Published:Updated:

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...''

கலகலத்த பள்ளியின் கடைசி நாள்

##~##
''நா
ங்க பள்ளிப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கிறோம். எங்க பள்ளியின் கடைசி நாள் செம ஜாலியா இருக்கும். அதே சமயம், பிரிவுத் துயர் சென்ட்டிமென்ட்டும் உருக்கும். 'என் விகடன்’ல எங்க கொண்டாட்டங்களைப் பதிவு செய்வீங்களா?'' - வாய்ஸ் மெயில் எண்ணில் வந்த கோரிக்கை இது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கேமராவுடன் நாம் பள்ளிக்கூடத்தில் ஆஜர். பரீட்சை முடிந்து மணி அடித்ததுதான் தாமதம். மொத்தக் கூட்டமும் 'ஹோவென’ ஆர்ப்பரிக்கும் அருவியாக வாசலுக்கு வந்தது. தயாராக இருந்த பட்டாசுகளை வெடித்துக் கொண்டாட்டத்தைத் துவக்கியது ஒரு குரூப். வர்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்ள, பேன்ட் பாக்கெட்டில் இருந்த முட்டைகள் கைகளுக்கு மாறி, பிறகு தலையில் ஆஃப்பாயில்களாக உடைந்தன!

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...''

கார்த்திக் ராஜா என்ற மாணவன், ''நாங்க 23 பேர் ஆறாம் வகுப்புல இருந்து இதே ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்சோம். பக்கத் துல வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், இதுவரை பிரிஞ்சது

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...''

இல்லை. அதிகபட்சம் ஒரு வாரம் ஒருத்தன் முகம் பார்க்கலைன்னாக்கூட கஷ்டமாகிடும். முதல் முறையா பிரியப்போறோம்கிறதை நினைச்சா, ரொம்பக் கஷ்டமா இருக்குண்ணா!'' என்ற கண்களில் துளிர்க்கிறது கண்ணீர்!

திடீர் என அமைதியான குரூப் கோரஸாகப் பாட ஆரம்பித் தது. ''பசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவை களே... பழகிக் களித்த தோழர்களே... பறந்து செல்கின்றோம்; நாம் பிரிந்து செல்கிறோம்!''

முருகன் என்ற மாணவன், ''ஸ்கூலை விட்டுப் பிரிய மனசு இல்லாம டீச்சர்கிட்ட போய் அழுதோம். அவர் எங்ககிட்ட, 'அப்படி எல்லாம் கவலைப்பட்டா, வாழ்க்கையில முன்னேற முடியாதுடா. நீங்க எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம்’னு சொன்னார். ஆனா, எனக் குத்தான் நான் உட்கார்ந்த அந்த பெஞ்சை விட்டுப் பிரியக்கூட மனசு இல்லை. 'இது என் இடம்’னு சைக்கிள் சாவியால பெஞ்ச்ல கீறி வெச்சிருக்கேன்!'' என்கிறான் குரல் கம்ம!

பாலாஜியோ ''நாங்க எல்லோரும் ஒரே காலேஜுல சேரலாம்னு திட்டம் போட்டு இருக் கோம். ஆனா, அது எந்த அளவுக்கு சாத்தியம்னு தெரியலை!'' என்று உச்சுக் கொட்டினான்.

குமரேசனுக்கு தமிழ் ஆர்வம் அதிகமாம். கவிதை கள் நிறைய எழுதுவானாம். ''எண்ணெய் வடிந்த தலையோடு நான் சாய்ந்து இருந்ததால் தழும்புகளைச் சுமந்தே இருக்கும் என் பள்ளி சுவர்கள். நான் மதிய உணவு சாப்பிட மடி கொடுத்த மரத்தடி நிழல்கள் இனி, என்னைக் காணாமல் தேடி அலைவதை எப்படி சகிப்பேன்?'' என்று ஒரு உடனடி கவிதை இயற்றினான்.

சரவணன் என்ற மாணவன், ''நான் மூணு வரு ஷமா உங்ககிட்ட இருந்து ஒரு விஷயத்தை மறைச்சுட்டேன். அந்த உண்மையை இப்ப சொல் லியே ஆகணும். மூணு வருஷத்துக்கு முன்னாடி நாம எல்லோரும் என்.சி.சி. கேம்ப்புக்காக பக்கத்து ஊருக்குப் போயிருந்தோம். ராத்திரி அங்கே தங்கி இருந்தப்ப அவசரமா சூச்சு வந்துச்சு. தூக்கக் கலக் கத்துல வெளியே போகத் தயங்கிட்டு, வராண்டாவுக்குப் போயி பெரிய ஜன்னல் மேலே ஏறி சூச்சு போனேன். அப்ப கீழே நைட் ரவுண்ட்ஸ் வந்த ஹிந்தி ஆபீஸர் மேல சுடச்சுட சூச்சு கொட்டிருச்சு. 'யாருடா அது?’ன்னு மேலே ஓடி

''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...''

வந்தார். நான் பயத்துல ஓடி வந்து போர்த்திக்கிட்டுப் படுத்துட்டேன். அப்படி அவசரத்துல ஓடி வந்தப்ப, படுத்து இருந்த ஒருத்தனை மிதிச்சுட்டேன். 'யாருடா?’ன்னு கேட்டு மிதி பட்டவன் கொட்டாவி விட்டுட்டே எழுந்து உட்காரவும் அந்த ஆபீஸரு உள்ளே வரவும் சரியா இருந்துச்சு. அவன்தான் அந்த நாச காரியத்தைப் பண்ணி இருக்கான்னு நினைச்சு, அவனை இழுத்துட்டுப் போயி அன்னிக்கு ராவு முழுக்க 'கதம்தாள்’ (முட்டி போட்டுக்கொண்டே மைதானத்தை சுற்றி வருவது) போட விட்டுட்டாங்க. 'கொட்டாவி விட்டதுக்கா கிரவுண்டுல முட்டி போட விட்டாங்க’ன்னு அவன் புலம்பிட்டே இருந் தான். இப்ப அவன் இங்கதான் இருக்கான். என் முன்னாடி வாடா... ஸாரிடா!'' என்று நிறுத்த, ''அடப்பாவி... நீதானா அந்தப் படுபாவி!'' என்று சரவணனைத் துரத்தத் துவங்கினான் அந்தோணி ராஜ். சிரிப்பை அடக்க முடியாமல் ஒட்டுமொத்த மாணவர்களும் அவர்கள் பின்னாலேயே ஓட... அது அடுத்த அரை நூற்றாண்டுக்கான ஆட்டோகிராஃப் நினைவுகள்!

     - வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்