Published:Updated:

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

##~##

டிதம் எழுதுவது, தந்தி அனுப்புவது - போன்றவை எல்லாம் 'தமிழக முதல்வர்’ போன்ற வி.ஐ.பி-க்களுக்கான வேலை என்பதாகிவிட்டது இந்நாளில். எஸ்.எம்.எஸ், இ-மெயில் என்று முடங்கிக்கொண்டார்கள் சாமான்யர்கள்! ஆனால், இன்னமும் தபால் என்றாலே காக்கி உடை போட்ட உருவமும், 'சார் போஸ்ட்’ என்னும் கரகர ஆண் குரலும்தான் நமக்குள் காட்சிப் படிமங்களாக விரிகின்றன. ஆனால், ஓர் அஞ்சல் நிலையத்தில் பணிபுரி பவர்கள் முழுக்கப் பெண்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? அந்த அஞ்சல் நிலையத்தை நடத்துவதும் அதே பெண்களே!

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்து உள்ள சளுக்கை கிராமத்து தபால் நிலையத்தை நிர்வகிப்பது பாரதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த லட்சுமி, கீதா, பிரேமா ஆகியோர்.

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

''ஏற்கெனவே இங்கே இருந்த தபால் ஆபீஸை சில வருஷங்கள் முன்னாடி மூடிட்டாங்க. ரொம்ப சிரமமாப்  போயிடுச்சு. நாங்க மூணு பேரும் திருவண்ணாமலை மாவட்டத் தலைமை அஞ்சலக இயக்குநர்கிட்ட பேசினோம். அவங்க எங்க மேல நம்பிக்கைவெச்சு இதை ஆரம்பிக்கச் சொன்னாங்க!'' என்று பெருமிதம் பகிரும் லட்சுமிதான் அந்தக் குழுவின்  தலைவி.

''ரெஜிஸ்டர் போஸ்ட்ல இருந்து, எல்லா வகை யான தபால்களையும் கையாள்கிறோம். சளுக்கை, ஒளப்பக்கம், கொசப்பட்டு, தாளப்பள்ளம், காரம்னு ஐந்து கிராமங்களும் எங்க கன்ட்ரோல்லதான்!'' என்கிறார் கீதா.

கீதாவின் கணவரும் லட்சுமியின் கணவரும் சகோதரர்கள். இரு தம்பதியினரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். அங்குதான் அஞ்சல் நிலைய மும் இயங்கி வருகிறது. ''நாங்க மூணு பேருமே மொபெட் ஓட்டுவோம். ரெண்டு பேர் தனித் தனி வண்டியில் டெலிவரிக்குக் கிளம்பிட்டா, ஒருத்தர் ஆபீஸைப் பார்த்துக்குவாங்க. டெலிவரிக்குப் போற இடங்களில்,  கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மூலமா கிட்டத்தட்ட ஏழு லட்சம் ருபாய் வரை பயனாளிகளைச் சேர்த்து இருக்கோம்!'' என்கிறார் பிரேமா.

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

இந்த சாதனைகளைத் தாண்டி, ஏராளமான சோதனைகளும் சிவப்புப் பெட்டிக்குப் பின் ஒளிந்து இருக்கிறது. ''போஸ்ட் ஆபீஸ் நடத்துறதால,  ஏதோ பெரிய சம்பளம் கிடைக்கும்னு நீங்க நெனைப்பீங்க. ஆனா, எங்க மூணு பேருக்கும் சேர்ந்து ஒரு மாச சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெறும் 600 ருபாய்தான்!'' என்று அதிரவைக்கிறார் கீதா.

''சம்பளம் கம்மிங்றதைக்கூட விடுங்க. ஆபீஸ் வாடகை கூட அரசாங்கம் கொடுக்கிறது இல்லை. நாள் முழுக்க ஆபீஸ் வேலையே பார்த்துட்டு இருக்கிறதால,  எங்க குழந்தைகளைக்கூட கவனிக்க முடியறதில்லை.  கூலி வேலைக்குப் போனாக்கூட ஒருநாள் சம்பளமா 100 ரூபா கிடைக்கும். ஆனா, மாசம் முழுக்க

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்

உழைச்சாலும் எங்க சம்பளம் 200 ரூபாதான். வந்தவாசி வட்டார அஞ்சல் அதிகாரி களிடம்  இது சம்பந்தமா, பல தடவை பேசிப் பார்த்தோம். ஆனா, 'சம்பளத்தைப்பத்தி மட்டும் பேசாதீங்க’ன்னு கறாரா சொல்லிட்டாங்க!'' என்கிறார்கள் வருத்தமாக.

சமூக தடைகளைத் தாண்டி சாதிக்க வரும்பெண் களை ஊக்குவிப்பதுதான் அரசின் கடமை. கடிதங்கள் நிரம்ப வேண்டிய அஞ்சல் பெட்டியில் கண்ணீரை நிரப்பலாமா அரசு?

- மு.தமிழரசு

அஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்