பிரபாலிங்கேஷ், மேலக்கிருஷ்ணன்புதூர்.

இன்று முன்னணி, பின்னணிப் பாடகர் என்று யாரையும் குறிப்பிட முடியவில்லையே?

உண்மைதான்! முன்பெல்லாம் இவர் டி.எம்.எஸ், இவர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இவர் எஸ்.பி.பி. என்று அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருந்ததா? (எஸ்.பி.பி-தான் 'The Last Giant என்று தோன்றுகிறது) இப்போது எப்படி அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும்?

உதாரணம் -

'இவருதான் வெங்கலராஜ்!’

'ஓ! அப்படியா? என்ன செய்யறாரு?’

'சினிமால பாடறாரு!’

'ஓஹோ! என்ன பாடியிருக்காரு?’

'அதாங்க!

'உன்னை ஜிங்கிலி பண்ணட்டுமாடி என் ஜிகிர்தண்டா?’ங்கிற பாட்டு... இவரு பாடினதுதான்!’ 'அடேங்கப்பா! நீங்க பாடின பாட்டா அது?!’

(உங்கள் கண்கள் விரிய அப்படியே அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு பரவசம் ஆகிறீர்கள்!)

எஸ்.ஜானகி சுப்ரமணியன், திருப்பூர்.

வேற்றுக் கிரக மனிதர்கள் எதிர்காலத்தில் கண்டிப்பாக வருவார்கள். அவர்களில் யாராவது ஒருவரை நீங்கள் வளர்ப்பீர்களா? (தத்தெடுத்து)

ஓ! உங்களுக்கு லெட்டர் போட்டார்களா? வேற்று மனிதர் நாய்க் குட்டி மாதிரி நடந்துகொண்டால் வளர்க்கலாம். அவருக்கு நான் நாய்க் குட்டி மாதிரி இருந்து தொலைத்தால்?! வேற்றுக் கிரக மனிதர் கில்லாடியாக இருந்தால் வேறு விஷயம்! எப்படியாவது அவருக்கு இந்தியக் குடியுரிமை வாங்கிக் கொடுத்து, அவரைத் தலைவராக்கி, ஒரு கட்சி ஆரம்பித்துவிடுவேன். 'பெரியோர்களே, தாய்மார்களே! மகத்தான சக்தி படைத்த எங்கள் தலைவரால், உங்களுக்கு எது வேண்டுமானாலும் (இலவசமாக) தர முடியும்!’ என்று நான் பிரசாரம் செய்தால் நீங்கள் நம்ப மாட்டீங்களா?!

ஆர்.கே.லிங்கேசன், மேலக்கிருஷ்ணன்புதூர்.

மாமா என்று அழைப்பது ஒரு காலத்தில் கௌரவமாக இருந்தது. இன்று மூன்றாந்தரமான வார்த்தையாகிவிட்டதே?

ஆங்கிலத்தில் அம்மாவின் பெயர்கூட Mama தான்! தமிழில் 'மாமா’ என்கிற வார்த்தை இன்றளவும் மதிப்பு மிகுந்ததே. சொல்லுகிற விதம், இடம், பொருளைப் பொருத்து அதன் அர்த்தம் மாறுகிறது. தவிர, கூடவே 'ஒரு’ என்கிற வார்த்தையை முன்னால் சேர்த்தாலோ அல்லது 'வேலை’ என்கிற வார்த்தை யைப் பின்னால் சேர்த்தாலோதான் இகழ்ச்சி!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

அரசியல்வாதிகளிடம் உங்களுக்குப் பிடித்த குணம்?

அரசியலுக்கு வந்த பிறகு, தொடர்ந்து முண்டா பனியன், மடித்துக் கட்டிய லுங்கி, அல்லது அரை நிஜாரெல்லாம் அணியாமல், தூய்மையான வெள்ளை ஆடையில் அவர்கள் நடமாடும் குணம்தான்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

''அண்ணே, நான் வெள்ளச் சோளம்... வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கிறவன்... என்னை நம்புங்கண்ணே...'' என்று கூறுகின்றவர்கள்பற்றி?

நம்பாதீங்கோ! நெசமாலுமே 'வெள்ளச் சோளம்... வெளுத்ததெல்லாம் பாலு’ன்னு நம்புறவரு, இப்படி ஒரு 'டைமிங்’கோட, கச்சிதமா டயலாக் அடிக்கிற அளவுக்குப் புத்திசாலியா இருப்பாரா?

பொன்விழி, அன்னூர்.

உயிரைப் பணயம்வைத்து தினமும் கடலுக்குச் செல்லும் மீனவ மக்களை மதன் நினைப்பது உண்டா?

மீனவ மக்களிடம் எனக்குத் தனிப் பாசமே உண்டு. (நான் வேட்பாளர் இல்லை என்பதை மனதில்கொள்ளவும்) இளம் வயதில், நான் திருவல்லிக்கேணியில் வசித்தபோது, எனக்குநிறைய மீனவ நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில், பயப்படுகிற ஒருத்தரைக்கூட நான் சந்தித்தது இல்லை. எனக்குத் தண்ணீர் பயம் உண்டு. நீச்சலும் தெரியாது. ஒருநாள் நான் கடலில் தடுக்கி விழுந்து அலை இழுத்துச்

சென்றபோது, எட்டியப்பன் என்கிற மீனவ நண்பன் நீரில் பாய்ந்து, என்னை இழுத்து வந்து காப்பாற்றினான். அயோத்தியா குப்பத்தில் இன்னொரு நண்பன் இருந்தான். அவன் வசித்த குடிசையில் இரவு வெகுநேரம் அரட்டை அடித்துவிட்டு, அப்படியே தூங்கி மறு நாள் வீட்டுக்குப் போயிருக்கிறேன் நான்.

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

முழுக்க முழுக்கச் சுயநலவாதிகளாக இருந்துகொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வதுபோல் வலம் வர, எப்படி முடிகிறது அரசியல்வாதிகளால்?

பூமியில் வசிக்கும் புலி, நரி, யானை, குரங்கு, பாம்பு, முதலை போன்ற எந்த உயிரினத்தாலும் நீங்கள் சொல்வதுபோல வலம் வர முடியாது. அரசியல்வாதிகள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களால் மட்டுமே அது முடிகிறது!