Published:Updated:

நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!

Vikatan Correspondent
நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!
நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!
நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!

சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவுதான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம். பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங்களாக அமைந்துள்ளது.

இவை நகரும் பிளேட்டு களாக இருக்கிறது. இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத் திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. அவ்வாறு நகரும்போது நாம் நில நடுக்கத்தை உணர்கிறோம். 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் ஏப்ரல் 25 இல் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது, 600-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஜப்பானில்தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங் கள் ஏற்படுகின்றன. நிலநடுக்கம். எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நிலநடுக்கம் வருவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் :


•  வீட்டை இன்சூர் செய்து விடுங்கள்.

•  ண்ணாடிப் பொருட்களையும், கனமான பொருட்களையும் அலமாரிகளின் கீழ் அறைகளில் வையுங்கள். கிரைண்டரைத் தூக்கி  பரணில் வைக்கும் விபரீதங்கள் வேண்டாம்

•  வீட்டிலுள்ள அலமாரிகள் போன்றவற்றையெல்லாம் பூட்டியே வைத்திருங்கள். நிலநடுக்கம் அலமாரிகளைத் திறந்து உள்ளிருப்பதையெல்லாம் வெளியே எறியும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சமையலறை கப்போர்டுகள் ரொம்ப வளவளப்பில்லாததாய் இருந்தால் நல்லது. சிறு அதிர்வுகளுக்கெல்லாம் பொருட்கள் கீழே விழாமல் இருக்கும்.

•  ஒரு பெட்டியில் முக்கியமான ஆவணங்களைப் பத்திரமாய் வையுங்கள். பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பேப்பர்ஸ், மருத்துவ ரிப்போர்ட் போன்றவை அதில் இருக்கட்டும். முக்கியமாக எளிதில் எடுக்கக் கூடிய இடத்தில் இதை வையுங்கள்.

•  ஒரு முதலுதவிப் பெட்டியும் தயாராய் இருக்கட்டும். டார்ச் லைட், பாட்டரி ரேடியோ, முதலுதவிப் பொருட் கள், போர்வை போன்றவை அதன் குறைந்த பட்சத் தேவைகள்.

•  படுக்கையின் அருகிலோ, அமரும் இடங்களின் மேலேயோ கனமான புகைப்படங்கள், அலங்காரப் பொருட் கள் எதையும் வைக்காதீர்கள்.

நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!

•  செல்போன்களை சார்ஜ் செய்து, அதற்குரிய இடத்திலேயே வைத்திருங்கள். அவசர நேரத்தில் எங்கே வைத்தோம் என பதற வேண்டி வராது. அதே போல வீட்டுச் சாவிகளையும் குறிப்பிட்ட இடத்தில் வைத் திருங்கள். அவசர நிமிடத்தில் வாசல் சாவியை எங்கே வைத்தோம் என தேடும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.

•  அவசர உதவி எண்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். குறிப்பாக டாக்டர்,போலீஸ், தீயணைப்பு , மருத்துவமனை, ஆம்புலன்ஸ் போன்றவற்றுக்கான எண்கள்.

•  வாட்டர் ஹீட்டர், புத்தக அலமாரி போன்றவை சரியாய் மாட்டப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பெட்ரோல், மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களையெல்லாம் நெருப்புக்கு வெகு தூரத்தில் வையுங்கள்.

•  நிலநடுக்கம் வந்தால் வீட்டுக்கு வெளியே எந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே வீட்டில் கலந்துரையாடுங்கள். வீட்டிலுள்ள அனைவருக்கும் குறைந்த பட்ச முதலுதவி வழிகளையும் சொல்லிக் கொடுங்கள். அதே போல நிலநடுக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

நிலநடுக்கம் நிகழும் போது கவனிக்க வேண்டியவை.

•  நிலநடுக்கம் வந்து விட்டது, வீடு ஆடுகிறது எனில் பதட்டப்படாதீர்கள். தைரியம் கொள்ளுங்கள்.

•  கனமான மேஜை, பெஞ்ச், கட்டில், கிச்சன் மேடை என ஏதாவது ஒன்றின் அடியில் பதுங்கிக் கொள்ளுங்கள். ஜன்னலருகேயோ, கதவின் அருகேயோ நிற்காதீர்கள். கண்ணாடிகள் உடைந்து சிதறி காயம் ஏற்படலாம்.

•  வீட்டை விட்டு வெளியேறுவது அதிகபட்ச பாதுகாப்பு என உறுதியாகத் தெரிந்தால் வெளியேறலாம். வெளியேறும் போது கண்களையும் பின்னந்தலையையும் பாதுகாப்பாய்ப் பிடித்துக் கொள்வது அவசியம். இல்லையேல் பறந்து கொண்டிருக்கும் ஏதேனும் பொருள் பட்டு காயம் ஏற்படலாம்.

நில நடுக்கமும் எச்சரிக்கை நடவடிக்கைகளும்!

•  எப்படியானாலும் நிலநடுக்கம் தொடர்ந்தபடி இருக்கும் போது, அதாவது வீடு ஆடிக்கொண்டே இருக்கும் போது ஓடவே ஓடாதீர்கள். ஒரே இடத்தில் இருங்கள். அங்கும் இங்கும் ஓடுவதால்தான் அதிக காயங்கள் ஏற்படுவதாய் ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன

•  சமைத்துக் கொண்டிருக்கிறீர்களெனில் உடனடியாக அடுப்பை அணைத்துவிடுங்கள்.

•  நில நடுக்க காலத்தில் எக்காரணம் கொண்டும் லிப்டைப் பயன்படுத்தாதீர்கள்.

•  வீட்டுக்கு வெளியே வந்துவிட்டீர்களெனில், வெட்ட வெளியில் நில்லுங்கள். அருகில் கட்டிடம், மரங்கள், டிரான்ஸ்பார்மர், மின் கம்பங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது முக்கியம்.

•  ஒரு வேளை நீங்கள் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறீர்களெனில், உடனடியாக பாதுகாப்பான இடத்தில் வண்டியை நிறுத்துங்கள். எஞ்சினை அணைத்து விட்டு வண்டிக்குள்ளேயே அமைதியாய் இருங்கள். எலக்ட்ரிக் கம்பங்கள், பாலங்கள், போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாதீர்கள்.

•  வீட்டில் செல்லப்பிராணி இருந்தால் அதைக் கையில் வைத்திருக்கவேண்டாம். விலங்குகள் பயந்து போய் கடித்து விட வாய்ப்பு அதிகம்

- ஷான்