Published:Updated:

''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''
இணைப்பு : சென்டிமென்ட் விகடன்
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

இவங்க இப்படியாம்!

''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

கருணாநிதி:

முக்கியமான சுற்றுப் பயணங்கள்அனைத் தையும் தனது கோபாலபுரம் வீட்டில் இருந்துதான் தொடங்குவார்!

ஜெயலலிதா:

பிரவுன் நிறத்தில் இருந்து பச்சை நிறத் துக்கு மாறியவர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்... திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்று இஷ்ட தெய்வங்களையும் மாற்றினார்.வேட் பாளர் பட்டியலை ஏதாவது ஒரு கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து வணங்குவது அம்மாவின் நிரந்தர சென்டிமென்ட்!

விஜயகாந்த்:

மனைவி பிரேமலதா அருகில் இருக்கும்போது எதைத் தொடங்கினாலும் துலங்கும் என்பது கேப்டனின் எண்ணம். சினிமாவுக்குக் கதை கேட்கும்போதுகூட பிரேமலதாவும் கூடவே இருப்பார்!

வைகோ:

கலிங்கப்பட்டியில் இருந்து கிளம்பும்போது தன் அம்மா மாரியம்மாவின் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்!

ஜி.கே.வாசன்:

எப்போதும் தேர்தல் சுற்றுப் பயணத்தை மாங்காடு மாரியம்மன் கோயிலில் தொடங்கி காஞ்சி காமாட்சியை வணங்கி முடிப்பார்!

தங்கபாலு:

ஜோசியம், ஜாதகம், குறி, தாயத்து, வாஸ்து என சகல சென்டிமென்ட்களும் சாருக்கு உண்டு. சத்தியமூர்த்தி பவன் அறைகளை மாற்றி அமைத்தது முதல் அங்கே இருந்த மரங்களை வெட்டியது வரை எல்லாம் இவரது யோசனையே!

ராமதாஸ்:

'தைலாபுரம்' தோட்டத்தில் இருந்து தான் முக்கிய முடிவுகளை அறிவிப்பார். சென்னை உள்பட எந்த வெளியூரிலும் டாக்டரால் 2 நாட்களுக்கு மேல் தங்க முடியாது. மூன்றாவது நாள் காரை தைலாபுரத்துக்கு விரட்டிவிடுவார்!

சரத்குமார்:

வலது கையில்தான் வாட்ச் கட்டுவார். எம்.ஜி.ஆரும் அப்படியேவாம். ஓஹோ!

ஷேர் அழகி!

''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''

சென்டிமென்ட் என்று எதுவுமே கிடையாது. ஆனாலும் தினமும் படப்பிடிப்பில் நடந்தது, தன்னைப் பாதித்தது என்று அன்று நடந்த விஷயங்களை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளாமல் உறங்க மாட்டார் ப்ரியாமணி!

 
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''
-ப.திருமாவேலன்
''நானும் எம்.ஜி.ஆர். தாங்கோ!''