சீக்ரெட் விகடன்

வேர் இஸ் த பார்ட்டி?

நாசா உதவியுடன் பூமியைச் சுற்றி விண்கலங்களை நிறுவி இருக்கிறது அமெரிக்கா. இரான், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இன்ன பிற முஸ்லிம் நாடுகளில் உலவுகிறார்கள் அமெரிக்க உளவாளிகள். ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒற்றுமையாகத் தேடுகிறார்கள். ஆனாலும், ஒசாமா எங்கே இருக்கிறான் என்பது பரம ரகசியம்!

உலக சரித்திரத்தின் டாப்-10 வில்லன்களில் ஒசாமாவுக்கு நிச்சயம் இடம் உண்டு. 2001-ம் ஆண்டு இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தெறியும் வரை, ஒசாமாவைப் பற்றி உலகம் அதிகம் அறியாது. சோவியத் யூனியன் உடைந்ததற்குக் காரணமாக இருந்த அராபியர்களில் ஒருவன் என்பதால், அமெரிக்கா இந்த விஷச்

செடியை நீர்விட்டு வளர்த்தது. அடுத்து வந்த காலங்களில் தீவிர மதவாதக் கொள்கைகள், ஒசாமாவை அமெரிக்காவுக்கு எதிராகத் திருப்பியது. அரபு நாடுகளின் எண்ணெய்க் கிணறுகளுக்கு அமெரிக்கா குறிவைத்தது. ஒசாமா அமெரிக்காவுக்குக் குறி வைத்தான். ஒசாமாவின் சின்ன மிரட்டல்தான் இரட்டைக் கோபுரத்

தாக்குதல். அதிகம் மெனக்கெடாமல் அமெரிக்கா வின் பாதுகாப்புக் குறைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அடித்தான். அதன் பிறகு, ஒசாமாவைத் தேடி, ஆப்கன் மீது போர் தொடுத்து அமெரிக்கப் பொருளாதாரத்தை புஷ் அழித்ததுதான் மிச்சம். இந்த நொடி வரை ஒசாமா வெட்டிப் போட்ட விரல் நகத்தைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆப்கன் மலைகளும், கேட்டால் உயிரையும் கொடுக்கும் குழுவினரும்தான் ஒசாமாவின் பலம்.

புது தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளாத ஒசாமாவுக்கு ஆயுதத் தொழில்நுட்பம் மட்டும் ஓ.கே. மற்றபடி ஃபிரிஜ்ஜில் குளிரவைத்த நீர்கூட கடவுளுக்கு எதிரானது என்பான். ஒசாமா

இறந்துவிட்டான் என்று அவ்வப்போது வதந்தி கிளம்பும். ஒரு மாதம் கழித்து அல் ஜசீரா டி.வி. மூலமாக மொத்த உலகத்தையும் வீடியோ டேப்பால் மிரட்டி எடுப்பான். எல்லோரையும் போலவே அமெரிக்க அதிகாரிகளும் அல் ஜசீரா பார்த்துதான் செய்தி தெரிந்துகொள்வார்கள். ஒசாமாவின் டேப் எப்போதெல்லாம் வெளியாகிறதோ, அப்போதெல்லாம் அமெரிக்காவில் விஷவாயு முகமூடிகள் அதிகம் விற்பனை ஆகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அமெரிக்கர்களுக்கு ஒசாமா என்றால் அவ்வளவு கிலி. இந்த மாதம் இரட்டை கோபுரம் அழிக்கப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவஞ்சலி நடந்தது. அமெரிக்கர்களின் மனதில் வெடிகுண்டு வீசுகிற மாதிரி பேசியிருக்கிறான் ஒசாமா. 'புஷ்ஷைப் போலவே ஒபாமாவும் வலிமையற்ற அதிபர்தான். என்னைப் பிடிக்க மட்டுமல்ல... நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிக்கக்கூட இவர்களால் முடியாது. என்னைத் தேடினால் அதிகப் பொருள் இழப்புதான் ஏற்படும்!' என்று கொக்கரித்திருக்கிறான். உலகின் பில்லியன் டாலர் கேள்வியில் ஒன்று, 'ஒசாமா எங்கே?'

- சாகித்யா