Published:Updated:

டீன் கொஸ்டீன்

''நான் திருநங்கையாக மாறலாமா?''

 ##~##
சிவராஜன், பரமக்குடி.

''எட்டு வயதிலேயே என் மகன் பயங்கரப் பிடிவாதக்காரனாக வளர்கிறான். சின்னச் சின்ன வேலைகளைக் கூட சுயமாகச் செய்ய மறுக்கிறான். ஆனால், படிப்பில் செம சூட்டிகையாக இருக்கிறான். வீட்டிலேயே வைத்து வளர்த்தால், அவனது பிடிவாதம் இன்னும் அதிகமாகிவிடுமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. அவனை எங்காவது ஹாஸ்டலில் சேர்த்துவிடலாமா என்று யோசிக்கிறேன். எங்களுடனேயே வைத்துக் கொண்டு, அவனைச் சரியான வழிக்குக் கொண்டுவர முடியாதா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தீப், குழந்தைகள் நல ஆலோசகர்.

''குழந்தைகள் வளரும் பருவத்தில் தன் பெற்றோர்களிடம் இருந்தே பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும். அதனால், உங்கள் பையனின் பிடிவாதத்துக்கு நீங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். குழந்தை கள் தங்களது வேலைகளைத் தாங்களே செய்துகொள்ளும் சமயம், அதைப் பெற்றோர் கள் பாராட்டாவிட்டாலோ, பெற்றோர்கள் அவர்களுடன் குறிப்பிட்ட நேரம் செலவழிக்காவிட்டாலோ, தங்களின் இருப்பை உணர்த்தவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஏனென்றால், குழந்தைகள் தவறு செய்யும்போதுதான் பெற்றோர்களின் கவனம் பிள்ளைகள் பக்கம் திரும்பும். இதனை oppositional defiant disorder என்பார்கள். அடம்பிடித்தல், சொல்பேச்சுக் கேட்காமை போன்றவை பொதுவாக எல்லாக் குழந்தைகளிடமும் இருக்கும் குணங்கள்தான். ஆனால், அவை நாளடைவில் சிறிது சிறிதாகத் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். அவை தொடர்ந்தால், சீரியஸான மனநோயாக மாறும் அபாயம் இருக்கிறது. எதற்கும் உங்கள் மகன், மனைவியுடன் நீங்களும் தக்க மனநல ஆலோசகரிடம் ஆலோசனை செய்யுங்கள். பிரச்னையின் தீவிரம் தெரிந்த பிறகு, உங்கள் பையனை விடுதியில் சேர்ப்பதைப்பற்றி யோசிக்கலாம்!''

டீன் கொஸ்டீன்

கயல்விழி, திருநெல்வேலி.

''கல்லூரி இறுதி ஆண்டு மாணவி நான். எனக்கு இயல்பிலேயே பளபள சருமம். ஆனால், சமீப நாட்களாக புராஜெக்ட் விஷயமாக வெயிலில் அலைவதாலும், முறைஅற்ற உணவுப் பழக்கவழக்கத்தாலும் சருமம் வறண்டு காணப்படுகிறது. மாய்ஸ்சரைஸிங் க்ரீம் உபயோகித்தாலும், நிவாரணம் இல்லை. அலைச்சலைக் குறைக்க முடியாது. உணவுப் பழக்கம் மூலம் சருமப் பளபளப்பை மீட்க நான் என்ன செய்ய வேண்டும்?''

டீன் கொஸ்டீன்

சுகன்யா, டயட்டீஷியன்.

''வழக்கமாக அருந்தும் நீரைவிட அதிக அளவில் தன்ணீர் குடியுங்கள். நீர்ச் சத்து அதிகம் உள்ள சாத்துக்குடி, தண்ணீர்ப் பழம் போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். பழச் சாறுகளாக அருந்துவதைவிட, அப்படியே சாப்பிடுங்கள். அப்போதுதான் அதன் நார்ச் சத்தும் உடலில் சேரும். அலைந்து திரிபவர் என்பதால், காய் கறி சாலட்டினை அவ்வப்போது சாப்பிடுங்கள். பொதுவாக, மதிய உணவுக்கு மட்டும் என்று இல்லாமல், மூன்று வேளை உணவின்போதும் காய்கறிகளைச் சாப்பிடலாம்.

மோர், தயிர் ஆகியவற்றைத் தினமும் எவ்வகையிலாவது உட்கொள்ளுங்கள். இளநீர் உடல் உஷ்ணத்துக்கு நல்லது என்று அளவுக்கு அதிகமாகக் குடிக்காதீர்கள். அதன் எலக்ட்ரோலக்ஸ் உடலில் அதிகமாகச் சேர்ந்தாலும் ஆபத்துதான். சரியான நேரத்தில் முறையான ஆகாரம் எடுத்துக்கொள்வது, வெயிலில் செல்லும்போது குடை, சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவது போன்றவை மூலம் சரும பாதிப்பைத் தடுக்கலாம்!''

ஜனார்த்தனன், வந்தவாசி.

''வெயில் காலத்தில் பவர் கட் இன்னும் அதிகரிக்கும். இதுவரை நான் இன்வெர்ட்டர் எதுவும் பயன்படுத்தவில்லை. நான்கு பேர்கொண்ட மிடில் கிளாஸ் குடும்பம் என்னுடையது. இரண்டு ஃபேன், இரண்டு டியூப்லைட் இயக்க என்ன வகையான இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டும்?''

ஜெஃப்ரி, மேலாளர் மெகாடெக் பவர் எக்யூப்மென்ட்.

''உங்கள் குடும்பத்துக்கு ஒரு கிலோ வாட் திறன்கொண்ட இன்வெர்ட்டர் போதுமானது. இதன் விலை 15 ஆயிரத்தில் இருந்து துவங்கும். பேட்டரியின் அளவைப் பொருத்து இதற்குக் குறைந்த விலையிலும் இன்வெர்ட்டர் கிடைக்கும். ஆனால், சில ஆயிரங்களைப் பார்க்காமல், தரமான யூனிட்டை வாங்குங்கள். ஒரு கிலோ வாட்ஸ் என்பது 1,000 வாட்ஸ் திறனுக்குச் சமம். ஒரு ட்யூப் லைட் 40 வாட்ஸ், மின் விசிறி 800 வாட்ஸ், டி.வி. 150 வாட்ஸ் திறன்களை உட்கொள்ளும். இவற்றுக் குள் உங்கள் இன்வெர்ட்டர் பயன்பாட்டை அமைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக, ஒரு இன்வெர்ட்டர் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வரை உழைக்கும்!''

பெயர், ஊர் வெளியிட வேண்டாம்.

''என் வயது 18. எனக்குப் பெற்றோர் இல்லை. பாட்டி, தாத்தாவுடன் வசித்து வருகிறேன். நான்தான் அவர்களுக்கு ஒரே ஆதரவு. சமீப நாட்களாக நான் என்னுள் பெண் தன்மையை உணர்கிறேன். முழுமையான திருநங்கையாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன வழிமுறைகள்?''  

கல்கி, நிறுவனர், சகோதரி ஃபவுண்டேஷன்.

''நீங்கள் மிகவும் குழப்பமான ஒரு சூழலில் இருக்கிறீர்கள்.இப்போது எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்காதீர்கள். முதலில் உங்களுக்குத் திருநங்கைகளின் வாழ்வியல் பற்றிய புரிதல் மிகவும் அவசியம். அதுவும் போக, வாழ்க்கையை எதிர்கொள்ள அடிப்படைக் கல்லூரிக் கல்வியும் அவசியம். நேரடியாக கல்லூரி சென்று பயில உங்கள் மனநிலை அனுமதிக்காவிட்டால், தொலை தூரக் கல்வி முறையிலாவது நீங்கள் பட்டதாரி ஆக வேண்டும். தக்க மனோதத்துவ நிபுணரிடமும், ஹார்மோன் சம்பந்தமான நிபுணரிடமும் (Endo Chronologist) நீங்கள் கவுன்சிலிங் செய்துகொள்ளலாம். அந்த கவுன்சிலிங்குக்குப் பிறகும் நீங்கள் திருநங்கையாக மாற விரும்பினால், பால் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் முன் Harry Benjamin என்பவர் எழுதிய 'Standards Of Care’ என்ற புத்தகத்தைப் படியுங்கள். திருநங்கைகளுக்காகவே அறிவியல் பூர்வ மாக எழுதப்பட்ட புத்தகம். அதைப் படித் தால், உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். முதலில் உங்கள் அறிதலையும் புரிதலையும் மேம்படுத்திக்கொண்டாலே பாதிப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மற்றதைப் பிறகு யோசிக்கலாம்!''

டீன் கொஸ்டீன்