ஹாய் மதன், கேள்வி-பதில்

3ஷா, 9தாரா,Sரேயாவிடம் இல்லாத டி.ஆர்.ராஜகுமாரியின் ப்ளஸ்!

கல்லை.போஸ்டல் ராஜ், புதுச்சேரி.

பறவைகளில் எத்தனையோ வகைகள் இருக்கும்போது, கிளிக்கு மட்டும் ஏன் ஜோசியத் தொழில்?

நாம் பேசுவதைத் திருப்பிச் சொல்லக்கூடிய அளவுக்கு நிஜமாகவே கிளி ரொம்பப் புத்திசாலியான பறவை. தனிமையாக ஒரு கிளி மணிக்கணக்காக, நகராமல் சிலைபோல சிந்தனையில் ஆழ்ந்து இருப்பதைப் பார்த்தால், சித்தர்களைப் போல அதற்கு இந்த அகண்ட கண்டத்தின் சூட்சுமங்கள் எல்லாமே தெரியுமோ என்கிற சந்தேகம் வருகிறது. கிளி, கைக்கு அடக்கமானது. அதன் இறக்கைகளை வெட்டி, பிறகு அதைச் சற்று பட்டினி போட்டு, ஒரு ஸ்டெப் எடுத்துவைத்தால் ஒரு நெல் பரிசு, அடுத்ததாக, அடுக்கிவைக்கப்பட்டுள்ள கார்டுகளில் ஒன்றை எடுத்தால் மீண்டும் உணவு என்று (training by reward) பழக்கப்படுத்த முடியும். 'ஸ்டாப்! இந்த கார்டை எடு' என்று ஜோசியர் சைகை காட்டுவதுகூட கிளிக்குப் புரியும். முன்னொரு சமயம் விகடனில் நான் 'புலி ஜோசியர்' என்று ஒரு ஜோக் போட்டிருக்கிறேன்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
அந்நாளைய வசீகரமான கவர்ச்சிக் கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் கொஞ்சலான பேச்சு இன்று த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா, அசின் போன்றவர்களில் யாரிடம் உள்ளது?

இத்தனைக்கும், அநேகமாக எல்லாப் படங்களிலும் ராஜகுமாரி தன் உடலை உடையால் நன்றாக மூடிக்கொண்டுதான் நடித்தார். அப்படியும் நீங்கள் அவரை 'வசீகரமான கவர்ச்சிக் கன்னி' என்று வர்ணிக்கிறீர்கள். அவருடைய கவர்ச்சியின் 50 சதவிகிதம் அவருடைய கண்களில் குடிகொண்டு இருந்ததுதான் காரணம். அந்த விழியழகு இப்போது உள்ள எந்த நடிகையிடமும் கிடையாது. அதே சமயம் இன்றைய நடிகை களிடம் உள்ள பல 'ப்ளஸ் பாயின்ட்' டுகள் ராஜகுமாரியிடம் இருந்ததில்லை என்பதும் உண்மை!

ஆர்.முத்து அபிசேகம், நாலாட்டின்புத்தூர்.
நாவல்கள், புத்தகங்கள் படிப்பதால் என்ன பயன்? அதுவும் டி.வி. சீரியல்போலத் தானே?

இந்த ஒப்பீட்டைப் பலமுறை, பலவிதங்களில் விளக்கியாகிவிட்டது. முடிவாக, ஒரே வித்தியாசம் - டி.வி. சீரியல் பார்ப்பது இருவர் காதலிப்பதை நீங்கள் ஓரமாக அமர்ந்து பார்ப்பதுபோல. புத்தகம் படிப்பது, நீங்களே நேரடியாகக் காதலிப்பது போல!

ச.ராஜசேகர், செய்யாறு.
கடவுள் ஏன் மனிதர்களைப் போல பேசும் சக்தியை மிருகங்களுக்குக்கொடுக்க வில்லை?

பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பே மிருகங்களின் பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது (அல்லது, கடவுள் நிறுத்திவிட்டார்!). மனிதனின் பரி ணாம வளர்ச்சி மட்டும் மிருகங்களை எல்லாம் ஏகமாக மிஞ்சியது. மொழி எப்படி உருவாகி வளர்ந்தது என்பது குறித்து சோம்ஸ்கி போன்ற மொழி வல்லுநர்கள் விரிவாகப் புத்தகங்கள் எழுதி உள்ளார்கள். பெரிய ஆராய்ச்சி அது. மிருகங்களும் பேச வேண்டும் என்று (விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல்!) மனிதன் ஆசைப்படுவதால்தான் புராணங்களிலும், ஈசாப் - பஞ்ச தந்திரக் கதைகளிலும், அனிமேஷன் படங்களிலும் மிருகங்கள் (மனிதனைவிட புத்திசாலித்தனமாக) பேசி வெளுத்துக்கட்டுகின்றன!

ஜி.மாரியப்பன், தேனி.
'காமம்' என்கிற விஷயத்தை அடியோடு மறக்கச் செய்யும் சூத்திரம் எதுவும் உண்டா? அக்காலத்தில் முனிவர்கள் காம உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழ்ந்திருக்கின்றனர் அல்லவா?

மறக்கச் செய்யும் சூத்திரம் உண்டு. அகற்றச் செய்யும் சூத்திரம் கிடையாது. மனதால் மறந்தாலும், மூளை மறக்காது. காமத்தைக் கட்டுப்படுத்திய முனிவர்களும் ஞானிகளும் நிச்சயம் உண்டு. காந்திஜிகூட செக்ஸ் உணர்வோடு போராடிய அனுபவத்தைச் 'சுய சரிதை'யில் எழுதி இருக்கிறார். இருப்பினும், இது பயாலஜி! கோப்பையில் தண்ணீர் முழுவதும் நிரம்பினால் என்ன ஆகும்? உடலுக்குள் ஒவ்வொரு விநாடியும் விந்து உற்பத்தி நிகழ்கிறது. அது நிரம்பிவிட்டவுடன் மூளைக்குத் தெரியவருகிறது. இரவில் தூங்கும்போதும் விழித்துக்கொண்டு இருக்கும் ஆழ்மனம், உடனே சுருக்கமாக காமம் சார்ந்த கனவை ஏற்படுத்தினால் போதும்... விந்து, தானாகவே வெளியேறிவிடும். எப்பேர்ப்பட்டவராலும் இந்த 'இயற்கை விஷய'த்தை நிறுத்தவே முடியாது. பிரமச்சரியத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்த சில கத்தோலிக்கக் கிறிஸ்துவப் பாதிரிமார்கள் இது குறித்து வெட்கப்பட்டு, ஆவேசமாகத் தங்கள் பிறப்பு உறுப்புக்களை வெட்டி எறிந்த நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு!

ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
சின்ன வீட்டை 'துணை மனைவி' என்று கூறலாமா?

அப்ப 'பெரிய வீடு' துணைக்கு வராத மனைவியா? 'சின்ன வீட்'டிடம் போய், 'என் அருமைத் துணைமனைவியே!' என்று அழைத்துப் பாருங்கள். செம டோஸ் கிடைக்கும் (நான் உங்களைச்சொல்லவில்லை)!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
வம்பை விலைக்கு (கவனிக்க: விலைக்கு) வாங்க என்ன வழி?

திடீர் என்று முளைக்கிற, நிறைய விளம்பரங்களுடன் ஆசை காட்டுகிற சிட் ஃபண்ட் ஒன்றில், நீங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தைப் போடுவது ஒரு வழி! (கவனிக்க: 'என்ன வழிகள்?' என்று நீங்கள் கேட்கவில்லை!)