Published:Updated:

தலையில் ஆணி அடித்த தலைவன்!

தலையில் ஆணி அடித்த தலைவன்!

தலையில் ஆணி அடித்த தலைவன்!
இணைப்பு - வில்லன் விகடன்
தலையில் ஆணி அடித்த தலைவன்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையில் ஆணி அடித்த தலைவன்!
தலையில் ஆணி அடித்த தலைவன்!
தலையில் ஆணி அடித்த தலைவன்!
தலையில் ஆணி அடித்த தலைவன்!

ஹிட்லர், இடி அமீன்கள் மட்டுமல்ல... வரலாற்றையே நடுங்கவைக்கும் கொடூர வில்லன்கள் ஏராளம். சிலரைப்பற்றி மட்டும் இங்கே...

அந்திரேய் சிக்காட்டிலோ (Andrei Chikatilo)

ரஷ்ய எல்லையோர நாடான உக்ரைனில் 1936-ம் ஆண்டு பிறந்த சிக்காட்டிலோ இளமையில் தாழ்வு மனப்பான்மை கொண்ட சவலைப் பிள்ளை. அந்தத் தாழ்வு மனப்பான்மையே அவனை வேறு திசைக்குத் திருப்பியது. பதின்ம வயதில் தனக்கு ஆண்மை இல்லையோ என்ற சந்தேகத்தில் 9 வயதான சிறுமியைப் பாலியல் சித்ரவதை செய்தான். பிறகு திருமணம், குழந்தைகள் என நார்மல் வாழ்க்கையை முயற்சித்தாலும் அவனது வக்கிர மனம் அடங்கவில்லை. 78-ல் ஒரு சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கத்தியால் குத்திக் கொன்றான். அந்தக் கொலையும் அது தந்த திருப்தியும் அவனுக்குள் வெறியாக ஊறின. விளைவு, அந்த ஆண்டு மட்டும் இவனால் கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை ஏழு. பிறகு, கொன்று ரத்தம் பார்த்தால் மட்டுமே செக்ஸில் 'திருப்தி' அடையும் ஏடாகூட நிலையை எட்டினான்.

தலையில் ஆணி அடித்த தலைவன்!

இளம் பெண்களையும் சிறுவர்களையும் ஏமாற்றிக் கடத்தும் கலையில் தேர்ந்து, அவர்களைச் சித்ரவதை செய்து கொலை செய்வதில் இன்பம் கூடிக்கொண்டே போனதாம் இவனுக்கு. ஒரே வருடத்தில் சிறுவர்கள் உட்பட 15 பேர் மர்மமாக கொல்லப்பட்டனர். போலீஸ் குழம்பியது. சைக்கோவா, ஹோமாவா, சீரியல் கில்லரா என வகை பிரிக்க முடியாமல் தடுமாறியது. 1990-ல் இவன் சிக்கியபோது அவன் செய்த கொலைகள் உலகத்தையே நடுங்கச் செய்தது. மொத்தம் 53 கொலைகள் செய்திருப்பதை ஒப்புக்கொண்டான். 'நான் ஒரு அப்பாவி. என்னை விட்டுவிடுங்கள்' என்னும் இவனுடைய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 1992 பிப்ரவரி 14-ம் நாள் துப்பாக்கியால் பின் மண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டான்!

போல் பாட் (Pol pot)

கம்போடியாவில் பிறந்து கம்யூனிசம் பயின்ற போல் பாட்டுக்கு இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம். 'கம்பூசியன் கம்யூனிச இயக்கம்' என்ற பெயரில் கம்போடியாவின் ஆட்சியைப் பிடித்த இவன் சித்ரவதை, சித்தாந்த அடிப்படையிலானது!

'விவசாயிகளைத் தவிர, மற்ற அனைவரும் சோம்பேறிகள், வாழத் தகுதியற்றவர்கள்' என்று தீர்ப்பு எழுதினான். அரசுப் பணியாளர்கள், ஆலை முதலாளிகள், படித்தவர்கள், வியாபாரிகள் என அனைவரும் கேள்வி இல்லாமல் போட்டுத் தள்ளப்பட்டனர். மருத்துவமனைகள் மூடப்பட்டதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகூட இல்லாமல் 15 லட்சம் மக்கள் செத்து மடிந்தார்கள்.

தலையில் ஆணி அடித்த தலைவன்!

'எதிரிகளை அழிக்கிறேன்' என்ற பெயரில் இவன் ஆரம்பித்த S-21 என்னும் சித்ரவதைக் கூடத்தில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கிளைகள் வேறு! மக்களின் வாயில் மனித மலத்தைத் திணிப்பது, எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பது, தலையில் ஆணி அடிப்பது, கோழிகளைப் போல வரிசையாக மக்களின் கழுத்தை அறுத்துத் தண்ணீரில் போடுவது... என்பதெல்லாம் இவரது சித்ரவதைக் கூடத்தின் சில சாம்பிள்கள். அதிலிருந்து தப்பிய வான் நாத் என்பவர் சமீபத்தில் தான் தப்பிய திகில் கதையை உலகுக்கு வெளியிட்டார். மனித பிணங்களையும், புழு பூச்சிகளையும் தின்று அவர் உயிர் தப்பிய கதை பயங்கரத்திலும் பயங்கரம். 1998-ல் மர்மமாக செத்துப்போனான் இந்த போல் பாட்! அடுக்கடுக்கான மண்டை ஓடுகள் இவன் வெறிக்கு சாட்சி!

மாக்ஸ்மில்லன் ராபெஸ்பியர் (Maximilien Robespierre )

'தீவிரவாதம் இல்லாத அரசியல் ஆண்மை இல்லாதது. அரசியல் வாழ்க்கையில் படுகொலை செய்வது தவிர்க்க முடியாதது' என பேஜார் ஸ்டேட்மென்ட் விட்ட இவன், பிரெஞ்ச் நாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம்தான் பின்னர் புகழ்பெற்ற ஜகோபியன் கிளப் ஆனது. 1790-ல் ஜகோபியன் கிளப்பின் தலைவரான

தலையில் ஆணி அடித்த தலைவன்!

மாக்ஸ்மில்லன், தனது அரசியல் எதிரிகள் மட்டுமில்லாமல், தன்னை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் என அத்தனை பேரையும் கில்லட்டின் இயந்திரத்தில் வைத்து தலையைத் துண்டித்தான். இப்படி 10 மாதங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்தபட்சம் 40,000 என்கிறது வரலாறு. 1794-ல் கைது செய்யப்பட்டவனை எவ்வித விசாரணையும் இன்றி கில்லட்டின் அடியில் குனியவைத்து தலையை எகிறச் செய்தார்கள்!

தலையில் ஆணி அடித்த தலைவன்!

இரண்டாம் லியோபோல்ட் (Leopold II )

பெல்ஜியத்துக்கு வெளியே ஒரு காலனியை உருவாக்குவது இவன் லட்சியம். அதற்கு அவன் தேர்ந்தெடுத்தது காங்கோ நதிப் பிரதேசம். அங்கு வசித்த காங்கோ மக்களைத் தயவுதாட்சண்யம் இல்லாமல் மரம் வெட்டுகிற (அதுவே தப்பு!) ரேஞ்சுக்குக் கொன்றழித்தான். அங்கு பெல்ஜியம் மக்களைக் குடி அமர்த்தினான். காவு கொடுக்கப்பட்ட காங்கோ உயிர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல் என்று கணக்கு. பண்ணிய பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் 1909-ல் இயற்கையாக இந்தக் கொடுங்கோலன் செத்துப்போனதுதான் ரொம்பப் பெரிய வருத்தம்!

- சேவியர்

 
தலையில் ஆணி அடித்த தலைவன்!
தலையில் ஆணி அடித்த தலைவன்!