Published:Updated:

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

பிரீமியம் ஸ்டோரி
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
ஹாய் மதன், கேள்வி-பதில்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்?
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

சு.மு.சுரேஷ், அரைக்கால்கரை.

நமீதா, நயன்தாரா, பாவனா, ரீமாசென் என தமிழ் தெரியாத நடிகைகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறப்பது செம கடுப்பா இருக்கே சார்?!

இப்போது கவர்ச்சியைப் பார்த்துதான் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; குரலைப் பார்த்து அல்ல. உங்களுக்குக் கடுப்பாக இருக்கிறது என்பதற்காக இவர்கள் எல்லோரும் தமிழில் பேசி நடிக்க ஆரம்பித்தால், உங்கள் கடுப்பு பல மடங்கு அதிகமாகிவிடும். விடுங்க!

பொன்விழி, அன்னூர்.

முதல்முறையாக ஒரு பெண்ணை ஆடை இன்றி வரைந்த ஓவியர் யார்? அவர் வரைந்த ஓவியம் இப்போதும் இருக்கிறதா?

இருக்கிறது. ஆனால், அந்த ஓவியருக்குப் பெயர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை! 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு PALAEOLITHIC என்று அழைக்கப்படும் 'பழைய கற்கால'த்தில் 'டீடெய்ல்'களுடன் வரையப்பட்ட பிறந்த மேனிப் பெண்ணின் ஓவியத்தை பிரான்ஸ் நாட்டில் (அப்போதுகூட கலை என்றால் பிரான்ஸ்தானா?!) ஒரு குகையில் கண்டெடுத் தார்கள். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட, 'வீனஸ்' என்று அழைக்கப்படும் நிர்வாணப் பெண்களின் சிலைகளும் நிறையத் தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. பிற்காலத்தில் 16-ம் நூற்றாண்டில், 'மறு மலர்ச்சி யுகத்தில்' ஜார்ஜோனே, டிஷான் போன்ற இத்தாலிய ஓவியர்கள் அழகுப் பெண்களை வரைவதில் புகுந்து விளையாடினார்கள்!

ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

எந்த வயதில் பெண்ணின் அழகு ஆண்களைப் பெரிதும் பாதிக்கிறது?

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

யாருடைய வயதைச் சொல்கிறீர்கள்?! குறுகிய காலத்தில் கொந்தளிக்கும் அழகு பெண்ணினுடையது! இறக்கும் வரை பெண்ணின் அழகால் பாதிக்கப்படுகிற மனம் ஆணுடையது!

வ.சந்திரன், மதுரை.

புத்திசாலிப் பெண்கள் காதல் வலையில் விழுவார்களா, மாட்டார்களா?

நிச்சயம் விழுவார்கள். காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை. அதாவது, நடப்பதை Cerebral Cortex (பகுத்தறிவு மூளை!) வெறுமனே வேடிக்கைதான் பார்க்கும்! காதல் வயப்படும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு வேதியப் பொருட்களே (Chemical Substances)! அவை ஈர்க்கப் படும்போது நிகழும் வேதிய மாற்றங்களை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள்

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இந்த நிலை ஏற்பட்டுவிட்டால், புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்துவிடும்!

புத்தார்தா, காரைக்குடி.

ஒரு காதல் எப்போது ஊத்திக்கொள்கிறது?

காதல், டம்ளர் அளவில் இருக்கும்போது!

பிரதீப் குமார், சேலம்-16.

'கில்கெமெஷ்' காப்பியம் முதல் (உங்கள் 'கி.மு.-கி.பி.' புத்தகத்தில் படித்தேன்) இன்றைய எல்.கே.ஜி. ஸ்டூடன்ட்கூட 'மூணு சான்ஸ்தான் குடுப்பேன்' என்கிறார்களே..? அது என்ன மூணு சான்ஸ் கணக்கு?

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

மனிதன் நியாயமானவன் என்பதால் மூணு சான்ஸ் தருகிறான்! ஒண்ணைத் தொடர்ந்து, ரெண்டு உடனே வந்துவிடுகிறது. ஆகவே சுதாரித்துக்கொள்ளவும், தயார்படுத்திக்கொள்ளவும், முடிவு எடுக்கவும் 'ரெண்டு' பயன்படுகிறது. மூணு என்பது முடிவானது!

நான் சின்ன வயசில் என் நண்ப னுக்கு, எதற்கோ மூணு சான்ஸ்கொடுத் தேன். 'ரெண்டு' சொன்ன பிறகும் அவன் மசிவதாகத் தெரியவில்லை. பரிதாபமாக, 2.1, 2.2, 2.3 என்று சொல்ல ஆரம்பித்தேன். ஊஹூம்!

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் தங்களைக் கவர்ந்த பாடல்?

'கா...கா...கா' பாட்டு. அதற்குப் பிறகு இன்று வரை எந்த ஹீரோவும் காக்காவைப் பார்த்துப் பாடவில்லை என்று நினைக்கிறேன்!

வீ.சிவசங்கர், கள்ளக்குறிச்சி.

ஓரினச் சேர்க்கை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப் பாடா?

அப்படிச் சொல்ல முடியாது. கலாசார, சம்பிரதாய வேலிகளைத் தாண்டி நிற்பதால் அவர்களுக்குச் சுதந்திர உணர்வு அதிகமாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு! 'ஆண் - பெண் - திருமணம் என்கிற குறுகிய எல்லைகளைக் கடந்த வெளி மனிதனாக இருப்பதால், நாங்கள் ஸ்பெஷல்!' என்றுகூட அவர்கள் கருதுகிறார்கள். 'கலைஞர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய கற்பனைகள் (Fantasy) அதிகமாக வெளிப்படுகின்றன'

காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்

என்கிறார்கள் ஆய்வாளர்கள். ப்ளேட்டோ, டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ என்று ஆரம்பித்து, ஆஸ்கர் ஒயில்ட், டீ.ஈ.லாரென்ஸ், டென்னசி வில்லியம்ஸ் வரை ஏராளமானவர்கள் 'ஹோமோசெக்சுவல்ஸ்'தான். அவர்களைப் பொறுத்தமட்டில், நாம் எல்லோரும்தான் வெறும் சராசரி மனிதர்கள்!

வி.அரசு, மன்னார்குடி.

நீங்கள் சொன்ன முதல் பொய் எது?

முதல் நாள் பள்ளிக்கூடம் சேர்கிறேன். திருவல்லிக்கேணியில் சாமராவ் பள்ளி. வேலைக்காரப் பெண்மணி பாக்கியம் என்பவர் என்னைக் கொண்டு போய் வாசல் வரை விடுகிறார். மாலை திரும்பி வருகிறேன். ஈஸிசேரில் தாத்தா... 'ஸ்கூல் எப்படிடா இருந்தது?' என்று கேட்கிறார். 'உம்... நல்லா இருந்தது!' என்கிறேன்.

 
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
காதல் எப்போது ஊத்திக்கொள்ளும்? - ஹாய் மதன்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு