Published:Updated:

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16

திருப்பதி

சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16

சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.

Published:Updated:
திருப்பதி


இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத ஒரு வைபவம் சென்னையில் நடந்து வருகிறது. வட சென்னையின் பிரதானமான விழா அது. தமிழ்நாட்டின் நாட்காட்டிகளை கிழிப்பவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் 'திருப்பதி குடை ஊர்வலம்' என்று படித்திருக்கக் கூடும்.

திருப்பதி மலையில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோத்சவத்தின் போது கோயில் உற்சவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். அப்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் அலங்கரிக்கப்பட்ட குடைகள் எடுத்துச் செல்வார்கள்.

பட்டுத் துணி, மூங்கில், ஜரிகை, மின்னும் பொருட்கள் போன்றவற்றால், நகாசு வேலைப்பாடுகளுடன் சுமார் ஏழு அடி விட்டம், ஏழு அடி உயரத்துடனும் ஐந்து அல்லது ஆறு குடைகள் தயாரிப்பார்கள். சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இந்தப் பணி நடைபெறும்.

இவற்றை திருமலை ‌திரு‌ப்ப‌தி‌ வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்‌பி‌க்க, சென்னையில் இருந்து சாலைகள் வழியே எடுத்துச் செல்லும் வைபவத்துக்குத்தான் திருப்பதி திருக்குடை ஊர்வலம் என்று பெயர்.

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி  ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16பிரம்மோத்சவத்துக்கு முந்தைய மாதங்களில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர நாளின் காலை, சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து குடை ஊர்வலம் தொடங்கும். வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.

நிற்க.

திருப்பதி குடை, யானை கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி.

சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, 'குடை யானை கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய செய்தியாகப் பேசுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி  ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16

செய்தித்தாள்களும் மாலை 4.30 மணிக்கு குடைகள் யானை கவுனியைக் கடந்தன என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. சிறுவயதில் இருந்தே குடை ஓட்டேரியை தாண்டிவிட்டதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா என்று கேட்பேன். யாரும் எனக்கு பதில் சொன்னது இல்லை. எல்லோருமே யானை கவுனி தாண்டிவிட்டதா என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். அந்தக் கேள்விக்கு பதில் கூட தேவையிருக்காது.

இதற்கான பதிலை இன்னும் மூன்று பாராவுக்குப் பிறகு சொல்கிறேன்.

திருப்பதி குடை யானை கவுனியில் இருந்து எந்த வழியாகச் செல்லும் என்பதைப் பார்ப்போம். நடராஜா திரையரங்கம், செயிண்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டேஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலை சென்றடையும்.

இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாக திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். அதற்கு அடுத்த நாள் திருப்பதியை சென்றடைகிறது. ‌‌திரு‌ப்ப‌தி ‌திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன்போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். ‌சில சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம். குடைகள் கடக்கும் இடமெல்லாம் சிறப்பான வழிபாடு நடைபெறும். இந்தக் குடை பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் நைவேத்தியம், அன்னதானம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் என அமர்க்களப்படும்.

வழியெங்கும் சாலை ஓரங்களில் திருப்பதி மலையின் தோற்றத்தை சேறு, கற்கள் கொண்டு உருவாக்கி வைத்திருப்பார்கள். அதற்கான டெகரேஷன்களில் தோட்டாதரணி தோற்பார். விதம்விதமாக மலைகளை மினியேச்சர் செய்து வைத்திருப்பார்கள். காடு, அதனுள்ளே காட்டு விலங்குகள், அதை வேட்டையாடும் மனிதர்கள், திருப்பதி கோயில் எல்லாமே 'சுருக்கமாக' இருக்கும். எத்தனையோ விதமாக மலை செய்த அனுபவம் எனக்கும் இருந்தது.

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி  ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16

சரி, இப்போது பதில்...

ஒரு காலத்தில் ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கல்யாணத்துக்காகக் கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்தப் பகுதி வரும்போது நிற்காமல் குடையை தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம். இது 100 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் தன் கல்யாணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கி அதை இன்னமும் அடைத்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. அவர் யானை கவுனியில் கடன்பட்டது இந்தப் பகுதி வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்த கதை. யானை கவுனி சௌகார் பேட்டையில் இப்போது வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஏராளமான மார்வாடி குடும்பத்தினர் வசிப்பது கோ இன்சிடென்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.

மெட்ராஸ் வரலாறு : யானை கவுனியில் கடன் வாங்கிய திருப்பதி  ஏழுமையான் - சுவார்ஸ்ய கதை | பகுதி 16நாம் இதற்கு முந்தைய கட்டுரை ஒன்றில் வால் டாக்ஸ் ரோடு பற்றி பார்த்தோம். யானை கவுனியில் இருந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும் என்று படித்தோம். திருப்பதி குடைகள் செல்லும்போது அந்த வாயில் அருகே ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது. அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும் மக்கள் குடை யானை கவுனியைக் கடந்துவிட்டதா என்று விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அல்லது வரி கொடுக்காமல் ஒவ்வொரு தடவையும் அந்த இடத்தைக் கடக்கும்போது அதற்கு வரி வசூலிப்பதா, வேண்டாமா என்பதில் சிக்கல் இருந்திருக்கலாம். குடைகளுடன் மக்கள் கூட்டமாக, வேகமாக அதைக் கடப்பதை வழக்கமாக்கியிருக்கலாம்... இது என்னுடைய யூகம் மட்டுமே.

யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும். மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்திலும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும்.
இந்தத் திருப்பதி குடை யாத்திரை ஏன் தொடங்கப்பட்டது என்பது கூட ஓர் சுவாரஸ்யமான ஆராய்ச்சியாக இருக்கலாம். ஏனென்றால் சென்னையை அடுத்த திருத்தணி கோயிலுக்கு அப்படி ஒரு கதை உண்டு.

அதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்...

பகுதி 15க்கு செல்ல....