Published:Updated:

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!
ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீங்கும்: மத்திய அமைச்சர் உறுதி!

புதுடெல்லி: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தடைக்குக் காரணமாக இருக்கும்  தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்ட திருத்தங்களைக்  கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சேலம்,திருச்சி,மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் காளைகளை அடக்கும் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அண்மையில் உச்சநீதிமன்றம்  தடை விதித்தது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு  தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற்று உரிய முடிவுகள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விலங்குகள் கொடுமைப்படுத்தப்படாத வகையில் கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுகள் நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கி விட்டு பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு அரசியல் நெருக்கடி ஏதேனும் காரணமா? என்று கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு,  அப்படி அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை என்று அவர் பதில் அளித்தார்.

கேரளா அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஆய்வு நடத்த அனுமதி எதுவும் வழங்கவில்லை என்றும்,  அவ்வாறு இதுகுறித்து வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு