Published:Updated:

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...
இணைப்பு - வில்லன் விகடன்
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

ண்ணில் மண்ணை மட்டுமல்ல... கொஞ்சம் மிளகாய்ப் பொடியையும் சேர்த்துத் தூவி இன்று வரை இன்டர்நேஷனல் போலீசுக்கே போக்குக் காட்டும் மோஸ்ட் வான்டட் வில்லன் கள் லிஸ்ட் இது!

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

தொக்கதொக்கோனோவ்: பேர் மட்டுமல்ல... ஆளும் ஒரு மாதிரிதான். ரஷ்யாவைச் சேர்ந்த பக்கா பிசினஸ்மேன். இவனது பிசினஸ்? 'மேட்ச் ஃபிக்ஸிங்'! டி20, டேவிஸ் கப்பெல்லாம் லோ லெவல். ஒலிம்பிக்ஸ்தான் சார் ரேஞ்சுக்குப் பக்கத்தில் வரும். ஒலிம்பிக்ஸில் ரஷ்யா கோல்டு மெடல்களைஅமோ கமாக அள்ளும் என்பதால், பல ஸ்டார் பிளேயர்களைக் கைக்குள் வைத்திருந்தான். இவன் சொன் னால் மட்டுமே அவர்கள் ஜெயிப்பார் கள். ஹெராயின், ஏ.கே 47 கடத்துவது பார்ட் டைம் ஜாப். 2002-ல் ஒரு முறை அரெஸ்ட் ஆகி எஸ்கேப் ஆனான். இன்று வரை கண்ணாமூச்சி ஆடுகிறான்!

மெசினா டெனாரோ: கடந்த 16 வருடங் களாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளி! ரோலக்ஸ் வாட்ச், ரேபன் சன் கிளாஸ் என மாடர்ன் லுக்கில் இருக்கும் மெசினா 14 வயதில் முதல் கொலை செய்தான். தனது பரம்பரைத் தொழிலான மணல் கொள்ளையோடு எக்ஸ்ட்ராவாக ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கூலிக்குக் கொலை என்று எல்லா 'கலை'யிலும் கற்றுத் தேர்ந்தான். 93-ம் ஆண்டு இவன் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதியையே குண்டுவைத்துகுடும்பத் தோடு கொலை செய்தான். கொலைவெறியோடு தேடிக்கொண்டு இருக்கிறது போலீஸ்!

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

ஜோசப் கோனி: இடி அமீன் கோரதாண்டவமாடிய உகாண்டாவில் இருந்து வந்தவன். 'கடவுளின் பேரால் நாட்டுக்கு நல்லாட்சி கொடுக்கப் போகிறேன்!' என்று உகாண்டாவையே ரணகளம் ஆக்கியவன். இவன் ஆரம்பித்த 'கடவுளின் தற்காப்புப் படை'க்கு முதல் சிப்பாய் குழந்தைகள்தான். வாழிடங்களுக்குச் சென்று நாய்களைப் பிடிப்பது மாதிரி குழந்தைகளை வலைவீசிப் பிடிப்பான். பிடிபடும் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடக் கற்றுக்கொடுப்பான். பின்னர், அந்தக் குழந்தைகள் மூலமாகவே அவர்களது பெற்றோர்களைச் சுட்டுக் கொல்வான். இப்போது பல நாடுகளும் கோனியை 'மனித குலத்தின் எதிரி' என்று அறிவித்து உகாண்டா காடுகளில் தேடி வருகிறது.

அமீத் தவீல்: பிறந்தது இரான். வில்லத்தனம் பண்ணியது அமெரிக்காவில்! டெலி மார்க்கெட்டிங் என்று விளம்பரம் கொடுக்க, முதலீடுகள் குவிந்தன. அப்போதே ஒரு பில்லியன் டாலர்கள் பணத்தை மோசடி செய்தான். அமீத்துக்கு வல்லவன் அமெரிக் காவில் இருப்பான்தானே? அடியாளாக இருந்த ஒருவனே அத்தனை பணத்தையும் அபேஸ் பண்ணினான். அவனைப்

இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...

பிடிக்க அமீத் வியட்நாம் சென்றபோது அரெஸ்ட் ஆனான். கூவத்தை சொம்புக்குள் அடக்க முடியுமா? கனடா நாட்டுச் சிறை அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்து 2007-ம் ஆண்டு அமீத் தப்பித்துவிட்டான்!

கஸ்மேன்: கொலம்பியாவையே குத்த கைக்கு எடுத்த கொள்ளைக்காரன். போதை சாகுபடியில் அமோக மகசூல் செய்த விவசாயி. தற்காப்புக்காக ஹெலிகாப்டர், பீரங்கியோடு வலம் வந்தவன். மற்ற கோஷ்டியோடு இவன் போட்ட சண்டை ஒவ்வொன்றும் சின்ன போர். அமெரிக்கா, மெக்ஸிகோ, கொலம்பிய நாட்டு எல்லைகளில் நடந்த இந்த கோஷ்டி மோதலில் இயந்திரத் துப்பாக்கி, கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மோதலின் முடிவில் ரவுடிகள், போலீஸ், ராணுவத்தினர், பொதுமக்கள் சுமார் 15 ஆயிரம் பேர் செத்துப் போனார்கள். 2001-ம் ஆண்டு அமெரிக்க சிறையில் இருந்து தப்பித்தான் கஸ்மேன். ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டில் கஸ்மேனுக்கு 701-வது இடம் கொடுத்திருக்கிறது. ஊர் கூட்டிக் கொண்டாட முடியாமல் தலைமறைவாக இருக்கிறான் கஸ்மேன்.

 
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...
- வேல்ஸ்
இவர்களைப் பிடித்துக் கொடுத்தால்...