கம்ப்யூட்டர் வைரஸ் மிரட்டல்கள் எல்லாம் ஜுஜுபி. ஹேக்கர்ஸ் எனப்படும் கில்லாடி கிரிமினல்கள்தான் இன்டர்நெட்டின் நிஜ வில்லன்கள். இணைய பாதுகாப்பு விதிகளில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, ரகசியங்களைத் திருடி காசாக்குபவர்கள்தான் ஹேக்கர்கள்.
அவர்கள் உங்கள் ஆன்லைன் பேங்க்கிங் பாஸ்வேர்ட் கண்டுபிடித்து அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை ஸ்வாகா செய்வார்கள். இருந்த இடத்தில் சூடாகக் காபி குடித்தபடியே ராணுவ கம்ப்யூட்டர் ரகசியங்களைத் திருடுவார்கள். நெட் சாட்டில் புகுந்து உங்கள் காதலியிடம் உங்களைப் பற்றி தப்புத்தப்பாக வத்திவைப்பார்கள்.
'உலகப் புகழ்பெற்ற' ஹேக்கர்கள் சிலரைப்பற்றி இங்கே...
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ரேடியோ ஸ்டேஷனின் பரிசுப் போட்டியில் சிம்பிளான கேள்விக்குப் பதில் சொன்னால் பரிசு போர்ஷே கார். ஆனால், நீங்கள் 102-வது நபராக போன் செய்து சரியான பதில் சொன்னால்தான் பரிசு. கெவின் பௌல்சனுக்கு போன் நெட்வொர்க் அத்துப்படி. போட்டி நாளன்று, லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் போன் நெட்வொர்க்கை ஹேக் செய்து 101 நபர்களைப் பேசவிட்டார். 102-வது ஆளாக இவர் ரிங் அடித்து பதில் சொல்லி பரிசு பெற்றார். பிறகு, |