Published:Updated:

இது புதுவை ஃபேஷன் ஷோ!

அம்மாவா... கணவனா?புதுவை அழகியின் அசத்தல் பதில்

 ##~##
பு
துச்சேரி கம்பன் கலையரங்கம் அன்று கலர்ஃபுல் அரங்கம். காரணம், 'மிஸ் புதுச்சேரி 2011’.... காம்பியராக மைக் பிடித்த எஸ்.எஸ் மியூஸிக்கின் ரிபேக்கா முதல் கேட்வாக்கைத் தொடங்கிவைக்க, அனைவரும் நிமிர்ந்து அமர்ந்தார்கள். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் , 'கோரிப்பாளையம்’ ஹாரிஷ்,  முன்னாள் 'மிஸ் சவுத் இந்தியா’ லீயானா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்கள்.  

'லீத்தல் லேடீஸ்’ அழகிகளின் நடனத்துக்கு அரங்கில் இருந்த இளசுகளும் போட்டி போட்டு ஆடியது உற்சாக கும்பமேளா. அடுத்து போட்டியாளர்களின் திறமைகளைச் சோதிக்கும் 'டேலன்ட் ரவுண்ட்’. 'அப்படிப் போடு’ பாட லுக்கு த்ரிஷாவையே தூக்கிப் பந்தாடியது டிம்பேலின் நடனம். சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா, வித்தியாசமாக தலைகீழாக மோன லிசா  ஓவியத்தை வரைந்து அசத்தினார். டேலன்ட் ரவுண்ட் முடிவில் 'பாடலுக்கு ஏற்ற காஸ்ட்யூமைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம். அதை டிம்பேல் சரியாகச் செய்தார்'' என்பது டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், ஹாரிஷ் ஆகியோரின் பாராட்டுக்கள். டிசைனர் ரவுண்டைத் தொடர்ந்து புத்தி சாதுர்யத்தைச் சோதிக்கும் ஐ.க்யூ ரவுண்ட். நடுவர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாகப் பதில் சொல்லிக்கொண்டே வந்தனர். அதில்   ஸ்ரீசித்ராவிடம் நடுவர்கள் கேட்ட கேள்வி... ''உங்கள் அம்மா, கணவர்... இருவருமே ஆபத்தில் இருக்கிறார்கள். யாரேனும் ஒருவரைத்தான் உங்களால் காப்பாற்ற முடியும்... யாரைக் காப்பாற்றுவீர்கள்?’ இதற்கு ஸ்ரீசித்ரா அளித்த பதில் அரங்கத்தையே ஒரு கணம் அமைதியில் ஆழ்த்தி, பிறகு ஆர்ப்பரிக்கச் செய்தது. அந்தப் பதில் என்னவாக இருக்கும்? யோசித்துக்கொண்டே இருங்கள்.

இது புதுவை ஃபேஷன் ஷோ!

நிகழ்ச்சியின் இறுதியில் 'மிஸ் டேலன்ட்டாக’ ரேஷ்மாவும், சிறந்த போட்டோஜெனிக் முகமாக சரண்யாவும், ஃப்யூச்சர் பிராமிஸிங் ஃபேஸ் ஆக டிங்கிளும், சிறந்த ஸ்மைலி பெண்ணாக பிலாந்தீனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 'மிஸ் புதுச்சேரி-2011’ பட்டம் தட்டியது ஸ்ரீசித்ரா. அழகைத் தாண்டி ஐ.க்யூ ரவுண்டில் ஸ்ரீசித்ரா அளித்த பதிலும் அவரது ஸ்கோரை ஒரேடியாக உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அவர் சொன்ன பதில்...

'கண்டிப்பாக நான் என் அம்மாவைத்தான் காப்பாற்றுவேன். ஏனெனில் இரண்டாவது கணவர் கூடக் கிடைப்பார். ஆனால்... அம்மா?’

செம டச்சிங்ப்பா!

- நா.இள.அறவாழி,  படங்கள்:ஜெ.முருகன்    

அடுத்த கட்டுரைக்கு