Published:Updated:

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

Published:Updated:
##~##
'இ
றகைப் போலே’ என்று கார்த்தி காத லில் மிதக்கும்போதோ... 'ஏன்ன்ன்ன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?’ என்று சிம்பு காதலில் கரைந்து மருகும்போதோ...  பைக்தான் அவர்களுக்குக் கிடைத்த தேவ வாகனமாக இருக்கும்!

உற்சாகத் தருணத்தில், மனதின் இடுக் கில் ஒளிந்து இருந்து வெளிப்படும் பாடலை ஹம் செய்தபடி பைக்கில் மிதப்பது சுக அனுபவம்தான். அது, நமக்கு எல்லாம் எப்போதேனும் நிகழ்பவை. ஆனால் சில ருக்கு பைக், பைக், பைக் மட்டுமே வாழ்க்கையாக இருக்கும். அப்படி பைக்கிலேயே குடியும் குடித்தனமும் ஆக இருக்கும் சிலரைச் சந்தித்தோம்...  

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

சென்னை கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டு இருக்கும் மனோஜ் பிரபாகர், விக்னேஷ் இருவருக்கும் மார்க்கெட்டில் அறிமுகம் ஆகும் சூப்பர் பைக்குகளை 'டெஸ்ட் டிரைவ்’ சைலன்ஸர் சூடு குறையும் முன்பே வாங்கிவிட வேண்டும் என்பதுதான் லட்சியம். இப்போதே 15 பைக்குகளை  வைத்து இருக்கும் இவர்கள், விடுமுறை சமயங்களில் பைக்கைக் கிளப்பிக்கொண்டு பறந்து திரிவது திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி, ஜவ்வாது மலைப் பகுதிகளில்.

'நாங்கள் பல பைக் கிளப்புகளில் உறுப்பினர்கள்.  சாப்பிடும், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எங்கள் நினைவுகளில் நிறைந்து இருப்பது பைக் தான். நாங்கள் குளிக்காவிட்டாலும் பைக்கைத் தினம் துடைத்து பளபளப்பு குறையாமல் வைத்து இருப்போம். வாகனத்தின் வேகத்தைக் கூட்ட நாங்களே ரீ-டிசைனிங் செய்வோம். இதுவரை அதிகபட்சமாக ஒரே நாளில் 600 கி.மீ தூரம் பைக்கிலேயே பயணித்து இருக்கிறோம். கன்னியா குமரி,  கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் களில் பைக்கில் ஏறி இறங்குவதில் கொள்ளைப் பிரியம். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்த்தார்கள். ஆனால், 'இவனுங்களைத் திருத்த முடியாது’ என்று ஒரு கட்டத்தில் கைகழுவிவிட்டார்கள். ஆனால்,  எப்பவும் ஹெல்மெட் போடாம பைக்ல ஏறுறதே இல்லை.

ஹலோ 'பைக்' டெஸ்ட்டிங்!

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  வேகமா பைக் ஓட்டிட்டுப் போகும்போது 'தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டுறாங்க பாரு’ன்னு எல்லோரும் திட்றாங்க. அதனால், புதுச்சேரிக்கு மட்டும் எங்களுக்கு நாங்களே 'நோ என்ட்ரி’ போட்டுக் கிட்டோம். செஞ்சிக் கோட்டை முழுவதும் பாறையாக இருப்பதால் பைக்கில் மேலே ஏற முடியலைங்கிற வருத்தம். பைக்கைத் தவிர வேறு எந்த வண்டியில் போனாலும் இந்த த்ரில்லிங், விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிற வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கிறது இல்லை. ஒவ்வொரு டிரிப் முடிக்கும்போதும் மனசுக்குள்ள 'நீ பெரிய ஆளுதான்டா’ன்னு சின்னதா ஒரு கம்பீர கௌரவம் எட்டிப் பார்க்கும். அப்படியே மனசு முழுக்க நிம்மதியும் திருப்தியும் பரவும் பாருங்க... அதை அனுபவிச்சாத்தான் சார் தெரியும்!'' என்றபடி கியரைத் தட்டுகின்றனர் மனோஜும் விக்னேஷ§ம்.

சரி 'இவர்களுக்கு வால்ல்லிப வயசு’ என்றால், திருவண்ணா மலையில் வசித்து வரும் குமார் சாமியார் தன் பங்குக்கு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். இவர் கையில் ரேஸ் பைக் மாடல் வாட்ச் ஒன்று பளபளக்கிறது.

குமார் சாமிக்குச்  சிறு வயதில் இருந்தே பைக் என்றால் ரொம்ப ஆர்வம். அதிலும் ஹார்லே டேவிட்சன் வகை பைக்குகள் என்றால் உயிரைக்கூட கொடுப்பாராம். ஆனால், விதி...?  சாமியார் ஆகிவிட்டார். ஆனாலும்,  ஆசை யாரை விட்டது? திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு பக்தர்கள் மூலம் தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார் சாமி. 'சார், ப்ளீஸ் கிவ் மீ எ ட்ரிப் இன் யுவர் பைக்’ என்று தட்டுத் தடுமாறிபேசி, அவர்களின் பைக்கை வாங்கி ஒரு ரவுண்ட் போய் வந்துவிடுவாராம். அப்படி ஒரு வெளிநாட்டு நண்பர் கொடுத்த ஹார்லி டேவிட்சன் பைக் வாட்ச்தான் குமார் கட்டியிருப்பது. அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்து பரவசம் அடைகிறார் குமார் சாமி.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்!

- யா.நபீசா