Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்

80 -20 விதி தெரியுமா? பரேட்டா என்பவர் கண்டறிந்த இந்த விதியைப் பார்க்கலாம்.

உலகின் 80 சதவிகித மக்கள் தொகை 20 சதவிகித நாடுகளில் இருக்கிறது.

சுய தொழில் செய்பவர்களிடம் கேட்டால், 80 சதவிகித வருமானம் 20 சதவிகிதத்தினரிடம் இருந்து வருவது தெரிய வரும்.

உங்களுக்குத் தெரிந்த 20 சதவிகித நபர்கள்தான் உங்களின் 80 சதவிகிதப் பிரச்னைகளுக்குக் காரணம்.

புள்ளியியல் நிபுணர்கள் முதல், வாழ்க்கைத் தத்துவ அறிஞர்கள் வரை இந்த பரேட்டா விதி சோதிக்கப்பட்டும் வாதிக்கப்பட்டும் இருக்கையில், இந்த விதி இணைய உலகத்தில், குறிப்பாகப் பயனீட்டாளர்கள் புழங்கும் Web 2.0 தளத்தில் பொருந்தவில்லை என்கிறார்கள் இணையதளங் களை நடத்துபவர்கள்.

இந்தப் புதிய யுகத்தில் '1990' என்ற புதிய விதிதான் பொருந்தும். யு டியூப் போன்ற பயனீட்டாளர்கள் மும்முரமாக இயங்கும் தளங்களில், அவர்களின் செயல்களை அலசிப் பார்க்கையில் 1 சதவிகிதம் மேட்டரைத் தயாரிக்க, 9 சதவிகிதம் பரபரப்புடன் படித்துக் கருத்து தெரிவிக்க, 90 சதவிகிதம் பேர் மேட்டரை மேய்ந்துவிட்டுச் செல்வார்கள். ஆன்-லைனில் இதில் நீங்கள் எந்த ரகம் என்பது உங்களுக்குத்தான் தெரியும்.

எந்த ரகத்தில் இருந்தாலும், ஒரு குயிக் கேள்வி...

கழுத்தில் மாட்டிக்கொள்ள செயின், அதில் குட்டியாக ஒரு தாயத்து. அதை மாட்டிக்கொண்டால், சில நொடிகளுக்கு ஒரு முறை புகைப்படம் எடுத்து, அந்த இடத்துச் சத்தங்களைப் பதிவுசெய்துகொள்கிறது. ஜி.பி.எஸ். வசதிகொண்ட இந்தத் தாயத்து சேகரிக்கும் தகவல்கள் வலைதளம் ஒன்றில் தொடர் பதிவேற்றம் செய்யும். இந்தத் தாயத்தை அணிந்துகொள்வீர்களா?

'என் பிரைவஸி என்ன ஆவது? மாட்டவே மாட்டேன்!' என்ற எண்ணம் எழுவது இயல்புதான். இங்கே ஒரு நிமிடம்... 70-களில் வாழ்ந்த மனிதர்களுக்கு... ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தமது புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்தால், நொடிப்பொழுதில் உலகில் உள்ள அனைவரும் பார்க்க முடியும் என்ற சாத்தியம் அயர்ச்சி உண்டாக்கிஇருக் கும் என்பதை மறுக்க முடியாது. அந்த வகை அயர்ச்சிதான் இப்போது உங்களுக்குத் தோன்றுவதா? ஓ.கே. யோசிக்காதீர்கள், விடுங்கள்... தாயத்து மேட்டருக்கு வரலாம்.

மேகக் கணினியம் போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இது போன்ற சங்கதிகளை விரைவில் சாத்தியப்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக, மைக்ரோசாஃப்ட்டின் சென்ஸ்கேம் (Sensecam) புராஜெக்ட் இது போன்ற தாயத்தை உருவாக்குவதுதான். விவரங்களுக்கு, new.research.microsoft.com/en-us/um/cambridge/projects/sensecam/ உரலியைச் சொடுக்குக.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் நெட்வொர்க்கிங் செய்ய விரும்புபவர்களுக்கு ஒரு திருகுவலிப் பிரச்னை -ஆள் மாறாட்டம். ஃபேஸ்புக் (new.facebook.com) போன்ற வலைதளங்களில் யார் வேண்டுமானாலும், எந்தப் பெயரிலும் பதிவு செய்துகொள்ளலாம் என்பதால், ஒருவர் இன்னொருவராக இணைய வேடம் இடுவது ரொம்பவும் ஈஸி. அதுவும் பிரபலமானவர்களின் வேடம் அணிந்துகொள்வது பரவலாக நடப்பதால், நம்பகத்தன்மையில் சரிவு ஏற்படுகிறது. உதாரணத்துக்கு, சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏகப்பட்ட டிராஃபிக். திருமதி ஒபாமாவின் இணைய நட்பு வட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டார்கள். 'திருமதி ஒபாமா' அவ்வப்போது சில தகவல்களை எழுதுவது உண்டு. இந்தத் தகவல்கள் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களில் வெளியான தகவல்கள்தான் என்றாலும், நேரடியாக அவரிடம் தொடர்புகொள்ள முடிகிறதே என்று சிலர் ஆர்வமாகத் தங்களது ஆதரவையும், பலர் ஆலோசனைகளையும் வழங்கி வர, ஒருநாள் 'திருமதி ஒபாமா' எழுதிய தகவல் வாக்கியத்தில் எக்கச்சக்க இலக்கணப் பிழைகள். நட்பு வட்டத்தில் பலர் அதிர்ந்துபோய், இது டுபாக்கூர் பேர்வழி ஒருவரின் கைவண்ணம் என்பதைப் புரிந்துகொண்டனர்.

Fake Profile, Online identity theft என்று பல விதங்களில் சொல்லப்படும் இந்தப் பிரச்னைக்கு, சென்ற மாதம் நிறுவப்பட்ட new.checkedprofile.com <http://checkedprofile.com/> என்ற வலைதள நிறுவனம் படு இன்ட்ரெஸ்ட்டிங் தீர்வு சொல்ல முனைகிறது. ஆன்-லைன் புரொஃபலை பிரின்ட் செய்து அது தெளிவாக இருக்கும்படி தூக்கிப் பிடித்தபடி ஒரு புகைப்படம் எடுத்து அப்லோட் செய்துவிட்டால், அவர்களது தொழில்நுட்பம், உங்கள் முகத்தையும் பிரின்ட்டில் இருக்கும் சங்கேத வார்த் தையையும் பொருத்தம் பார்த்து 'நீங்கள் நீங்களே!' என அத்தாட்சியம் வழங்கு கிறது. ஆன்-லைன் வசதிகளைப் பயன்படுத்தும் பக்குவம் இல்லாத சிறு வயதினரை ஆன்லைன் பயன்படுத்தும் ரிஸ்க்குகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இது பயன்படும்.

கின்னஸ் சாதனை செய்து அவர்களது பதிவேட்டில் இடம் பெறுவதற்காக உலகம் முழுவதும் ஆர்வம் அதிகம். சீரியஸான சாதனைகளும், சிரிக்கவைக்கும் சாதனைகளுமாக கின்னஸ் நிறுவனத்தின் புகழைப்பற்றி அதிகம் சொல்லவேண்டியது இல்லை. விமானப் பயணத்தின்போது, தலை சுற்றி வாந்தி எடுப்பதற்கு உதவியாக வைக்கப்பட்டு இருக்கும் air sickness உறைகளை அதிகமாகச் சேமித்துவைத்திருக்கும் நியூஸிலாந்து நாட்டுக்காரர் 'தனி மனித சாத னையாளரா'கக் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற முடியும்.
(new.guinnesswori-drecords.com/records/modern_society/collections
/largest_collection_of_aeroplane_sick_bags.phpx), இந்த வருடக் காதலர் தினம் அன்று மெக்ஸிகோவில் திரண்டுவந்து முத்தமிட்டுக்கொண்ட 39,897 பேரும் கின்னஸ் சாதனையாளர்கள்தான். (ஆமாம், அது என்ன ஒற்றைப்படை எண்? ஜோடிகள் என்றால், இரட்டைப் படையில்தானே இருக்க வேண்டும்?)

கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்து, சாதனையை நிரூபித்து புத்தகத்தில் இடம்பெறுவது சாதாரணமானது அல்ல. முக்கியக் காரணம்: சாதனையை நிரூபிக்கத் தேவைப்படும் documents மற்றும் procedures.

மனித வாழ்க்கையின் பல கோணங் களிலும் வியக்கத்தக்க மாற்றங்களைச் சாத்தியப்படுத்தும் இணையம் சாதனை யாளர்களாக மாற எளிதான வழியையும் கொண்டுவந்துவிட்டது. சென்ற வருடம் நிறுவப்பட்ட new.urdb.org/ என்ற வலை தளம் கின்னஸ் நிறுவனத்துக்குச் சவால் விட்டு கிடுகிடுவென வளர்ந்து நிற்கிறது. அதெல்லாம் முடியாது. எனக்கு கின்னஸ் சாதனைதான் வேண்டும் என அடம் பிடிப்பவர்கள் new.guinnesswori-drecords.com/member/how_to_become_a
_record_breaker.phpx உரலிக்குச் சென்று விதிகளைப் படித்துக்கொள்ளலாம்!

 
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
-log off
வருங்காலத் தொழில்நுட்பம் -அண்டன் பிரகாஷ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு