ஹாய் மதன்-கேள்வி பதில்

டைனோசர் முட்டை?!

வை.கிருஷ்ணன், காரைக்கால்.

விலங்குகளுக்கு வெளிக் காது மடல் இருப்பது போல, எந்த வகை டைனோசர்களுக்குமே காது மடல் இருந்தது இல்லையா?

பல்லிக்குக் காது கிடையாது இல்லையா? டைனோசர் என்பதும் பிரமாண்டமான பல்லியே! அது ஊர்வன (reptile) பிரிவைச் சேர்ந்தது. பாம்பு உட்பட எந்த reptile உயிரினத்துக்கும் காது கிடையாது. உலகைச் சுமார் ஒன்றரைக் கோடி ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் முற்றிலும்அழிந்து போயின. டைனோசர்கள் வசித்தபோது மனித இனமே கிடையாது. போன வாரம் தமிழ்நாட்டில் டைனோசர் முட்டைகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. உங்கள் கேள்விக்கு அடித்தது சான்ஸ்!

அ.குணசேகரன், புவனகிரி.
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகள் தேவையா?

அது ஒருவகையான அங்கீகாரம் மட்டுமே! பண்டைய காலத்தில் மன்னர்கள் புலவர்களுக்கு முத்துமாலை தந்தது போல! இப்போது மந்திரிகள்! பாரபட்சங்கள் நிச்சயம் இருக்கும். ஏகாதிபத்திய வல்லரசான அமெரிக்காவின் பிரதிநிதியான கிஸ்ஸிஞ்சருக்கு (அமைதிக்கான!) நோபல் பரிசே தரப்பட்டது! ஆகவே, எந்த விருதையும் வாங்கிவிடுவதனாலேயே ஒருவர் அதற்கான தகுதி பெற்றவர் என்று நாம் முடிவுக்கு வர வேண்டாம்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!

எருமை, பொறுமையாக அசைந்தாடிச் செல்லும் வாகனம். உயிரைப் பறிக்கச் செல்லும் எமனுக்கு வாகனமாக எருமையை வைத்ததற்கு என்ன காரணம் இருந்திருக்கலாம்?
எனக்குத் தெரிந்த வரையில் (அது ரொம்பக் கொஞ்சம்!) புராணங்களில் எமனுக்கு வாகனம் எருமை என்று குறிப்புகள் எதுவும் இல்லை! பிற்பாடு, அது மனிதர்கள் எமனுக்குத் தந்த வாகனமாகி இருக்கலாம். எருமையின் வெறித்த பார்வையைக் காணும் போது அதற்கு இம்மை, மறுமை என எல்லா ரகசியங் களும் தெரியுமோ என்கிற சந்தேகம் வருகிறது! எருமையை விடுங்கள்... எமனே இல்லாமல் இருந்த ஒரு யுகம் உண்டு. முதல் யுகமான கிருத யுகம். அப்போது இறப்பே நிகழாமல், மக்கள் தொகை தாங்க முடியாத அளவுக்குப் போய், பூமி அமிழ்ந்து போக ஆரம்பிக்க, பூமாதேவி கலங்கிப்போய் விஷ்ணுவிடம் ஓடினாள். விஷ்ணு வராகமாக மாறி, பூமியைத் தூக்கி நிறுத்தி, கூடவே எமனையும் படைத்தார் என்று மகாபாரதத்தில் வருகிறது.

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
Nature-க்கும் Science-க்கும் என்ன வேறுபாடு?

இயற்கையைப் புரிந்துகொள்வதும், ஆராய்வதும், அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் விஞ்ஞானம். தாய் இல்லாமல் சேய் இல்லை என்பது போல், இயற்கை இல்லாமல் விஞ்ஞானம் இல்லை!

எம்.முஹம்மது நூருல்லாஹ், அரங்கக்குடி.
Dictionary என்ற சொல்லுக்கு நிகராக Lexincon என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா?

பெரிய தப்பில்லை! Dictionary -யில் உள்ள Dic என்பது சம்ஸ்கிருதத்தில் இருந்து லத்தீனுக்குப் போன வார்த்தை என்கிறார்கள்! Dic-டிக்-திக்கு (திசை!). ஆரம்பத்தில் 'திக்' என்றால், 'குறிப்பிட்டுச் சொல்வது' என்று அர்த்தம் இருந்தது. டிக்ஷனரியைத் தயாரிப்பவருக்கு lexicographer என்று பெயர் உண்டு (கிரேக்கம்). அதிலிருந்து Lexicon வந்தது. இருப்பினும், 'குறிப்பிட்டு (அர்த்தம்) சொல்வது' டிக்ஷனரிதான். Lexicon-ல் மேலும் பரவலான தகவல்கள்கூட இருக்கலாம்!

புத்தார்தா, காரைக்குடி.
'அந்த' விஷயங்களைக் கற்றுத்தரும் புத்தகங்களில் ஆகச் சிறந்ததாக எந்தப் புத்தகத்தைச் சொல்வீர்கள்?

'புத்தா'ர்த்தா கேட்கிற கேள்வியா இது?! சென்னையில் உள்ள பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்றால், 'அந்த' விஷயங்களைப் பற்றிய புத்தகங்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் காணலாம்! (நாம் சுமார் 100 புத்தகங்கள் படித்திருந்தால் அதிகம்!). ஆகவே, சிறந்த புத்தகத்தைச் சொல்வதற்கான தகுதி எனக்குக் கிடையாது. எனவே, நீங்களே புரட்டிப் பார்த்து, பொருளடக்கம் மற்றும் சில பக்கங்களை அங்கேயே படித்துத் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்!