Published:Updated:

என் ஊர்!

''கைத்தறி சத்தம் கேட்காமல் தூக்கம் வராது!''

##~##
.ரா.சுந்தரேசன் என்பதைவிட, பாக்கியம் ராமசாமி என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். 'அப்புசாமி - சீதா பாட்டி’ இவரது ஹ்யூமர் அடையாளம். எடிட்டர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக்கொண்டவர், தன் ஊர் ஜலகண்டாபுரம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'' 'நல்லி’ குப்புசாமி செட்டியாரிடம் 'ஜலகண்டாபுரம்’ என்று சொல்லிப் பாருங்கள். அவரது கண்ணில் ஒரு மின்னல் வெட்டும். 'அந்த ஊருல ஆர்ட் சில்க் புடவை ரொம்ப நல்லா இருக்குமே... நமக்குக்கூட அங்கே பிசினஸ் உண்டே’ என்பார். சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஜலகண்டாபுரத்தில் வீட்டுக்கு வீடு கைத்தறி ஒலிக்கும் சத்தம் கேட்கும்.  

என் ஊர்!

வயித்துக்குச் சோறு இல் லைனாலும்கூட வாய்ப்  பாட்டு தூள் பறக்கும். எம்.கே.தியாகராஜ பாகவதர் பாட் டைப் பாடிக்கிட்டே கைத் தறியில் வாட்டம் இழுப்பார் கள். அதிகாலையில் ராகம் இழுத்துக்கொண்டே தெருவுக் குத் தெரு நீளமாக பாவு நூலைக் கட்டி கஞ்சி போடு வார்கள். அதிகாலைக் குளிர்ச்சியில் பாவு போட்டால்தான், நூல் அறுபடாமல் சொன்னபடி கேட்கும். பனி படர்ந்த வேளையில் அந்தக் காட்சியே ஒரு கவிதை. இப்போது கைத்தறிகள் காணாமல்போய் தடதடக் கும் மின் விசைத் தறிகள் வந்துவிட்டன. மூன்று நாட்களாக ஒரு புடவையை நெய்த காலம் போய், ஒரே நாளில் 1,000 புடவைகள் நெய்யும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இன்று ஜலகண்டாபுரம் காட்டன் துணிகள், கடல் கடந்து செல்கின்றன.

என் ஊர்!

எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் காப்பரத்தாம்பட்டி என்ற கிராமத்தில், புலவர் வரதநஞ்சயப் பிள்ளை வாழ்ந்தார். அவரது தமிழைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் எழுதிய பாடல்கள் இன்றும் பள்ளிப் பாடங்களாக இருக் கின்றன. என் அப்பா நடத்திய ஸ்ரீலட்சுமி தேவி பாடசாலையில் அவர் ஆசிரியராக இருந்தார். எங்கள் ஊருக்குக் கல்விக் கண்ணைத் திறந்தது அந்தப் பாடசாலை தான்!

திராவிட இயக்கத்தை வளர்த்ததில் எங்கள் மண்ணுக்கு பெரும் பங்கு உண்டு. திராவிட இயக்கத்தில் ஒரு தூணாக இருந்த ப.கண்ணன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவரைச் சந்திக்க, பெரியார், அண்ணா, கலைஞர் அடிக்கடி ஜலகண்டாபுரம் வருவார்கள். கிட்டப்பா,  டி.ஆர்.ராஜகுமாரி எல்லாம் மாதக் கணக்கில் தங்கி, நாடகம் போடுவார்கள். தியாகராஜ பாகவதர் இங்கு போட்ட பவளக்கொடி நாடகக் காட்சிகள் இன்னும் என் மனக் கண் ணில் நிற்கின்றன. எங்கள் ஊரில் சினிமா தியேட்டர் கட்டியது சென்னையில் இன்று பிரபலமாக இருக்கும் ராமநாதன் செட்டியார். அவர் கட்டிய சௌடாம்பிகா தியேட்டர் இப்போதும் அங்கு இருக்கிறது!

எங்கள் ஊரில் இருந்து சேலத்துக்கு 30 மைல். சேலம் செல்ல ஒரே ஒரு பஸ்தான். மரப் பலகையில்தான் இருக்கை. நான்கு பக்கமும் திறந்தவெளியாகத்தான் இருக்கும். 'சேலம் போறவங்க எல்லாம் வாங்க...’ என்று ஒவ்வொரு தெருவாக அந்த பஸ் வலம் வரும். சுப்ரமணிய அய்யர் விலாஸ் என்று ஒரு ஹோட்டல் இருந்தது. இன்று பிளைன் தோசை இல்லாத ஹோட்டலே கிடையாது. எனக்குத் தெரிந்து 50 வருடங்களுக்கு முன்பு பிளைன் தோசையை அறிமுகம் செய்த கடை அது. பெரிய கல்லில் மாவை அவ்வளவு நைசாக... வட்டமாக இழுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கே கூட்டம் கூடும். நெய் ஊற்றி உரு ளையாக சுருட்டிவைப்பார்கள். அன்றெல்லாம் அதைச் சாப்பிடுபவர்கள் நிச்சயம் ஊரின் முக்கியஸ்தர்களாகத்தான் இருப்பார்கள்.  

என் ஊர்!

எங்கள் ஊர் பெண்கள், உழைப்புக்கு அஞ்சாத வீராங்கனைகள். உழவு மாடு கிடைக்கவில்லை என்று நுகத்தடியைத் தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஏர் உழுததை எல்லாம் பார்த்துள்ளேன். 100 படி களைக்கொண்ட ஆழமான கிணற்றில்கூட சாதாரண மாக இறங்கி தண்ணீர் சுமந்து வருவார்கள். இப்போது காவிரித் தண்ணீரே வீட்டுக்கு வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், மலையம்பாளையத்தில் வாரச் சந்தை கூடும். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 18 பட்டிகளுக்கும் அதுதான் சந்தை. மதியம் 1 மணிக்கே கூடையை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் கிளம்பிவிடுவார்கள். அன்றைய தினம் இரவு ஒவ்வொருவரின் வீட்டிலும் சந்தையில் வாங்கிய பலகாரமும் பொரி கடலையும் மொறு மொறுக்கும்!  

இன்று ஊரின் அடையாளங்கள் அத்தனையும் மாறிவிட்டன. ஆனால், இன்னமும் அன்பு ததும்பும் மனிதர்கள் உலவுகிறார்கள். அது போதுமே!''

சந்திப்பு: கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: பொன்.காசிராஜன், க.தனசேகரன்