Published:Updated:

ஒளியும்.. ஒலியும்!

ஒளியும்.. ஒலியும்!

ஒளியும்.. ஒலியும்!

ஒளியும்.. ஒலியும்!

Published:Updated:

எல்லோரும் கரிஷ்மா ஆகலாம்!

##~##
துரையில் 'சொல்லிக்கோ அள்ளிக்கோ’ என்றால் அது... கரிஷ்மா. வைகை சேனலின் புயல் காம்பியர். மதுரை குலுங்கக் குலுங்க என்ன நிகழ்ச்சி நடந்தாலும், புதுக் கடைத் திறப்பு விழா என்றாலும், கரிஷ்மா அங்கே இருப்பார்.

 ''என் அப்பா, மதுரைக்காரர். அம்மா, கேரளா. நான் வளர்ந்தது, படிச்சது எல்லாமே கேரளாவில் தான். அப்பா ஆசைக்காக மதுரையில் செட்டில் ஆகிட்டோம். காலேஜ் படிக்கும்போது வைகை டி.வி-யில் காம்பியரா சேர்ந்தேன்.

நிறைய ஸ்டேஜ் ஷோ, லைவ் புரொகிராம் பண்ணிட்டு இருக்கேன். ஏழு வருஷமா தினமும் டி.வியில் பேசுவதால், என்னை ரசிகர்கள், அவங்க வீட்டுப் பெண்ணாவே பார்க்கிறாங்க. ஒரு முறை பெண்கள் தினத்தைக் கொண்டாட மதுரை ஆலுக்காஸ் நகைக்கடைக்கு நடிகை கௌசல்யா வந்து இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை லைவ்வா தொகுத்து வழங்கிட்டு இருந்தேன். பழங்காநத்தம் ரேவதிங்கிறவங்க கௌசல்யாவை விட்டுட்டு நேரா வந்து எனக்கு முத்துமாலை, முத்து வளையல்களை பரிசாக் கொடுத்துட்டுப் போனாங்க. எனக்கு வெள்ளை கலர் ரொம்பப் பிடிக்கும்கிறது வரைக்கும் தெரிஞ்சு, வெள்ளை முத்து மாலை வாங்கி இருக்காங்க. 'என் மேலே இவ்ளோ அன்பா?’ன்னு நான் ஆடிப்போயிட்டேன்.

ஒளியும்.. ஒலியும்!

ஒரு தடவை புரொகிராமில் 'எனக்கு மீன் ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னேன். அடுத்த மாசம் ஒரு நிகழ்ச்சியில்  கன்னியா குமரியில் இருந்து வந்திருந்தவங்க மீன் பொரிச்சு எடுத்து வந்து கொடுத்தாங்க.

விஸ்வநாதபுரம் ஏரியாவைச் சேர்ந்த பானுமதி அம்மா என் நிகழ்ச்சியின் ரெகுலர் காலர். ஒவ் வொரு வருஷமும் பொங்கல் வந்ததும் வீட்டுக்குக் கூப்பிட்டு சேலை எடுத்துக் கொடுத்து விருந்து வெச்சு அனுப்புவாங்க. இப்படி என் மேல், ஊரே பாசமா இருப்பதை நினைச்சா, பெருமையா இருக்கு.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், அடிக்கடி மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போவேன். அங்கே நிலவும் அமைதி ரொம்பப் பிடிக்கும். எப்பவும் பேசிட்டே இருக்கும் நான் அந்தக் கோயிலுக்குப் போனா மட்டும் அமைதி ஆகிருவேன். மத்தபடி எப்பவும் மனசுவிட்டுப் பேசுறது என் ஸ்டைல். மனசுவிட்டுப் பேசுங்க... எல்லாரும் கரிஷ்மா ஆகலாம்!''

- இரா.கோகுல் ரமணன்
படங்கள்: ஜெ.தான்யராஜு

'தலையாட்டி'க்குக் கல்யாணம்!

ஒளியும்.. ஒலியும்!

தூத்துக்குடியில் சக்கைப் போடு போடும் 'ட்ரிபிள் எஸ்’ டி.வி-க்கு வயது ஒன்பதே மாதம்தான். அதில்  'அன்பு வாழ்த்துக்கள்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நீதிராஜனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். சரி பாதி கேர்ள்ஸ் என்பது ஏரியா ஸ்பெஷல்.

நீதிராஜனுக்குப் பிடித்த விஷயம் சைக்கிளில் ஊர் சுற்றுவது. வேலை முடிந் ததும், வாக்மேனைக் காதில் மாட்டி சைக்கிள் பெடலைச் சுற்ற ஆரம்பித்து விடுவார். பார்க்கப் பாவமாக இருந்தாலும், வெஸ்டர்ன் டான்ஸில் பார்ட்டி பொளந்து கட்டுவார். ஆடலோடு பாடலும் வரும். 'தாளமுத்து’ சுந்தர், 'செக்காரக்குடி’ சீதா இரண்டு பேரும் நீதிராஜனின் 'டயல் எ ஃப்ரெண்ட்’ அளவுக்கு நண்பர்கள். நேரடி ஒளிபரப்பில் தலையை ஆட்டி ஆட்டிப் பேசுவதால், 'தலையாட்டி’ என்பது சேனலில் செல்லப் பெயர். நேரில் பேசும்போதும் 'சுப்ரமணியபுரம்’ ஜெய் மாதிரி தலையாட்டியபடியே பேசுகிறார். இப்போது வரை சைக்கிளிலேயே வலம் வரும் நீதிக்கு கூடிய சீக்கிரமே இரண்டு குஷி சந்தோஷங்கள் காத்திருக்கின்றன.   

குஷி - 1: சீக்கிரமே சைக்கிளுக்கு பை சொல்லி விட்டு, அப்பாச்சிக்கு 'ஹாய்’ சொல்ல இருக்கிறார் சார்!

குஷி - 2: விரைவில் மண வாழ்க்கையில் காலடி எடுத்துவைக்க இருக்கிறார் பார்ட்டி. அது, அழகாய் பூத்த காதல் திருமணம்!

- இ.கார்த்திகேயன்,
படம்: எ.சிதம்பரம்