Published:Updated:

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

Published:Updated:
 ##~##

வ்வொரு கிராமத்திலும் தவறாமல் இருக்கிறது ஓர் ஆல மரம். அந்த மரத்தின் கீழே தவறாமல் ஆஜர் ஆகிவிடுகிறார்கள் கிராமத்து மனிதர்கள். வடக்குத் தெரு சரசுவின் தொடுப்பு முதல்  கூட்டணி இடியாப்பச் சிக்கல் வரை எல்லாமே ஆல மரத்தின் கீழ்தான் அலசப்படும். அப்படி ஓர் ஆலமரத்தைத் தேடி நெல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளமடை கிராமத்துக்குச் சென்றோம்.

பரந்து விரிந்த ஆலமரத்துக்கு அருகிலேயே இருக்கிறது காப்பிக் கடை. சூரியக் கதிர்கள் உள்ளே நுழைய முடியாதபடி இலைகள் அடர்த்தியாக இருந்ததால், சிலுசிலுவென இருக்கிறது மரத்தடி.

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

சிவன், 'வழுக்கை’ சிவன், உடையார், காஞ்சனம், மாவூதீன் என ஒரு கும்பல் சேர்ந்ததும் மண் தரையில் கால் நீட்டி அமர்ந்து அரட்டை கச்சேரியைத் தொடங்கினர். ''என்னப்பா... இந்த வருஷம் மழை இப்படி ஏமாத்திருச்சே!'' என வானத்தை அண் ணாந்து பார்த்து ஆதங்கப்பட்டார் 'வழுக்கை’ சிவன். ''நாடு முழுக்க வானத்தைக் கிழிச்சிவிட்ட மாதிரி மழை பெஞ்சாலும், நம்மூருல மட்டும்  சின்னப் புள்ள ஒண்ணுக்கு அடிச்ச மாதிரி சொரு சொருன்னு பெய்யும். அது இந்த ஊர் ராசிய்யா'' என்று சமாதானப்படுத்தினார் மாவூதீன்.  

''தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே... நீ கனவுக் கன்னிகையோ, இல்லை காதல் தேவதையோ..!'' என சத்தம் போட்டுப் பாடி வந்தார் அக்னிமாடன். ''ஏய்... என்ன மாப்ளக்கு இம்புட்டு சந்தோஷம்?’ என்று காஞ்சனம் கேட்க, 'தோட்டத்துல சீனி அவரைக்கு தண்ணி பாய்ச்சிட்டு வந்தேம்யா. தனியா வர்றோமேன்னு பாட்டை எடுத்துவிட்டேன். இந்த வயசுக்கு மேல பழசை நினைச்சுப் பாடுறதுதானே சந்தோஷம்!'' என்றபடி மண்ணில் அமர்ந்துகொண்டார் அக்னி மாடன். ''தாத்தா... இந்தப் படம். அதான், 'உலகம் சுற்றும் வாலிபன்’ பாக்குறதுக்காக திருநெல்வேலி சென்ட்ரல் டாக்கீஸுக்கு நடந்தே போனோம், ஞாபகம் இருக்கா? அங்கே போனதும் லேசுவாக்குல 'டிக்கெட் இல்லை’ன்னு சொல்லிட்டான். படம் பாக்காமத் திரும்புனா மரியாதை இல்லைன்னு காத்திருந்து ரெண்டாம் ஆட்டம் பாத்துட்டு, வயித்துப் பசியோட நடந்து வந்தோம்ல!'' என்று அக்னிமாடன் சொல்ல, ''அந்த அர்த்த ராத்திரியிலேயும் அடுத்தவன் தோட்டத்துப் பாசிப் பயிறை மேஞ்சி வயித்தை நிரப்பிட்டுதானே வந்தோம். பசி கிசின்னு அளந்துவிடாதப்பா'' என்று லந்து பண்ணினார் மாவூதீன்.

அந்த நேரத்தில் சிவனும் உடையாரும் கூட்டத்தில் இருந்து எழுந்து தனியே சென்றார்கள். ''ஏலே அங்க என்ன தனியா ரகசியம் பேசுறீக?'' என்று அக்னிமாடன் கேட்க, ''அடச்சீ... உன் சந்தேகப் புத்தியை உடைப்புல போடு. மூக்குப் பொடி போடுறதுக்காக ஒதுங்கினோம்யா!''- மூக்கைத் துடைத்தபடி பதில் சொன்னார் உடையார். இளைஞர் ஒருவர் செல்போனில் பேசியபடி அவர்களைக் கடக்க, ''இந்த போனை எவன்தான் கண்டுபுடிச்சானோ? எல்லாப் பயகளும் மந்திரிச்சுவிட்ட மாதிரி தனியாப் பேசிட்டுத் திரியுறானுங்க'' சலித்துக்கொண்டார், சிவன்.

''அப்போ எம்.ஜி.யாரைப் பார்க்க விடிய விடியக் காத்துக் கிடந்தோம். இப்போ செல்லுலேயே எல்லாம் வந்திருச்சு. இனி என்னவெல்லாம் புதுசு புதுசா வருமோ?'' என்று வழுக்கை சிவன் கேட்க, ''பட்டனை அமுக்குனா, புள்ளை பொறக்குமாம்'' உடையார் சொல்ல, சிரிப்பொலி வெடித்துக் கிளம்புகிறது. '

''என்ன எல்லோரும் சும்மா உட்கார்ந்திருக்கீக. ஆடு - புலி ஆட்டம் போடுவோமா?'' என்று காமாட்சி கேட்க, கூட்டம் இரண்டு பிரிவானது. ''ஏலே... அந்தக் காயை வெட்டு. இந்த காயைக் கொல்லு'' என்று ஆளாளுக்கு ஆவேசம் காட்டினார்கள். ஆட்டம் நடந்துகொண்டு இருக்கும் போதே; பெருமாள், ஆறுமுகம், சுப்பிர மணியன், இன்னொரு உடையார் வந்து சேர்ந்தார்கள். அந்தக் கூட்டம் மரத்தடி யின் மற்றொரு பகுதியில் அமர்ந்து ஊர் வம்புகளைப் பேச ஆரம்பித்தது.

''இதுக்கு மேலே உட்கார்ந்தா, வீட்டுல மருமக மண்டகப்படி நடத்திருவா’ என்று பழைய கும்பலில் ஒருவர் தோள் துண்டை உதறியபடி எழுந்திருக்க, கூட் டம் மெதுவாக கலைய ஆரம்பித்தது.   எல்லாவற்றுக்கும் சாட்சியாக அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறது, அந்த ஆலமரம்!  

- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

அரசுக்கும்... வேம்புக்கும்... டும் டும்!

ழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் தெரியும். மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணம் தெரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் திருச் செந்தூர் செல்கிற ரோட்டில் இருக்கிறது பன்னம்பாறை கிராமம். இந்தக் கிராமத்தில் வாழ்ந்து இறந்த சுடலை முத்துவின் குடும்பத்தி னரும், ஊர் மக்களும் சேர்ந்துதான் கல்யா ணம் செய்துவைத்தார்கள். இந்தக் கல்யாணத்தில் அரச மரம்தான் மாப்பிள்ளை. வேப்ப மரம்தான் மணப் பெண்.

'தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே...'

மாப்பிள்ளை சார்பாக சுடலை முத்துவின் மூத்த பையன் பர்வதராஜனும் அவர் மனைவியும், பெண் வீட்டு சார்பாக  சுடலை முத்துவின் மகள் ஆனந்தவல்லியும் அவரது கணவரும் தாம்பூல தட்டு மாற்றிக்கொண்டார் கள். மணமக்கள் பட்டு வேட்டி, பட்டுப் புடவை கட்ட, கெட்டிமேளம் கொட்ட, தொட்டுத் தாலி கட்டினார் குருக்கள்.

கல்யாணத்தைப்பற்றி திருமதி ஆனந்த வல்லி கூறும்போது, ''எங்க அப்பாவுக்கு ஏழு ஆண்கள், ரெண்டு பெண்கள்னு ஒன்பது குழந்தைங்க. எல்லாரும் ஒவ்வோர் ஊரில் இருந்தாலும் ஒவ்வொரும் வருஷமும் தை மாசம் இங்கே கிளம்பி வந்திருவோம். என் பொண்ணுக்குக் கல்யாணம் நடக்காமத் தள்ளி போயிட்டே இருந்தது. 'மரத்துக்கும் மரத்துக்கும் கல்யாணம் பண்ணி வெச்சா, சீக்கிரமே கெட்டிமேளச் சத்தம் கேட்கும்’னு ஜோசியம் சொன்னாங்க. அப்பவே கல்யாணம் பண்ணி வெக்கணும்னு நேர்ந்து இருந்தோம். என் பொண்ணுக்குக் கல்யாணம் முடிஞ்சு, அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டா.  

இந்த வருஷம் கண்டிப்பா கல்யாணம் பண்ணணும்னு முடிவு பண்ணி நடத்திட்டோம்!'' என்ற ஆனந்தவல்லியின் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்!

ஆ.கோமதி நாயகம், படம்: எ.சிதம்பரம்