Published:Updated:

செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

பிரீமியம் ஸ்டோரி
,எழுத்தாக்கம்:சுபா, ஓவியம்:அனந்தபத்மநாபன்
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே!
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

''வக்கீல் தொழில் புரிகிறேன். விவாகரத்து கோரி என்னிடம் இளம் தம்பதிகள் வருவது அதிகரித்துவிட்டது. கலங்கிப்போகிறேன். காதல் என்பது உடல் இச்சையை அடிப்படையாகக்கொண்டதுதானா? இச்சை தீர்ந்ததும் காதலும் காய்ந்துவிடுகிறதா? அல்லது இளைஞர்களிடம் புரிந்துகொள்ளுதல் குறைந்துவிட்டதா?''

''ஆண், பெண் இருவருக்கும் அடுத்தவர் மீது பரஸ்பர ஆர்வம் பிறக்காவிட்டால், அடுத்த தலைமுறை என்று ஒன்று இருக்காது. இனவிருத்தி இடைவிடாமல் நடைபெறுவதற்காக இயற்கை நிகழ்த்தும் போதை விளையாட்டு இது. இனக்கவர்ச்சி எனும் போதை உடலில் ஏறி இருக்கும்போது, தாமாகவே ஆணும் பெண்ணும் நெருங்கி வருகிறார்கள்.

முழுமையான ஈடுபாடுகொள்ளாமல், கட்டாயத் தின் பேரில் எது நடந்தாலும், அதில் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று மனம் கணக்கிடத் துவங்கிவிடுகிறது.

சமூகத்தில் யாரைப் புத்திசாலி என்று கருதுவீர்கள்? குறைவாகக் கொடுத்து அதிகம் பெறத் தெரிந்தவரைத்தானே? கடைவீதியில் துவங்கி கல்யாணம் வரை கொடுப்பதைக் குறைத்து, பெறுவதை அதிகமாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பதில், உறவுகளிலும் கணக்கு நுழைந்துவிடுகிறது.

காதல் மிகுந்த உணர்ச்சிகளால் ஆளப்படும் காலத்தில், இந்த ஆதாயக் கணக்கைத் தாண்டி எண்ணங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றன. என்ன கிடைக்கிறது என்பதைவிட என்ன கொடுக்கிறோம் என்பதுதான் அப்போது முக்கியமாகத் தோன்றுகிறது. அதே உணர்ச்சி திருமணத்துக்குப் பின்பும் தீவிரமாகத் தொடர்ந்தால், உறவும் சுகமாகத் தொடரும்.

கடைவீதியிலோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ கொடுக்கல் வாங்கல் திருப்தி இல்லாமல் போனால், நிறுத்திவிடலாம். ஆனால், கல்யாணத்தில் குறிப்பிட்ட ஒரு நபருடன் கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டதான உணர்வு அல்லவா எழுகிறது? ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றப்பட்டு, தப்பிக்க முடியாமல், நீங்கள் அதிகம் கொடுப்பதாகவும், பதிலுக்குக் குறைவாகப் பெறுவதாகவும்தான் மனம் நினைக்கிறது.

உங்களை யாரோ சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நினைத்துவிட்டாலே, அப்புறம் நிம்மதி ஏது?
திருமணம் முடிந்த கையோடு அந்தக் கணவனும் மனைவியும், அடுத்தவரின் அலமாரியைத் திறந்து பார்க்கக் கூடாது என்று ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். 30 வருடங்கள் கழிந்தன. கணவனின் அலமாரி திறந்து இருப்பதைக் கவனித்த மனைவி ஆர்வம் பொறுக்காமல், உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்கே 12 ஆயிரம் ரூபாய் பணமும், மூன்று மெழுகு வத்திகளும் இருந்தன.

'மெழுகுவத்தி எதற்கு?' என்று கேட்டாள் மனைவி.

'நான் உனக்குத் துரோகம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஒரு மெழுகுவத்தி வாங்கிவைப்பது வழக்கம்' என்றான் கணவன்.
30 வருடங்களில் மூன்றே முறைதான் தவறி இருக்கிறானா? மன்னிக்கத் தயாராக இருந்தாள் மனைவி.

'இந்தப் பணம்?' என்று கேட்டாள்.

'அதுவா? 100 மெழுகுவத்தி சேர்ந்துவிட்டால், அதைப் பாதி விலைக்குக் கடைக்காரனிடமே கொடுத்துவிடுவேன். அப்படிச் சேர்ந்த காசு அது' என்றான் கணவன்.

காதல் இன்றி, மனைவியாக - கணவனாக வெறும் உறவு முறையாக ஒருவரைப் பார்த்து அவருடன் வாழ்வது என்பது சித்ரவதையானது. நீங்கள் ஒருவருடன் நெருக்கமாக இணைந்து வாழ்வதில் உள்ள சுகம் காரணமாக, அவர் மீது வைத்திருக்கும் மதிப்பு காரணமாக, அன்பு காரணமாகச் சேர்ந்து இருப்பதுதான் அர்த்தம் உள்ளது. சமூகத்துக்காக மட்டுமே ஒரு நபருடன் நீங்கள் வாழ்க்கையைத் தொடர வேண்டியிருந்தால், அது நரகம்தான்.

ஒருவன் ரபியிடம் வந்தான், 'என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், தெருவில் செல்கையில் மற்ற அழகான பெண்களைக் காண்கையில் அவர்களால் தூண்டப்படுகிறேன். தவிக்கும் மனதை என்ன செய்வது?' என்று கேட்டான்.

செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

ரபி சொன்னார், 'அபார உணவு வகைகளைப் பார்த்துப் பசியை எங்கே வேண்டுமானாலும் வளர்த்துக்கொள். ஆனால், உணவுக்கு வீட்டுக்குப் போய்விடு.'

புரிந்துகொள்ளுதல் குறைந்துவிட்டதா என்று கேட்டு இருக்கிறீர்கள். 'யோகா கற்றதில், வாழ்க்கையையே புரிந்துகொண்டுவிட்டேன். ஆனால், என் மனைவியைப் புரிந்துகொள்ள முடியவில்லை' என்று என்னிடம் ஒருவர் வேடிக்கையாகச் சொன்னார்.

அடுத்தவரைப்பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளத் தலைப்படுவது மாபெரும் போராட்டம். அடுத்தவருடைய உணர்ச்சிகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் உண்மையில் நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தீர்கள் என்றால், அவர்கள் மிரண்டுவிடுவார்கள். உங்களைக் கண்டாலே அச்சம்கொள்வார்கள்.

புரிந்துகொள்வதற்கு அல்ல ஓர் உறவு. உங்கள் துணை உங்களிடம் புரிந்துகொள்ளுதலைக் கோரவில்லை. உங்களில் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்வதைத்தான் கோருகிறார்.

செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

மனிதனின் அபரிமிதமான சக்தியில் 80 முதல் 90 சதவிகிதம் பாலினம் பற்றிய குழப்பங்களில் விரயம் ஆகிறது. ஒருவர் 'இதுதான் சரி' என்கிறார். இன்னொருவர் 'இது தகாது. தவறு' என்கிறார். எதுவானாலும், வாழ்வில் மிகச் சிறு பங்கு கொடுக்க வேண்டிய பகுதி அது.

இந்தக் குழப்பங்களில் இருந்து வெளியே வருவது எப்படி? நாளின் 24 மணி நேரங்களிலும் நீங்கள் ஆண் என்றோ, பெண் என்றோ ஓர் அடையாளத்தைச் சுமந்துகொண்டு இருக்கத் தேவை இல்லை. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும், சில அவசியமான கட்டங்களிலும் மட்டும் பெண்ணாகவோ, ஆணாகவோ உங்கள் பாத்திரத்தை அடையாளப்படுத்திக்கொண்டால் போதுமானது.

மற்ற நேரங்களில், ஓர் உயிராக மட்டும் உங்களைக் கருதிச் செயல்பட்டால் போதும். ஆண், பெண் என்ற அடையாளங்களுடன் செயல்படுகையில் சில கட்டாயங்களை நீங்களே விதித்துக்கொண்டுவிடுவீர்கள். இரண்டு கட்டாயங்கள் சேர்ந்து இருக்க முடியாது. ஆனால், இரண்டு உயிர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல், சேர்ந்து வாழ முடியும்.

சொல்லப்போனால், உங்களை ஆண் என்றோ, பெண் என்றோ, அடையாளப்படுத்தாமல், அந்தக் குறுகலான வரையறைகளைத் தாண்டி, கால் எடுத்து வைக்கையில்தான், உங்கள் திறன் உச்சத்தில் செயல் படுகிறது. நீங்கள் நினைத்துப் பார்க்காத விஷயங்கள் கூடச் சாத்தியமாகின்றன!''

சத்குருவின் 'ஜென்' னல்...

ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான், ''100 வருடங்கள் கழித்து நீங்கள் எங்கே இருப்பீர்கள்?''

குரு சொன்னார், ''குதிரையாகவோ, கழுதையாகவோ நரகத்தில் இருப்பேன்.''

''இவ்வளவு ஞானியாக இருக்கும் நீங்கள் எதற்காக நரகத்துக்குப் போக வேண்டும்?''

செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்

''வேறு யார் அங்கே உனக்குக் கற்றுத் தருவார்?'' என்றார் குரு.

சத்குருவின் விளக்கம்:

கௌதம புத்தர்கூட நரகத்துக்குத்தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஏன் என்று விசாரித்தபோது அவர் சொன்னார், ''சொர்க்கத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்றால், அங்கே எனக்கு என்ன வேலை இருக்க முடியும்? நரகத்தில் இருப்பவர்கள்தாம் துன்பத்தில் உழல்வதாகச் சொல்கிறார்கள். அங்கே போனாலாவது என்னால் ஏதாவது செய்ய முடியும்!''

ஜென் குருவும் அதையேதான் சொல்கிறார். கூடுதலாகக் கொஞ்சம் நாடகத்தனம் சேர்த்து, அங்கே ஒரு கழுதையாகப் போக விரும்புவதாகச் சொல்கிறார்.

கழுதை என்பது முட்டாள் மிருகமாகக் கருதப்படுகிறது. இருந்தாலும், ஜென் குரு கழுதையாகப் போக விரும்புகிறார். ஏன்?

'என்னுடன் இவ்வளவு காலம் இருந்தும் உன்னால் மேன்மை நிலையை எட்ட முடியவில்லை. உன்னைப் போல் ஒரு கழுதையை, இன்னொரு கழுதையைத் தவிர நரகத்தில் யார் மதிப்பார்கள்? வேறு யார் சீடராக ஏற்றுக்கொள்வார்?' என்று தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் ஜென் குரு கேட்கிறார்.

அந்த அளவுக்கு மூடராக இருப்பவர்கள் மீதும் அபரிமிதமான கருணையுடன் உள்ளவரே உண்மையான குரு!

 
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
- சரி செய்வோம்...
செய் செய்யாதே! -சத்குரு ஜக்கி வாசுதேவ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு