Published:Updated:

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

கல்வியே வேள்வியாய்...

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

கல்வியே வேள்வியாய்...

Published:Updated:
##~##
சிரியர்களுடன் ஆங்கிலத்தில் சகஜமாக உரையாடும் குழந்தைகள், ஆர்வத்தோடு பாடத்தைக் கவனிக்கும் மாணவர்கள், வெறுமனே பாடப் புத்தகங்களின் பக்கங்களுக்குள் தங்கள் பள்ளி வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்ளா மல் யோகா, நாடகம், நடனம், கம்ப்யூட்டர், உலக நடப்பு கள் என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்கள், பளிச்சென காட்சியளிக்கும் பள்ளி வளாகம்! இப்படி ஒரு காட்சியைக் கற்பனை செய்தால், ஆயிரக்கணக்கில் ஃபீஸ் வசூலிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளோ, காரில் குழந்தைகள் வந்து இறங்கும் கான்வென்ட்டுகளோதானே உங்கள் மனதில் நிழலாடும். ஆனால்,  கொஞ்சம் மாத்தி யோசியுங்கள்!
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் திருவண்ணாமலை, அருணாச்சலா விஷன் பள்ளியின் காட்சிகள். ஆனால், இங்கே படிக்கும் குழந்தைகளோ அடுத்த வேளை உணவு கிடைக்காமல் அவதிப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அல்லது அப்பா, அம்மாவை இழந்தவர்களாக இருப்பார்கள். பள்ளியின் நிர்வாக இயக்குநர் மதன் மோகன் பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு, ஏழைக் குழந்தைகள் கல்வி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இந்தப் பள்ளியைத் துவங்கி இருக்கிறார். 205 மாணவர்கள் படிக்கும் இப் பள்ளியின் குழந்தைகள் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் கல்வியை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள். ''என் சொந்த

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

கிராமம் வேடியப்பனூர். அப்பா கூலி வேலை செய்றாரு. நிறைய பணக்கஷ்டம். என்னைப் படிக்கவைக்க முடியலை. அப்புறம்தான் இங்கே கொண்டுவந்து சேர்த்தாரு. முதல் நாள் கால்ல செருப்பே இல்லாம வந்தேன். இப்போ இந்தா போட்டிருக்கேனே ஷூ... இது ஸ்கூல்ல தந்தது!'' என்று பளபள ஷூக்களைக் காட்டும்போது மூன்றாம் வகுப்பு வைஷ்ணவியின் கண்களில் பளபள ஒளி. ஒன்றாம் வகுப்பு தொடங்கி, ஐந்தாம் வகுப்பு வரை இங்கு எல்லாமே  செயல்வழிக் கற்றல் முறைதான். அதைவிட குறிப்பிடத்தக்க அம்சம்... இங்கு படிக்கும் குழந்தைகளுக்குச் சுற்றுச்சூழலைக் காக்கும் அவசியம் குறித்த விழிப்பு உணர்வும் புகட்டப்படுவதுதான்.

திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது இங்கு பாடம் எடுக்கிறார்கள். பாட்டு, நடனம் என வெளிநாட்டினர் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவதைப் பார்ப்பதே, ஒரு குதூகல அனுபவமாக இருக்கிறது. பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயமும் உண்டு. இவ்வளாகத்தில் சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலமான இயற்கை விவசாயம் பசுமையும் புஷ்டியுமான காய்கறிகளை விளைவிக்க, சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறினார்களாம். சோலார் பேனல் மூலம் சிறிய அளவில் மின்சாரமும்கூட உற்பத்தி செய்கிறார்கள்.

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

''எங்கள் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிபாரிசோட நிறையப் பேர் வருவாங்க. ஆனா, நாங்கள் படிக்க ஆசைப்பட்டு படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டும்தான் சீட் கொடுப்போம்னு தெளிவா சொல்லிடுவோம். இதனால் சில சங்கடங்களை அனுபவித்ததும் உண்டு!'' என்கிறார் மதன்மோகன். ''பள்ளி மட்டுமில்லை. அருணாச்சலா மொபைல் மருத்துவமனை என ஒன்றை உருவாக்கி மலைவாழ் மக்களுக்கு இலவச சேவை செய்து வருகிறோம். ஆனால், அதற்கு சரியான மருத்துவர்கள் கிடைக்காமல் நாங்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. என் சொந்த செலவிலும், விரும்புபவர்கள் அளிக்கும் நன்கொடையிலும்தான் இந்தப் பள்ளி நடைபெறுகிறது. இப்போதும் பன்னாட்டு நிறுவனங்களில் அவ்வப்போது வகுப்பு எடுத்து அதன் மூலம் வரும்   வருமானத்தைப் பள்ளி மேம்பாட்டுக்கு என செலவிடுகிறேன். நிச்சயமாக மற்ற பள்ளிக் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் 100 சதவிகிதம் வித்தியாசம் உண்டு. வருங்கால இந்தியா வளர்ச்சி அடைந்த ஒன்றாக இருக்கும் என்பதை எங்கள் பள்ளி மாணவர்களிடம் பேசினால், தெரிந்துகொள்ளலாம்!'' என்கிறார் மதன் மோகன் நம்பிக்கையு டன். 2010-ம் வருடத்துக்கான மத்திய அரசின் சிறந்த சேவகர் விருது பெற்றவர் இவர்.                    

எதிர்காலம் குறித்து நமக்குள் நம்பிக்கையை விதைப்பது இவர் போன்ற மனிதர்கள்தானே!

- யா.நபீசா