Published:Updated:

ஒரு மரம் கிடைச்சா விட மாட்டீங்களே!

மரத்தடியில் அரட்டை மாநாடு!

ஒரு மரம் கிடைச்சா விட மாட்டீங்களே!

மரத்தடியில் அரட்டை மாநாடு!

Published:Updated:
##~##
து ஒரு சனிக்கிழமை காலைப் பொழுது. வேலூரை அடுத்த ஊசூர். ஆலமரம் பிரமாண்டமாக நிற்க, கீழே கல் பெஞ்ச்சில் இரண்டு பேர் பீடி இழுத்துக்கொண்டு இருந்தனர். ''யோவ் காலங்கார்த்தால வேலைக்குப் போகாம இங்க ஒக்காந்துக்கிட்டு என்னய்யா பண்றே?'' கணீர் குரலில் ஒரு பெண்மணி அந்த லுங்கி  நபரிடம் கேட்க,  ''இல்லம்மா, லேசா நெஞ்சடைச்ச மாதிரி இருக்கு. நான் ஓனர்கிட்ட போன் போட்டுச் சொல்லிட்டேன். நீ போய் வேலையைப் பாரு!'' என்றார் அலுப்பாக. ''வாரத்துல ஏழு நாளுமே உனக்கு நெஞ்சு அடைக்குது. ஒரேயடியாப் போய்ட்டா பிரச்னையே இல்லை!'' கோபமும் அழுகையுமாக அந்தப் பெண்மணி திரும்பிச் செல்ல, சிரித்துக்கொண்டார் லுங்கி.
ஒரு மரம் கிடைச்சா விட மாட்டீங்களே!

''டேய் ரங்கசாமி... தங்கச்சி ஏன் இப்படி அழுதுக்கிட்டு போறா? நீ ஏன் இப்படிப் பண்றே?'' என்று பாக்கெட்டில் இருந்து பீடியை எடுத்தபடியே துரைசிங்கம் கேட்க, ''பின்ன என்ன பண்றது? லெதர் ஃபேக்டரி உள்ளே போனாலே, உசுர வாங்குறானுங்க. அதான் வேற வேலை தேடிக்கிட்டு இருக்கேன். அப்படியே ஒரு பீடி குடேன்!'' என்று ரங்கசாமி கேட்க, பீடி இடம் மாறுகிறது. ''நானும் ஒரு வாரமாப்

ஒரு மரம் கிடைச்சா விட மாட்டீங்களே!

பாக்குறேன் இங்கேயே உட்கார்ந்துக்கிட்டு இருக்கே. எப்படித்தான் உருப்படப்போறியோ?'' பீடி இரவல் தந்த பெருமை யில் துரைசிங்கம் வார்த்தைகளைவிட ரங்கசாமி கடுப்பானார். அந்த நேரம் பார்த்து, இரண்டு சீனியர் சிட்டிசன்கள் சிரித்தபடியே அங்கு வந்து அமர்கிறார்கள். ''ஏன் மாமா ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க? காலையிலேயே மெடிக்கல் ஷாப் போய்ட்டு வர்றீங்களா? ('மெடிக்கல் ஷாப்’ என்றால் 'டாஸ்மாக்’ என்று பொருள் கொள்க!) ''அட அதை ஏன்டா ஞாபகப்படுத்துற? கைல நயா பைசா இல்லாம உட்காந்துருக்கோம். இதுல நீ வேற!'' தோளில் இருக்கும் துண்டை சரிசெய்தபடி சின்னை யன் பேச, மாரிமுத்து கவுண்டரும் அதை ஆமோதிக்கிறார். ''சரி சரி டீ சொல்லு, பசிக்குது'' என்கிற மாரிமுத்து கவுண்டரிடம், ''இது வேறயா'' என்று அலுத்துக்கொண்டே போனார் துரை சிங்கம்.

சிறிது நேரத்தில் ஒரு பெரிய சொம்பில் டீயையும் நான்கு டம்ளர்களையும் கக்கத்தில் செய்தித்தாளையும் இடுக்கிக்கொண்டு வந்தார் துரைசிங்கம். நான்கு பேரும் டீயைக் குடித்துக்கொண்டே ஆளுக்கொரு தாளாக பேப்பரைப் புரட்டினார்கள். ''என்னப்பா போட்டு இருக்கானுங்க. அப்படியே படிச்சு சொல்லு. வரவர கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது!'' என மாரிமுத்து கவுண்டர் கூற, ''மாமா கண்ணு தெரியலைன்னு சொல்லாத... படிக்கத் தெரியலைன்னு சொல்லு!'' என   ரங்கசாமி கவுன்ட்டர் கொடுக்க பலத்த சிரிப்பொலி. ''அட ஏம்பா... அந்தம்மா பண்ற அநியாயத்துல கூட்டணி முறிஞ்சிடும் போலிருக்கே'' என்று ஆதங்கமானார் மாரிமுத்து. ''ஏ மாமா... நீ கருணாநிதியே ரெட்டை இலையில நின்னாலும் இலைக்குத்தானே போடப்போற... அப்புறம் என்ன லூஸுல வுடு!'' என்று கிண்டலடித்தார் துரைசிங்கம்.

''அந்த கருமத்தை விடுங்கப்பா. மாமா எங்கே தாயக்கட்டை? இன்னிக்கு ரெண்டு ரூவா பந்தயம்... ஓ.கே-வா?'' என்று கந்தசாமி கேட்க, 'சரி பார்த்துடலாம்!’ என்று நாலு பேரும் தாயக்கட்டம் போட்டு ஆட்டத்தில் ஐக்கியமானார்கள்.

அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தது தாய ஆட்டம்!

- கே.ஏ.சசிகுமார், படங்கள்: ச.வெங்கடேசன்

ஒரு மரம் கிடைச்சா விட மாட்டீங்களே!