Published:Updated:

ஜி.எஸ்.எல்.வி. தோல்வி: சிறப்புக் குழு ஆய்வு

Vikatan Correspondent

சென்னை, டிச.26, 2010

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ##~~##

இதுகுறித்து இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ்.சதீஷ் கூறுகையில், "பொதுவாக, ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தவுடன் அதற்கான காரணங்களை ஆராய 'இஸ்ரோ' ஒரு குழுவை அமைத்து விடும். ஆனால், ராக்கெட்டுக்கு எந்த நேரத்தில், எதனால் தோல்வி ஏற்பட்டது என்பதை அறிய, ராக்கெட்டில் உள்ள 'டெலிமெட்ரி' என்ற கருவியில் பதிவான விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம்.

இப்பணி முடிவடைந்தவுடன், ஓரிரு நாளில், ராக்கெட் தோல்விக்கான காரணத்தை ஆராய ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும்," என்றார் சதீஷ்.

ஜிசாட்-5பி நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி.-எப்06 ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், புறப்பட்ட 47 விநாடிகளில் அந்த ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, அந்த ராக்கெட்டை விஞ்ஞானிகள் நடுவானில் வெடிக்கச் செய்து கடலில் விழ வைத்தனர்.