Published:Updated:

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

பிரீமியம் ஸ்டோரி
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?
டீன் கொஸ்டீன்
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

எம்.ராஜேஸ்வரி, சென்னை-44.

''முன்னெல்லாம் பெண் பிள்ளைகள் பதின் வயதுகளில்தான் பூப்பெய்துவார்கள். ஆனால், இப்போதோ ஏழு, எட்டு வயதுகளிலேயே ஏஜ் அட்டெண்ட் செய்து சிரமப்படுகிறார்கள். எனக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் நார்மலான வயதில் பூப்பெய்துவதற்கு என ஏதேனும் சிறப்புக் கவனம் எடுக்க வேண்டுமா?''

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

வாணி சுந்தரபாண்டியன்,
மகளிர் சிறப்பு மருத்துவர்.

''இன்றைய காலகட்டத்தில் 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் ஏஜ் அட்டெண்ட் செய்வது சகஜமாகிவிட்டது. போஷாக்கான உணவுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. இன்னின்ன விஷயங்கள்தான் காரணம் என்று குறிப்பாக எதையும் சொல்ல முடியாது. உங்கள் குழந்தைக்கு மூன்று வயதுதான் என்பதால் இப்போதே பதற்றம்அடை யத் தேவை இல்லை. திடீரென்று அதிகரிக் கும் உயரம், மார்பக

வளர்ச்சி, அக்குள் பகுதிகளில் முடி வளர்ச்சி போன்றவை பூப்பெய்த தயாராக இருப்பதற்கானஅறிகுறி கள். தொடர்ந்து பீரியட்ஸ் ஆரம்பிக்கும். 10 வயதுக்குள்ளாக உங்கள் குழந்தைபூப்பெய் தினால், அது கொஞ்சம் அப் நார்மல்தான். ஆனால், அதை நம்மால் கட்டுப்படுத்த முடி யாது. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு, ஜங்க் ஃபுட் போன்றவற்றை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். அது இந்தப் பிரச் னைக்கு மட்டுமல்லாமல் பல சிக்கல்களுக்கும் தீர்வு அளிக்கும்!''


பி.சங்கர், ஊட்டி.

''நான் காதலிக்கும் பெண் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். நாங்கள் இருவருமே மேஜர். அவரைத் திருமணம் செய்வதில் ஏதேனும் தடைகள் இருக்குமா?''

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

ஆதிலட்சுமி,
வழக்கறிஞர்.

''எந்தத் தடையும் இல்லா மல் உங்கள் நேபாளக் காதலியை நீங்கள் மனைவியாக்கிக்கொள்ளலாம். இந்தியர் வேறு நாட்டுக் குடிமகனைத் திருமணம் செய்வது மட்டுமல்ல; வேறு நாட்டைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளவும் நம் நாட்டுச் சட்டங்கள் வழிவகுக்கின்றன. ஒவ்வொரு மதத்துக்கு மான பிரத்யேக திருமணச் சட்டங்கள் தவிர்த்து, சிறப்புத் திருமணச் சட்டம் என்ற ஒன்றும் உண்டு. அதன்படி ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். இருவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அரசு தடை விதித்த, திருமணம் செய்ய

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

முடியாத உறவுமுறையில் இருக்கக் கூடாது. உங்கள் பகுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள். உங்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு, அங்குள்ள அறிவிப்புப் பலகையில் போடப்படும். சட்டத்துக்கு உட்பட்டு ஏதேனும் எதிர்ப்பு வந்தால் தவிர்த்து, 30 நாட்களுக்குப் பிறகு உங்கள் திருமணம் சப்-ரிஜிஸ்ட்டிரார் முன்னிலையில் நடத்தப்படும். இதற்கு மூன்று சாட்சிகள் அவசியம்!''


பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.

''நான் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக் கிறேன். எங்கள் கல்லூரியில் மாணவிகள் மாணவர்களுடன் பேசினால், அதைப் பெரிய குற்றமாகக் கருதி தண்டிக்கிறார்கள். இது சரிதானா? மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளக் கூடாது என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா?''

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

மன்னர் ஜவஹர்,
துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்.

''கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவருக்குஒருவர் பேசிக்கொள்வது தவறில்லை. தண்டிக்கப்பட வேண்டிய குற்றமும் அல்ல. கோ-எஜுகேஷன் கல்லூரிகளில் பிராக்டிகல், புராஜெக்ட், தொழிற்சாலைப் பயிற்சிகளில் மாணவர்கள் அனைவரும் இணைந்துதான் பயிற்சிகளில் இறங்க வேண்டியிருக்கும். பிளேஸ்மென்ட் செலெக்ஷன்களின்போது ஆணும் பெண்ணும் ஒன்றாகத்தான் குரூப் டிஸ்கஷன்களில் ஈடுபட வேண்டியிருக்கும். அந்தச் சமயங்களில் கூச்சப்பட்டு வெட்கத்தில் தலை கவிழ்ந்துகொண்டு இருக்க முடியாது.

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

எனவே, அதீதக் கட்டுப்பாடுகள் விதித்து, இயல்பான ஒரு விஷயத்தை கிரிமினல் நடவடிக்கையாக மாற்றக் கூடாது. மாணவிகள் மாணவர்களுடன் பேசவே கூடாது என்று நினைப்பவர்கள், பெண்கள் கல்லூரி மட்டுமே ஆரம்பித்து இருக்க வேண்டும் என்பது என் தனிப் பட்ட கருத்து!''


சா.அபிராமி, திருச்சி-20.

''நான் இரவு நன்றாகத் தூங்கினாலும் பகலிலும் தூக்கம் வந்துகொண்டே இருக்கிறது. என் பத்து மாதக் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே தூங்கிவிடுகிறேன். 5 நிமிடம் உட்கார்ந்தால் அப்படியே தூக்கம் வரு கிறது. இது எதுவும் நோயா? தூக்கத்தைக் குறைக்க என்ன செய்வது?''

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

என்.ராமகிருஷ்ணன்,
தூக்கம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பு மருத்துவர்.

''குழந்தை பிறப்புக்குப் பிறகு சில பெண்களுக்கு எடை கூடலாம். அந்தநேரத் தில் தூக்கம் இயல்பான அளவைவிட அதிகமாகவே வரும். அதை ஸ்லீப் ஆப்னியா என்போம். அந்தப் பிரச்னை உங்களுக்கு உள்ளதா என்பதைப் பரிசோ தனை செய்தால்தான் கண்டுபிடிக்க முடியும். உடல் எடையைக் குறைத்துக்கொள்வது அதற்கான தீர்வாக இருக்கும். அது தவிர, நார்கோலெப்சியோ என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா என்று பரிசோதித்துக் கொள்வதும் நல்லது. மூளையில் ஏற்படும் பாதிப்பினால் தூக்கம் - விழிப்பு என்னும் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் இயக்கத்தை மூளை திறம்படக் கையாள முடியாமல் திணறும். அதனால் தூங்க வேண்டும் என்ற உந்துதல் பகல் முழுக்கவும் இருந்துகொண்டே இருக்கும். அந்த மாதிரி நிலைமையில், விழிப்பு நிலையில் இருப்பதே சிரமமாக இருக்கும். தூக்கக் கலக்கத்தோடு பகல் பொழுதைக் கழிக் கும் நிலையை எக்சஸிவ் டே டைம் ஸ்லீப்பினஸ் என்பார் கள். மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், இதனைச் சரிசெய்துவிடலாம். தவிர, உடற்பயிற்சி செய்வதும், பிரகாசமான வெளிச்சத்தில் இருப்பதும் தூக்கக் கலக்கத்தைக் குறைத்து விழிப்பு உணர்வை அதிகப்படுத்தும்!''


கோ.சுகுமார், திருவண்ணாமலை.

''நான் அடிக்கடி திருவண்ணாமலை- சென்னை மார்க்கத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பேன். இரவு நேரங்களிலும் பேருந்தில் எஃப்.எம். மூலம் பாடல்களைச் சத்தமாக ஒலிக்கச் செய்கின்றனர். அந்த நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் பயணிகள் அதிகச் சத்தத்தினால் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். ஓட்டுநர்-நடத்துனரிடம் முறையிட்டாலும் அவர்களும் அதைக் கண்டுகொள்வது இல்லை. இதைக் குறிப்பிட்டு போக்கு வரத்துக் கழகத்தின் மீது வழக்குத் தொடர முடியுமா?''

டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?

ரவிசங்கர்,
வழக்கறிஞர்.

''கிட்டத்தட்ட இரண்டரை மூன்று மணி நேரம் மன உளைச்சலோடு பயணிப்பது மிகவும் கொடுமையான ஒன்றுதான். இதற்காகப் போக்குவரத்துக் கழகத்தின்மீது நீங்கள் வழக்குத் தொடர முடியும். அடுத்த முறை பேருந்தில் பயணிக்கும்போது பயணச்சீட்டு, பேருந்தின் எண், (பதிவு எண் மற்றும் அரசுப் பேருந்துக்கு என்று இருக்கும் பிரத்யேக எண்) போன்றவற் றைக் குறித்துக்கொண்டு, அந்தப் போக்குவரத்துக் கழக டிவிஷன் மேனேஜருக்கு ஒரு புகார் மனு கொடுங்கள். அந்தப் புகாரில், 'இரவு நேரத்தில் 10 மணிக்கு மேல் பயணம் செய்யும்போது, எஃப்.எம். போட்டு ஸ்பீக்கரைச் சத்தமாக வைத்துவிடுகிறார்கள், நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ஒலியைக் குறைக்கச் சொன்னால் அலட்சியப்படுத்துகிறார்கள்' என்று எழுதி, பயணச்சீட்டின் ஜெராக்ஸ், பஸ் நம்பர்எழுதிக் கொடுங்கள். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பற்றிய விவரங்களைக் கேளுங்கள். இதன் பிறகும் எஃப்.எம்-ல் பாடல் சத்தமாகப் போடுவது மற்றும் அலட்சியப் போக்கு தொடர்ந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி போக்குவரத்துக் கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்வதுடன் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடும் பெறலாம்!''

 
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?
டீன் கொஸ்டீன் -நேபாளப் பெண்ணைக் காதலிச்சா தப்பா?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு