பிடியில் இருந்து எப்படித் தப்புவது? வெரிசிம்பிள். வீட்டு வாசலில் ஒரு மூட்டை நெல்லையோ, அரிசியையோ அல்லது குறைந்தபட்சம் மணலையோ வைக்க வேண்டுமாம். லூகாரூ, வீட்டுக்கு முன் மூட்டையைப் பார்த்தவுடன் பிரித்து ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பிக்குமாம். எண்ணி முடிக்கும் முன் சூரியன் வந்துவிடுவான். 'அடடா! ஏமாந்துட்டோமே' என லூகாரூ ஓடிவிடுமாம். அட! முட்டாள் லூகாரூ, இப்படியா ஏமாறுவே?
அஸ்மோதேயுஸ்
நரகத்தில் உள்ள சாத்தான்களின் தலைவன். நரகத்தில் ஏழு சாத்தான் மன்னர்கள் உண்டாம். ஒவ்வொருவருக்கும் பெருமை, பொறாமை, காமம் என ஒவ்வொரு டிபார்ட்மென்ட். அஸ்மோதேயுஸின் துறை, காமம். இவனுடைய வேலை மக்களின் காம ஆசையைத் தட்டி எழுப்புவது. ஆசையைத் தூண்டி மக்கள் தப்பு செய்தால் இவனுக்கு வெற்றி. அவர்கள் எல்லாம் கடைசியில் இவனுடைய கட்டுப்பாட்டில் உள்ள இரண்டாவது நரகத்துக்கு வந்து சேர்வார்களாம். பருவ காலம் போல, இந்த சாத்தானுக்கும் செழிப்பான காலம் ஒன்று உண்டாம். அது நவம்பர் மாதமாம். பின்னே... அது குளிர் அடிக்கிற மாசமாச்சே!
|