் இப்படியரு கேள்வி?!

 
ஹாய் மதன்-கேள்வி பதில்
-
ஹாய் மதன்-கேள்வி பதில்