'நண்பனின் மனைவி எனக்கும் மனைவியே' என்ற கேனத்தனமான லாஜிக் அடிப்படையிலான கள்ளக்காதல்கள்தான் பல குடும்பங்களைச் சீரழிக்கின்றன. ஒவ்வொரு கள்ளக்காதல் செய்திக்குப் பின்னாலும் சிதைந்துபோன சிலரது வாழ்க்கையும் நண்பனே வில்லனாக மாறிய துயரமும் புதைந்துகிடக்கிறது. அப்படி ஒரு நிஜக் கதை இது...
''கோட்டூர்புரத்துல எங்க மாமா வீட்டுக்குப் போகும்போதுதான் அவளைப் பார்த்தேன். ரம்யான்னு பேரு. அழகு, குணம், துறுதுறுப்பு எல்லாமும் நிரம்பிய தேவதை. ரெண்டு பேரும் ஆசை தீரக் காதலிச்சோம். எதிர்ப்புகளை மீறிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு வருஷம் கழிச்சு மகன் பொறந்ததும் அவங்க வீட்ல ராசியானாங்க. நான் ஆபீஸ் போனதும் குழந்தையை வெச்சுக்கிட்டு சிரமப்படுறாளேன்னு அவங்க அம்மா வீட்டுக்குப் பக்கத்துலயே வீட்டை மாத்தினோம். அங்கே பக்கத்து வீட்டுக்காரன் ரமேஷ். எங்க காதல் கல்யாணத்துக்குக் கொஞ்சம் உதவி பண்ணியிருந்தான். சொந்த அத்தைப் பெண்ணையே கல்யாணம் பண்ணியிருந்தான். ஆனா, அவனுக்குக் குழந்தை இல்லை.
என் மனைவியை வாய் நிறைய 'சிஸ்டர்'னு கூப்பிடுவான். ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வந்து எதையாவது பேசிட்டு காபி சாப்பிட்டுப் போவான். நான் இல்லாதப்பவும் இந்தப் பழக்கம் தொடர ஆரம்பிச்சிது. மனைவிகிட்ட கேட்டப்போ 'என்னைச் சந்தேகப்படுறீங்களா'னு அழுது தீர்த்தா. அடுத்த ரெண்டு மாசத்துல திடீர்னு ஒருநாள் குழந்தையை ஸ்கூல்ல கொண்டுவிட்டுட்டு ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டாங்க.
|