Published:Updated:

ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!

ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!

பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
காஷ்யபன்,ஓவியம்: ஜெ.பி., படம்: பொன்.காசிராஜன்
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
ஆலயம் ஆயிரம்
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!

யோத்தியின் அரச குமாரனான ரகுராமர் அரியணை ஏற வேண்டிய தருணத்தில், சிற்றன்னை கைகேயியின் சிறுமதி காரணமாக, கட்டிய மனைவியுடன் கானகம் ஏகினார். இளவல் லட்சுமணனும் அவர்களோடு நடந்தான். கானகத்தில் ராவணன் சீதையைச் சிறைஎடுத்தான். அன்னை எங்கே இருக்கிறாள் என்பதை அறியாத ராமர் அவளைத் தேடி வருங்கால், ஆஞ்சநேயரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் மாருதியே தனது மனையாள் இருக்கும் இடத்தை அறிந்துவரத் தகுதியானவன் என்பதை உணர்ந்தார்.

ஆஞ்சநேயரும் அண்ணல் ராமரே, தான் அடிமைச் சேவகம் புரியவேண்டிய அவதார புருஷர் என்பதை அறிந்தார். அவர் திருவடி பணிந்தார். மாருதியிடம் அண்ணல், மைதிலி இருக்கும் இடத்தைக் கண்டு வரப் பணித்தார். அது மட்டுமல்லாமல்; அன்னையைக் கண்டால் அவளிடம் தனது செய்தியாகச் சொல்ல வேண்டியதை ஆஞ்சநேயரின் செவியருகில் செப்பினார். அண் ணலின் சொற்களைச் செவி மடுக்கலாகாது என்று இளவ லும் அவர்களிடம் இருந்து விலகி நின்றார்.

ஆஞ்சநேயர், அண்ணலிடம் இருந்து விடைபெற உத்தரவு வேண்டினார். அவ்வமயம் ஆஞ்சநேயருக்குப் பிரியமான அவலைச் சிறு மூட்டையாகக் கட்டி அவரிடம் நல்கினார் ராமர்.

அதனைப் பெற்றுக்கொண்ட அனுமன், அண்டத்தில் உறையும் அத்தனை சக்திகளையும் வணங்கி நின்றான். சீதையைத் தேடி இலங்கைக்குப் புறப்பட்ட ஆஞ்சநேய ரின் பணி செவ்வனே நிறைவேற முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆசி வழங்கினார்கள்.

அந்த ஆசி ஆஞ்சநேயரின் பலத்தைப் பன்மடங்கு பெருக்கியது. அவர் விசுவரூபம் எடுத்தார்... விண்ணில் ஏகினார்.

ஆஞ்சநேயர், அண்ணல் ராமரிடம் இருந்து விடைபெற்று விண்ணேகிய தலத்தில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வசிஷ்டர் ராம விக்கிரகத்தையும், ஆஞ்சநேய விக்கிரகத்தையும் பிரதிஷ்டைசெய் தார் என்று கருதப்படுகிறது.

கேரளத்தின் மலைப்புறம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் பிரதிஷ்டை ஆகியிருந்த அந்த ராம விக்கிரகத்தைக் கருவறையாகக்கொண்டு ஆங்கோர் ஆலயம் எழுப்பப்பட்டது. அருகிலேயே இருந்த ஆஞ்சநேய மூர்த்திக்கும் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டது.

அழகான ஆலயம். கருவறைக்கு முன்பாக மரக்கூரையுடன் துலங்கும் அலங்கார நமஸ்கார மண்டபம். கருவறை வாசலின் இருபுறங்களிலும் அழகிய துவார பாலகர்கள்.

ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!

கருவறையில் மூலவராக ஸ்ரீராமர். சீதை இல்லை. சீதையைத் தேடிச் செல்லும் உத்தம பக்தனாகிய ஹனுமாருக்கு சீதைக்குச் சொல்ல வேண்டிய அடையாள வாக்கியத்தைக் காதில் சொல்லிக் கொடுக்கும் பாவத்தில் நிற்கிறார் ராமர். கருவறைக்கு அருகில் இருக்கும் சந்நிதியில், தன் சுவாமி சொல்வதைக் கூர்ந்து கேட்கும் பாவத்தில், தலையைச் சற்று சரித்து, கதையுடன் தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர்.

இந்த மூர்த்தி ஸ்ரீராமதூத அனுமார் ஆவார். இந்த ஒளிமிக்க உருவத்தை வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறுவது திண்ணம்.

இவருக்கு ராமர் அவல் நல்கியதைக் கருத்தில் கொண்டு, எடுத்த காரியங்களில் வெற்றிபெற அனு மனுக்கு அவல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அனைத்து தினங்களிலும் அந்தியில் அவல் பிரசா தம் வழங்கப்படுகிறது.

துஞ்சத்து எழுத்தச்சன் இவருடைய பரம பக்தர். அவர் எழுதிய ராமாயணத்தில் சுந்தரகாண்டத்துக்குத் தனி அங்கீகாரம் கிடைக்க இந்த ராமதூத ஆஞ்சநேயரே காரணமாகக் கருதப்படுகிறார்.

கருவறையின் சரிவான கூரையை மர வேலைப்பாடு மிக்க யானைகள் தாங்கி நிற்கின்றன. கருவறை வெளிச் சுவர் முழுக்க ராமர், சிவன், ஆஞ்சநேயர், வராகர் என்று கதகளி பாணியில் அமைந்த ஓவியங்கள்.

வெளிப் பிராகாரத்தில், ஆஞ்சநேயர் விசுவரூபம் எடுத்து விண்ணில் ஏகியதை நினைவுகூரும் வண்ணம் ஒரு கல் திட்டு காணப்படுகிறது.

ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!

ராமர் ஹனுமாருக்குச் செவியில் சொல்வது தனக்குக் கேட்காதிருக்க, லட்சுமணன் சற்று தூர தள்ளி நின்றதைக் கருத்தில்கொண்டு, லட்சுமணன் கோயில் சற்று தூரத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத் திருக்குளம் தெள்ளிய நீருடன் ஆங்காங்கே அல்லிகளுடன் தோற்றம் அளிக்கிறது. அதில் எந்நேரமும் பக்தர்கள் நீராடுகிறார்கள்.

குளத்துக்கு அருகில் ஐயப்பன் சந்நிதி. விநாயகர், துர்கை, விஷ்ணு, பத்ரகாளி ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் துலங்குகின்றன.

ஆழ்ந்த பக்திக்கும், சக்திக்கும், ஞானத்துக்கும், அமைதிக்கும், தியாகத்துக்கும் உத்தம உதாரணமாகத் திகழ்பவர் ஆஞ்சநேயர்.

சனி தோஷம் அகல ஆஞ்சநேய வழிபாடு மிகவும் உகந்தது. சிவபெருமானையே சனி பிடித்து உலுக்கி இருக்கிறது. ஆனால், வீர ஆஞ்சநேயர் தன் பலத் தால் சனீஸ்வரரை வென்று, அவரிடமே தன் பக்தர் யாவரையும் தொடுவது இல்லை என்று உறுதிமொழி யும் பெற்றுள்ளார்.

உடல் உபாதைகள், உள நோய்கள், ஏழ்மை, விரோதிகள் போன்ற எல்லா துக்கங்களையும் அடியோடு மாற்றி இன்பமும், திருப்தியும், செல்வமும், சகல நன்மைகளும் அருளுகிற ஆலத்தியூர் ஸ்ரீபெரும் திருக்கோயில் ஆஞ்சநேயரை தரிசித்து அவர் அரு ளைப் பெறுவோமாக!

உங்கள் கவனத்துக்கு

தலத்தின் பெயர்: ஆலத்தியூர். சுவாமியின் திருநாமம்: ஸ்ரீராமர், ஆஞ்சநேயர். எங்கே உள்ளது: கேரளாவில். எப்படிப் போவது: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் ரயிலில் சென்று திரூரில் இறங்கினால், அங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆலத்தியூருக்குப் பேருந்து, கார் மற்றும் ஆட்டோவில் செல்லலாம். எங்கே தங்குவது: திரூரில் தங்கும் விடுதிகளும் உணவு விடுதிகளும் உள்ளன. தரிசன நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை; மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை!

 
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
-தரிசிப்போம்...
ஆலயம் ஆயிரம் -தோஷங்களைத் தொலைக்கும் ஆலத்தியூர் ஆஞ்சநேயர்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு