ஆப்பிளின் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயக்கப்படும் ஐ-பாடின் (மியூஸிக் பிளேயர்) புதிய மாடல்கள் வெளியிடப்படும் நாளில், மக்கள் கடை வாசலில் தூக்கம் துறந்து நிற்கும் அளவுக்கு ஐ-பாட் பிரபலம் அடைய, அதுவரை 'ஆப்பிள் மேன் இண்டாஸ்' என்றிருந்த பெயரை ஜஸ்ட் 'ஆப்பிள்' என மாற்றிக்கொண்டு, கணினி நிறுவனமாக இல்லாமல், ஸ்டைலான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளத் தலைப்பட்டது ஆப்பிள்.
மைக்ரோசாஃப்ட் போலவே இணையத்தின் திறந்த தன்மை (Openness) அச்சுறுத்தலாக இருந்தாலும், மிகத் திறமையாகத் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது ஆப்பிள். உதாரணத்துக்கு, ஐ-பாட் சாதனத்தில் இசை கேட்க வேண்டுமானால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் (i-Tunes) மென்பொருள் மூலமாக மட்டுமே தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இணையத்தின் வழியாக ஐ-டியூன்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, பாடல் களை உங்களுக்கு விற்பது மட்டுமல்லாமல், எத்தனை ஐ-பாடில் நீங்கள் பாடல்களைக் கேட்கலாம் என்பது வரை கட்டுப்படுத்த முடியும். என்ன பாடல்களை, எத்தனை முறை கேட்டுள்ளீர்கள் என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியும்.
ஐ-பாடின் இமாலய வெற்றி ஆப்பிளின் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், பெருவாரியான மக்களுக்கான (Mass market) கன்ஸ்யூமர் சாதனங்களைத் தயாரித்து, வெற்றி பெறும் நம்பிக்கையையும் கொடுத்தது. அடுத்து காத்திருந்தது மொபைல் போன் மார்க்கெட். கம்ப்யூட்டர் கம்பெனியான ஆப்பிளால், அலைபேசி சாதனத் தயாரிப்பு நிறுவனமாக வெற்றி பெறுவது கடினம் என்ற சந்தேகத்தைத் தகர்த்தது, AT-T யுடனான அதன் பார்ட்னர்ஷிப். இந்தக் கூட்டணியின் i போனும் ஹிட்.
ஆனால், இந்த பார்ட்னர்ஷிப் ஜோடி செய்யும் சேட்டைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்போதும் இல்லாத வகையில், மொபைல் சாதனம் ஒன்றைப் (iPhone) பயன்படுத்த குறிப்பிட்ட அலைபேசி நிறுவனத்தைத்தான் (AT-T) நாட வேண்டும் என வற்புறுத்திய ஒரே நிறுவனம் ஆப்பிள். டெக் வல்லுநர்கள் சிலர் இணைந்து கொண்டுவந்த jail break என்ற மென்பொருள் ஐ-போனின் AT-T வுடனான எக்ஸ்க்ளூஸிவ் இணைப்பைத் தகர்த்து, ஐ-போன் உரிமையாளர்கள் எந்த அலைபேசி சேவை நிறுவனத்தையும் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. 'இது தேசத்தின் பாதுகாப்பையே குலைக்கும் விஷயம். இதைப் பயன்படுத்தித் தீவிரவாதிகள் |