Published:Updated:

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

Published:Updated:
##~##
ரு வகுப்பறையின் சந்தோஷங்கள், சோகங்கள், குறும்புகள், விளையாட்டு, படிப்பு என கடந்து போன அரை நாள் சந்திப்பு இதோ...

தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் உள்ள சங்கர நாராயணன் நினைவு நடுநிலைப் பள்ளி யில் மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்தோம். செயல் வழிக் கற்றல் முறை என்பதால் இறை வணக்கம் முடிந்ததும் ஆசிரியர் பொது வருகைப் பதிவேட்டில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்த பின், தாங்களாகவே தங்கள் அட்டையில் வருகையைப் பதிவு செய்து கொள்கிறார்கள் மாணவர்கள்.

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

அடுத்ததாக, அன்றைய வானிலை எப்படி இருக்கிறது என்பதைக் கவனிக்கிறார்கள். வெயில் அதிகம் என்றால் சூரியன் படத்தையும், மேக மூட்டமாக இருந்தால் மேகத்தின் படமும், மழை என்றால் குடை மற்றும் மழைத் துளியின் படத்தையும் வரைய வேண்டும். அன்றைக்கு கால நிலையை கணிக்க வேண்டிய மாணவியை காணவில்லை. ''எங்கே உமாவைக் காணோம்'' என்று ஆசிரியைக் கேட்க, மூச்சு இரைத்தபடி வகுப்பறைக்குள் நுழைகிறாள் உமா. ''டீச்சர் எங்க வீட்டுல அஞ்சு பிள்ளைங்க. அப்பா, விடியக் காத்தால எந்திருச்சு தென்னை மரம் ஏறப் போயிட்டாரு. அம்மா, சித்தாளுவேலைக்கு போயிருச்சு. நானும் அக்காவும் சேர்ந்து சோறாக்கி வெச்சிட்டு வரணும் டீச்சர். அதான் லேட்டாயிடுச்சு'' கை கட்டியபடி உமா சொல்ல, 'சரிம்மா போய் உட்காரு' என்று அனுமதிக்கிறார் ஆசிரியை.

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

28 மொட்டுகள் உள்ள வகுப்பறையில் 27 மலர்கள் மட்டும்தான் மலர்ந்து இருக்கின்றன. ''திருவேங்கடத்தை எங்கேடா காணோம்? அவ னுக்கு பக்கத்து வீட்டுக்காரன் யாருடா?'' என்று ஆசிரியைக் கேட்க, எழுந்து நிற்கிறான் பக்கத்து வீட்டு ஐயப்பன். ''அவங்க அப்பாவால  நடக்க முடியாதுங்க டீச்சர். யாராச்சும் தள்ளு வண்டியில தள்ளிட்டுப் போகணும்.  பெரியகுளம்வரைக் கும் அப்பா வண்டியை தள்ளப் போறேன்னு சொல்லிட்டுப் போனான் டீச்சர். உங்கக்கிட்டே சொல்லச் சொன்னான். நான்தான் மறந்துட் டேன் டீச்சர்'' என்று, சொல்ல மறந்த குற்ற உணர்ச்சியுடன் பேசுகிறான் ஐயப்பன்.

'தினமும் நியூஸ் பேப்பர் படிக்கச் சொன் னேனே, படிச்சீங்களா?'' என்று ஆசிரியை கேட்க,  ''படிச்சோம் டீச்சர்'' என்று கோரஸாக பதில் வருகிறது. அப்போது யாரும் எதிர் பார்க்காத ஒரு கேள்வியைக் கேட்டான் மாணவன் மனோஜ்குமார்.''பேப்பர்ல, ஆசாமிங்கிற ஆள்தான் வீட்டுக்குள்ள புகுந்து நகையைத் திருடிட்டாரு, கொலை செஞ்சுட் டாருன்னு நிறைய எழுதுறாங்க. அந்த ஆசாமி ரொம்பக் கெட்டவரா, டீச்சர்?'' என்று மனோஜ் மழலையில் கேட்க, சிரித்துவிட்டார் ஆசிரியை. 'ஆசாமின்னா பேர் தெரியாத ஆளுன்னு அர்த்தம்’ என்று விளக்கம் கொடுக்க, மனோஜ் முகத்தில் திருப்தி.

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

அடுத்ததாக ஆங்கில வகுப்பு. ஒவ்வொரு வருக்கும் என்ன அட்டைகள் வருகிறதோ அதைச் செய்து காட்ட வேண்டும். 'ஸ்லீப்’ என்ற அட்டையை எடுத்த அருண் பாண்டியன் என்ற மாணவன் 'எஸ்...எல்...ஈ...ஈ...பி..  ஸ்லீப்!’ என்ற வார்த்தையை முழுதாக வாசித்து முடிப்பதற்குள், நிஜமாகவே தூக்கம் கண்ணைச் சொருக, சொக்கி விழ ஆரம்பித்தான். ஆசிரியையின் அதட்டல் குரலில் 'ஸ்லீப்’ பறந்து போக, பதறி உட்கார்ந்தான் அருண் பாண்டியன்.

கீர்த்தனாவுக்கு 'மல்பரி புஸ்’ என்ற ரைம்ஸை வாசிக்க வேண்டும் என்ற அட்டை வந்தது. 'மல்பரி புஸ்... மல்பரி புஸ்’ என்று வாசிக்க ஆரம்பித்த கீர்த்தனா, ஆசிரியை அசந்த நேரம், திடீர் என நான்காம் வரியில் இருந்து எட்டாம் வரிக்குத் தாவிவிட்டாள். நாம் சிரித்ததைப் பார்த்ததும் கீர்த்தனாவின் முகத்தில் அலாதி யான வெட்கம். இந்த மல்பரி புஸ்ஸுக்கு மதிப்பு கொடுக்காமல் கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த இரண்டு மாணவிகள், வாங்கி வந்த நெல்லிக் காய்களைப் பாவாடையில் போட்டு பங்கு போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

'சஞ்சாயிகா சேமிப்புல  கட்டறத்துக்கு யாரெல்லாம் பணம் கொண்டுவந்திருக்கீங்க?' என்று ஆசிரியை கேட்க, உற்சாகத்தோடு எழுந்த காயத்ரி என்ற மாணவியின் கையில்

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

10 இருந்தது. இதுவரை அவள்

மல்பரி புஸ்... மல்பரி புஸ்...

4,885 சேர்த்து இருந்தாள். 'எப்படி இவ்வளவு ரூபா சேர்த்தே?’ என்று விசாரித்தால், 'நாங்க நாலு பொம்பளைப் புள்ளைங்ககிறதால அம்மா திட்டிட்டே இருப்பாங்க. என்னோட ஜாதகத்துல எட்டு வயசுல காரை வீடு கட்டுவோம்னு சொல்லி இருக்காங்க. எங்க அம்மா, பக்கத்துத் தெருவுல சீட்டு போட்டுப் பணம் சேத்துக்கிட்டு இருக்கு. நானும் அக்காக்களும் கிடைக்கிற காசை சஞ்சாயிகாவுல சேர்த்து வெச்சுட்டு வர்றோம். இந்த வருஷத்துக்குள்ள ஐயாயிரம் கட்டிருவேன். சீக்கிரமே காரை வீடு கட்டணும்'' - சொல்லும்போதே காயத்ரியின் கண்கள் மினுங்குகின்றன.

காயத்ரியின் தலையைக் கோதிவிட்டு அடுத்த பாடப் புத்தகத்தை விரிக்கிறார் ஆசிரியை!

-இரா.கோகுல் ரமணன்