Published:Updated:

கோல்டன் கேர்ள்ஸ்!

கோல்டன் கேர்ள்ஸ்!

கோல்டன் கேர்ள்ஸ்!

கோல்டன் கேர்ள்ஸ்!

Published:Updated:
##~##
சு
மித்ரா, அபராஜிதா... இருவரும்தான்  சென்னையின் கோல்டன் கேர்ள்ஸ்!

சமீபத்தில் ஜார்கண்ட் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கராத்தே மற்றும் ஸ்குவாஷ் தனி நபர் போட்டிகளில் தங்கம் வென்று திரும்பி இருக்கிறார்கள் இந்த சென்னைப் பெண்கள். தற்போது பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் 'கராத்தே’ சுமித்ரா. ''நாங்கள் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா... கராத்தே பயிற்சியாளர். எப்போதும் வீட்டில் ஹூ...ஹா... சத்தம்தான். அதனால், இரண்டரை வயதில் இருந்தே நானும் கராத்தே கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். ஏழு வயசுல 50 பேரோட சண்டை போடணும்னு அப்பா கிரவுண்டுல கொண்டுவந்துவிட்டார். ஒரு மணி நேரம் என்னை அடிக்க வர்ற 50 பேரையும் சமாளிச்சு, ஒரு அடியும் வாங்காமல் தடுக்கவும் அடிக்கவும் செய்யணும். இதில் ஆண்கள், பெண்கள் என பிளாக் பெல்ட் வாங்கியவர்கள்கூட இருந்தார்கள். ஒரு மணி நேரம் ஓர் அடிகூட வாங்காமல் தடுத்து விளையாடினேன். என் குரு ப்ளஸ் அப்பாவை சந்தோஷப்படவும் பெருமைப்படவும் வைத்த முதல் தருணம் அது.  ஒன்பது வயதில் மீண்டும் 100 பேருடன் இரண்டு மணி நேரம் தொடர்ந்து சண்டை போட்டேன். 12 வயதில் தேசிய கராத்தே ஃபெடரேஷன் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் முதல் முறையாக தேசிய அடையாளம் கிடைத்தது!

கோல்டன் கேர்ள்ஸ்!

ஜார்கண்ட் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ரொம்பக் கடுமையாக இருந்தது. பொதுவாக மத்தியப் பிரதேச வீரர்கள்தான் கராத்தேயில் அதிக வெற்றிகளைக் குவிப்பார்கள். ஆனால், இந்த முறை நிச்சயம் தங்கப் பதக்கத்தை வென்றே ஆக வேண்டும் என்கிற வெறி எனக்குள் எழுந்தது. ஆனால், இந்த வெறிதான் என்னுடைய மைனஸும்கூட.  ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியில் எதிரில் இருக்கிறவர்களை உணர்ச்சிவசப்பட்டு ஓவராகவே அடித்துவிடுவேன். எதிர் வீரருக்கு முகத்தில் அடிபட்டாலே  அடித்தவருக்கு மைனஸ் பாயின்ட் கொடுப்பார்கள். காமென்வெல்த் ஃபெடரேஷன் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை நான் மிஸ் செய்ய இதுவும் ஒரு காரணம். இந்த முறை ஜார்கண்ட் போட்டியில் மனதை ஒருமுகப்படுத்தி ஆக்ரோஷமாக விளையாடினாலும், கவனத்தை சிதறவிடாமல் சரியான அடிகளை அடித்தேன். தங்கப் பதக்கம் தட்டினேன்!'' -என்கிறார் சுமித்ரா.

தீபிகா பாலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா என ஸ்குவாஷில் பட்டையைக் கிளப்பும் தமிழக ப்ளேயர்கள் வரிசையில் புது வரவு... அபராஜிதா பாலமுருகன். 12-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு உற்சாகத்துடன் வந்த அபராஜிதாவைச் சந்தித்தோம்.

கோல்டன் கேர்ள்ஸ்!

''டி.வி அதிகம் பார்க்காமல், அதே நேரம் வெயிலிலும் வாடி வதங்காமல் ஏதாவது விளையாட வேண்டும் என்று சும்மாச்சுக்கும்தான்  ஸ்குவாஷ் பயிற்சியில் என்னைச் சேர்த்தார் என் அம்மா. ஆனால், தொடர்ந்து நான் பெற்ற வெற்றிகளைப் பார்த்து புரொஃபஷனல்  ஸ்குவாஷில் ஈடுபட என்னை ஊக்குவித்தார்கள் என் பெற்றோர்.  

விளையாடினால், படிப்பில் காலி ஆகிவிடுவோம் என்பது எல்லாம் கப்ஸா. உண்மையைச் சொல்வது என்றால், விளையாடுவதால்தான், என்னால் மிகக் கவனமாகப் படிக்கவே முடிகிறது. எந்த ஒரு விளையாட்டிலுமே கவனம் சிதறாமல் விளையாடினால்தான், வெற்றி பெற முடியும். தொடர்ந்து விளையாடுவதால், நம் கான்சன்ட் ரேஷன் லெவல் அதிகமாகவே இருக்கும். அதனால், வழக்கத்தைவிட சீக்கிரமே படித்து பாடத்தைப் புரிந்துகொள்வோம். நாங்கள் படிப்பிலும் கில்லி!'' என்று பயிற்சிக்குத் தயாராகிறார் அபராஜிதா!  

- சார்லஸ்
படங்கள்: கே.கார்த்திகேயன்