Published:Updated:

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

Published:Updated:
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
இணைப்பு - வில்லன் விகடன்
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கு, கொள்ளை வில்லன்கள் பள்ளிகொள்ளும் பூமி. பூலான் தேவிதான் ஆரம்பம். அடுத்தடுத்த வில்லன்களின் அணிவகுப்பு இது.

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

தத்துவா: 35 வருடங்களாக போலீசுக்குத் தண்ணி காட்டியவன். தத்துவா மீது 200 பிளஸ் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. உ.பி-யின் 'புண்தில்கண்ட்' பகுதியின்

உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...

ராஜா. ராபின்ஹூட் போல கொள்ளைப் பணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்தான். தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துத் தேடியது போலீஸ். இரண்டு வருடங்களுக்கு முன் 400 அதிரடிப்படை போலீஸார் தத்துவாவைச் சுற்றி வளைத்தார்கள். இரண்டு நாள் துப்பாக்கிச் சண்டையின் முடிவில் தத்துவா வைச் சுட்டுக் கொன்றது போலீஸ்!

நிரூபய் குஜ்ஜார்: இந்த உ.பி. வீரப்பனின் டீம் மெம்பர்கள் 60 பேர். ஆனால், 80 பேரோடு சுற்றுவான் குஜ்ஜர். மீதி 20 பேர் கடத்தப்பட்டவர்கள். கிரானைட், ஏகே-47 என குஜ்ஜர் குரூப் ஹைடெக்காக இருக்கும். ஆனால், குஜ்ஜரின் போட்டோகூட உ.பி. போலீஸிடம் இல்லாமல் இருந்தது. வீரப்பன் ஸ்டைலில் நிருபர்களைக் காட்டில் சந்திப்பான். எமர்ஜென்ஸி பேட்டி வேண்டும் என்றால், மொபைலிலேயே பேசி விடுவான். கடைசியில் மொபைல் நெட்வொர்க்கை வைத்தே குஜ்ஜரைக் கண்டுபிடித்துக் காலி பண்ணியது உ.பி. போலீஸ்!

பப்ளு ஸ்ரீவத்சவா: இந்த லக்னோ யுனிவர்சிட்டி மாணவனைத் திசை மாற்றியது அரசியல் சகவாசம். நிறைய வளர்ந்து மும்பை தாதா தாவூத்தின் கைகளில் ஒருவன் ஆனான். ஹவாலா, போலி பாஸ்போர்ட், ஹெராயின் கடத்தல் என பப்ளு மேல் இன்டர்நேஷனல் கேஸ்கள் உண்டு. 17 வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு, இப்போது இந்திய சிறையில் இருக்கிறான். 'ஹவாலா நெட் வொர்க், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு' என்று தொழில் ரகசியத்தை விளக்கி பப்ளு எழுதிய புத்தகத்தின் தலைப்பு 'நிறைவேறாத கனவு!'

மொகீந்தர்சிங் பாந்தர்: ஒரு குழந்தையின் மரணத்துக்காக போலீஸ் இவனது வீட்டுக்கு விசாரிக்கப் போனதுதான் திருப்புமுனை. அருகே உள்ள சாக்கடையில் இருந்து 35 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டன. குழந்தைகளை செக்ஸ்ரீதியாகத் துன்புறுத்திக் கொலை செய்து புதைத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். 'விபசாரிகளைக் கொன்று அந்தப் பிணங்களுடன் உடல்உறவு வைத்துக்கொள்வான்', 'பெண் சடலங்களின் பாகங்களை அறுத்து ஃப்ரை பண்ணி (அடப் படுபாவி!) சாப்பிடுவான்', 'குழந்தைகளின் உடல் உறுப்புகளைச் சமைத்துச் சாப்பிடுவான்' என்று அவனது வேலைக்காரன் சுரேந்தர் கோலி மீதும் திகில் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இந்த இருவரின் மீதான தீர்ப்புக்கு நாடே காத்திருக்கிறது!

 
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
-ஆர்.ஷஃபி முன்னா, பவண்குமார்
உயிரைக் கொன்று... பிணத்தைத் தின்று...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism