Published:Updated:

நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''

நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''

பிரீமியம் ஸ்டோரி
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
அஜயன் பாலா, ஓவியம்: சசி
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
நாயகன் :மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''

2.9.09 இதழ் தொடர்ச்சி...

'இன்றைய குண்டுவெடிப்புகளுக்கு இடையிலும், துப்பாக்கிச் சத்தங்களுக்கு ஊடாகவும் நாளைய பொழுது அமைதியாக விடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

''சகோதரர்களே, உறுதிதான் நமது பலம். வெள்ளை இனத்தவர்கள் யாராவது உங்களைத் தாக்கினால், தயவுசெய்து நீங்கள் யாரும் திருப்பித் தாக்கக் கூடாது. அப்படி நீங்கள் தாக்கினால், நமது கவனம் சிதையும். நம் ஒட்டுமொத்த இன விடுதலைக்கான இந்தப் போராட்டம் மெள்ளத் திசை மாறி அவர்களை எதிர்ப்பதற்கான இயக்கமாக முனை மழுக்கப்படும். ஆகவே நண்பர்களே, நாம் பதிலுக்கு அவர்களைத் திருப்பித் தாக்கும் ஒவ்வொரு அடியும் நம் தோல்விக்கு நாமே எழுதும் முகவுரைகள். அவர்கள் அடிக்கட்டும்... கைகள் சோரும் வரை அடிக்கட்டும். நிதானமாக நடப்போம். உறுதியாக நடப்போம். இறுதியில் நமக்கான

நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''

விடியல் நிகழும். அந்தக் கணம் வரை நாம் உறுதியாக, மிக உறுதியாக நமக்கான பாதையில் நடந்து செல்வோம். இறுதி வெற்றி நமக்கே!'' என அன்று தன் முன் ஆவேசத்துடன் கூடி இருந்த கூட்டத்தினரிடம் மார்ட்டின் உறுதிபடக் கூறினார். இதனால் மேலும் எரிச்சலுக்கு ஆளான வெள்ளையர்களின் கோபம் இந்த முறை மார்ட்டினை மட்டும் குவிமையம்கொண்டது. 'இவன் ஒருவன்தானே நமக்குப் பிரச்னை. இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டால்... அதன் பிறகு எல்லா பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி!' இப்படி நினைக்கும்போதே பிசாசின் புன்னகை அவர்கள் முகத்தில் அரும்பியது.

அன்று காலை மாண்ட் கோமரியில் தான் தினமும் பிரசங்கம் செய்யும் தேவாலயத்துக்குப் புறப்பட்டார் மார்ட்டின். காரில் ஏறும்போது அவசர மாக அருகில் வந்தார் ஒரு வெள்ளை நண்பர். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ரகசியமாக அவர் மார்ட்டின் காதில் தகவல் ஒன்று சொல்ல, மார்ட்டின் முகத்தில் அதிர்வு அலைகள்.

தேவாலயத்தில் அன்று மார்ட்டினின் கணீர்க் குரல் ஒலித்தது. ''நண்பர் களே... இந்தப் போராட்டத்தில் என்றாவது ஒருநாள் நான் கொல்லப் படலாம். அது இன்றோ, நாளையோகூட நடக்கலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பத்திலும் நீங்கள் யாரும் வன்முறையில் இறங்கக் கூடாது!'' என்றார்.

இப்படிப் பேசிய அடுத்த நாள் இரவே அவரது வீட்டுத் தொலைபேசி மணி ஒலித்தது. மார்ட்டின் ரிஸீவரைக் கையில் எடுத்ததும், ''நீக்ரோ பயலே... ரொம்ப நல்லவனா வேஷம் போடாதே. நாங்க இதுக்கு எல்லாம் மயங்கிவிட மாட்டோம். மரியாதையா உடனே போராட்டத்தை வாபஸ் வாங்கு. இல்லேன்னா, இந்த வாரமே உன் கதை முடிஞ்சுடும்!''

தொலைபேசி மிரட்டல்களும் மொட்டைக் கடுதாசிகளும் தொடர்ந்தன. ஒருநாள் மாலை வீடு திரும்பிய மார்ட்டினின் தோளில் சாய்ந்து கராட்டா அழத் துவங்கினாள். குழந்தைகளும் சேர்ந்து அழுதன. மார்ட்டின் அப்போதைக்குத் தைரியம் தந்து அவர்களைப் படுக்கவைத்தார். தன்னால் அவர்கள் படும் அவஸ்தைகள் அவரது கண்களைக் கலங்கவைத்தன. ஒருக்கால் தான் கொல்லப்பட்ட பின் தன் மனைவிக்கும் மக்களுக்கும் நேரப்போகும் நிலைமை...

சட்டென அவரது அகக் கண்கள் முன் எண்ணற்ற கறுப்பின மக்கள் கடல் என விரிந்துகிடந்தனர். 'இத்தனை பேரின் விடுதலைக்கு முன் தனது குடும்பம் மற்றும் மனைவியின் உயிர் பெரிதா? இல்லை... இல்லவே இல்லை!'

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு மாலைப்பொழுதில்... வழக்கம் போல தேவாலயத்தில் மக்களிடையே மார்ட் டினின் பிரசங்கம். ஒருவர் பதற்றத்துடன் கண் கலங்கி ஓடி வந்து நின்றார். அழுது கொண்டே அவர் சொன்ன தகவல் மார்ட்டினுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அவசரமாக காரில் புயல் என சீறிப்பாய்ந்தார். அவர் வீட்டு முன் கூட்டம். கண் முன்னே தன் வீடு எரிந்துகொண்டுஇருப்பதைப் பார்த்த மார்ட்டினின் மனம் பதைபதைத்தது. நல்ல வேளை, அவரது மனைவி, மகள் இருவரும்தப்பித்து இருக்கின்றனர். வெள்ளை இன வெறியர்கள் வீசி எறிந்த குண்டு, அவர்களது வீட்டைச் சிதிலமாக்கி தீப்பற்றி எரிய வைத்துக்கொண்டு இருந்தது. தகவலைக் கேள்விப்பட்டு கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடத் துவங்கியது கொதித்தெழுந்த சில இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆயுதங்களைத் தூக்கினர். பழிக்குப் பழி கொலை வெறி அவர்களது கண்களில் தாண்டவம் ஆடியது. ''தோழர்களே! உங்களது உணர்வுகளை நான் மதிக்கிறேன். தயவுசெய்து யாரும் தவறான பாதைக்குப் போக வேண்டாம். நம் போராட்டத்தின் இறுதி இலக்கை முழுமையாக அடையும் வரை நாம் எந்தக் காரணம்கொண்டும் அமைதிப் பாதையைக் கைவிடக் கூடாது. இப்போதைக்கு அனைவரும் கலைந்து செல்லுங்கள்!''

நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''

மார்ட்டின் உரக்கச் சொன்னதும்ஆயு தங்கள் கீழே விழுந்தன. மக்கள் அமைதி யாக மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல கலையத் துவங்கினர். மார்ட்டின் வீட்டில் குண்டு வீசப்பட்ட தகவலை ரேடியோ மூலம் கேட்ட கராட்டாவின் தந்தை ஒபி ஸ்காட் பதறி அடித்துக் கொண்டு வந்தார். மார்ட்டினுக்கு எதிரிகளால் வரவிருக்கும் ஆபத்தைக் கூறி, கொஞ்ச நாள் குழந்தைகளுடன் தங்கள் வீட்டில் வந்து தங்குமாறு மகள் கராட்டாவிடம் கேட்டார். ஆனால், கராட்டா மறுத்தார். ''இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவரைத் தனியாக விட்டு வந்தால் வரலாறு என்னைத் தூற்றும் அப்பா. அவர் எனக்குக் கணவர் மட்டும் அல்ல; நமக்கு அவர் காலம் பரிசு அளித்திருக்கும் அற்புதத் தலைவர்!'' என கூறி கராட்டா தந்தையை வழி அனுப்பிவைத்தாள்.

மார்ட்டினிடம் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரை அரணாக வைத்துக்கொள்ள அனைவரும் அறிவுறுத்தினர். ஆனால் மார்ட்டின், ''அகிம்சையைப் போராட்ட வழியாகக்கொண்டு இருக்கும் நான், ஆயுதம் ஏந்திய வீரர்களைப் பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டால் நானே என் கருத்துக்கு எதிராக நடப் பதைப் போன்றது ஆகும்'' எனக் கூறித் திட்டவட்டமாக மறுத்தார்.

போராட்டம் தவிர்க்க முடியாமல் எழுச்சியூட்டி வருவ தைச் சகிக்க முடியாத வெள்ளை நிர்வாகத்தினர், போராட் டத்தை முடக்க கறுப்பினத்தவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மார்ட்டினும் பயங் கரவாதியாகக் கருதப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் கறுப்பினத்தவர்கள் கூட்டம் கூட்டமாகத் தாங்களாக காவல் நிலையம் முன் குவிந்தனர். ஒரு கட்டத்தில் இதுவே காவலர் களுக்குப் பெரிய தலைவலியாக மாற, வேறு வழி இல்லாமல் கைதானவர்களை விடுவித்தனர்.

இதனிடையே பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தின் முக்கியத் திருப்பமாக அமெரிக்க உச்ச நீதிமன்றம், 1956 நவம்பர் மாதம் ஒரு மகத்தான தீர்ப்பை வழங்கியது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான அந்தத் தீர்ப்பு, பல லட்சம் அமெரிக்கக் கறுப்பினத்தவர்களின் இதயங்களைப் பூரிப்பில் விம்மச் செய்தது!

 
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
- சரித்திரம் தொடரும்...
நாயகன் -''என்றாவது ஒருநாள் நான் கொல்லப்படலாம்!''
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு