Published:Updated:

பெயரில் அப்படி என்ன இருக்கிறது.?

பெயரில் அப்படி  என்ன  இருக்கிறது.?
பெயரில் அப்படி என்ன இருக்கிறது.?

பெயரில் அப்படி என்ன இருக்கிறது.?

பெயரில் அப்படி  என்ன  இருக்கிறது.?

பெயர் ஒரு அடையாளம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது. டெலிஃபோன் டைரக்டரியை எடுத்தால் பெயர் பஞ்சம் நன்றாக தெரியும்.

நூற்றுக்கணக்கான சந்திரசேகரன்களையும், ராமச்சந்திரன்களையும், கிருஷ்ண குமார்களையும், கவிதா, காயத்ரிகளையும் பார்க்கிறோம். வடமாநிலங்களில் எவரும் தம் பெயர் குறித்து இவ்வளவு அலட்டிக் கொண்டு பார்த்ததில்லை நான். ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே சிலநூறு பெயர்கள்தான் இருக்கும் என்கிற அளவு சுமாரான பொதுவான பெயர்கள் அதிகம். முழுக்க முழுக்க surname அடையாளத்திலேயே காலம் கழிக்கிறார்கள்.

காந்தி, படேல், யாதவ், நேரு, மௌர்யா, பரத்வாஜ் உள்ளிட்ட இன்றைக்கு பெயர் தெரிந்த, சரித்திரம் குறித்துக் கொண்டுள்ள எல்லோருமே அப்படி அடையாளம் காணப்பட்டிருப்பவர்களே.

பெற்றோர்  வைத்த பேரையே மாற்றி வைத்துக் கொள்ளும் பலரை பார்க்கிறோம். பெயர் வைக்கும்போது 'தோன்றின் புகழோடு தோன்றுக 'என வேண்டுமெனில் சில சூத்திரங்கள் உள்ளதாக பெயரியல்  ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பெயரில் அப்படி  என்ன  இருக்கிறது.?

ர, ஜ என்ற எழுத்து வரும் பெயர்கள் உடையவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்கள் ஆக ஆகிறார்கள். பிரபலமானவர்களாக  இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக 'ர' எழுத்தினை தங்கள் பெயரில் கொண்ட ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார், இந்திரா காந்தி, எம்ஜிஆர் , ராஜீவ், நரேந்திர மோடி, ராகுல்காந்தி, கருணாநிதி, ராமசாமி -(பெரியார்) ராமசாமி (சோ) , ரஜினிகாந்த், ராமதாஸ், திருமாவளவன், டெண்டுல்கர். சுரேஷ் ராய்னா, மகேந்திர சிங் தோனி, சுப்ரமணிய பாரதி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

'ஜ' வில் ஜக ஜீவன்ராம் , வாஜ்பாய், காமராஜர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பெயரில் அப்படி  என்ன  இருக்கிறது.?

அத்வானி  புகழ் பெற்றவர்தான்  ஆனால் அவரையும் 'ர' எழுத்து உள்ள நரேந்திர மோடி ஓரம் கட்டி  விட்டார். அதே 'ர' வின் சக்திதான்  நெடுஞ்செழியனை கருணாநிதி ஓரம் கட்ட வைத்தது. வைகோ திறமையானவர் தான் அவரையும் விட  இப்போது வந்த விஜயகாந்த் செல்வாக்கு அதிகம் பெற்று விட்டாரே.

நானும் என் பெயரை சுருக்கி ஷான் 'எனத்தான் வைத்துள்ளேன். அதை ஜான் என்று வைத்திருந்தால் ஒருவேளை பிரபலமாயிருப்பேனோ என்னவோ? 

-ஷான் ( மயிலாடுதுறை)

அடுத்த கட்டுரைக்கு