##~##

ரையில் மணலைக் குவித்து,  வாயில் வெற்றிலையைக் குதப்பி, வெண்திரையில் 'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா’ என்று கண்ணாம்பாள் ஆணையிட்டவுடன்,   சிவாஜி பொங்க முயற்சிப்பதைச்  சாவகாசமாகப் படுத்துக்கொண்டே பார்த்து... என்று 40 ஆண்டுகளுக்கு முன்பு நம்மூர்ப் பெரிசுகளின் சினிமா பார்த்த அனுபவங்கள் இப்படித்தான் இருக்கும். ஆனால், இப்போது அந்த டூரிங் டாக்கீஸ்கள் எல்லாம் இடிக்கப்பட்டு,  பாப் கார்னோடு மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்கப் பழகிவிட்டது இன்றைய இளைய தலைமுறை.

ஞாபகம் வருதே!

 நரம்புகள் நடுங்கும்  தாத்தாவின் கைகளைப் பற்றிக்கொள்ள ஆசை வருவதைப் போலத்தான் நமக்கும் ஆசை வந்தது, அப்படியான ஓர் டூரிங் டாக்கீஸைப் பார்க்க. வேலூர் மாவட்டம் பொய்கையில் நம் கண் ணில்பட்டது ஸ்ரீவெங்கடேஸ்வரா டாக்கீஸ். 'தினசரி இரண்டு காட்சி கள் மட்டும்’ என்று போஸ்டர் ஒட்டிய காம்பவுண்டைத் தாண்டி  உள்ளே சென்றோம்.  10 மர நாற் காலிகள், நான்கு மின் விசிறிகள்,   10 அடி தூரத்துக்கு மணல் பரப்பப் பட்டு, நடுவில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான 'எல்லைச் சுவர்’ எழுப்பப்பட்டு இருந்தது. 30 எம்.எம். திரை, கீற்று வேயப்பட்ட கொட்டகை. இதுதான் 'ஸ்ரீவெங்கடேஸ்வரா டாக்கீஸ்!’

ஞாபகம் வருதே!

''நான் இந்த டாக்கீஸுக்கு மூணாவது முதலாளி. பதினஞ்சு வருஷமா நடத்திட்டு வர்றேன். அந்தக் காலத்துல 460 டாக்கீஸ் கள் வட ஆற்காடு மாவட்டத்துல இருந்தது. இப்போ,  நாற்பது கூட இருக்காது. ஏதோ இன்டர்நெட்டு, திருட்டு டி.வி.டி-தான் இதுக்குக் காரணம்கிறாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரை டி.வி சீரியல்கள்தாங்க காரணம். எங்க ஊருல படம் பார்க்க வர்ற ஆம்பளைங்க குறைவு. வீட்டுப் பொம்பளைங்க நச்சரிப்பு தாங்க முடியாமதான் குடும்பத்தோட படத்துக்கு வருவாங்க, ஆனா, காலையிலே பத்து மணியில் இருந்து ராவு பதினோரு மணி வரைக்கும் டி.வி பொட்டி முன்னாடி பொம்பளைங்க உக்கார்ந்துட்டா, அப்புறம் எங்கே டாக்கீஸ் ஓடுறது? ஒரு கௌரவத்துக்குத்தான் இதை நஷ்டத்துல நடத்திட்டு வர்றேன்.  தெருவுல போனா, 'வெங்கடேஸ்வரா டாக்கீஸ் முதலாளி போறாரு’ன்னு ரெண்டு பேராவது சொல்றாங்க இல்ல... அது கொஞ்சம் பெருமைதானே!''  என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார் காமராஜ்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு