Published:Updated:

காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!

காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!
காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!

காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!

ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது என புகழப்பட்ட தமிழக காவல்துறையின் பெருமையை செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட வேலூர் டி.எஸ்.பி தங்கவேலு சீர்குலைத்து விட்டார் என்றே சொல்லவேண்டும்.

20 அப்பாவி தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட மாபாதக சம்பவம் நடந்தது. அதை நாம் யாரும் மறக்கமுடியாமல் தவிக்கும் சூழலில், வேலூர் மாவட்டம் ஆம்பூர் கோழிப் பண்னை சின்னபையன் என்பவர் கடந்த 27ம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டார். சின்னபையனின் உறவினர் விஸ்வநாதன் கொடுத்த தகவலின்படி  செம்மரக்கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தகராறில்தான் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

மேலும் இதில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவாகி விட்டார். செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில், டிஎஸ்பி தங்கவேலு குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, தனிப்படை போலீசாரால் தேடப்பட்டுவருவது என்பது காவல்துறைக்கு மிகப்பெரிய களங்கமாகும்.

தலைமறைவு குற்றவாளி டிஎஸ்பி யின் செல்போனில் தொடர்பு கொண்ட 70 பேரின் பட்டியலை தனிப்படை போலீசார் சேகரித்த போது டிஎஸ்பி தங்கவேலு இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது  லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது காவல்துறைக்கு. இது மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம்!

அப்போதே தங்கவேலுவை பதவிநீக்கம், பதவிகுறைப்பு செய்ய ஏன் தமிழக அரசு தவறியது? மணல் கடத்தலில் ருசிகண்ட பூனை செம்மரத்தையும் ருசிக்க தயங்கவில்லை போலும். குற்றவாளி டிஎஸ்பி தங்கவேலுவுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தனிப்படை போலீசார் தயாரித்த 70 பேர் பட்டியலில் சென்னை மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மேலும் பல போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள் என்பதால் பலர் பீதி யில் உறைந்துள்ளனர்.

செம்மரக்கடத்தலில் ஈடுபடாத சுட்டுக்கொல்லப்பட்ட 20 அப்பாவிகளின் ஆன்மா ஒருபோதும் இந்த டிஎஸ்பி தங்கவேலுவின் செயலை மன்னிக்காது. மேலும் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும்  காவல்துறை அதிகாரிகள் இது போன்று தொடர்ந்து தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தவறிழைப்பதை கண்டறிந்து, தண்டிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

எவ்வித சம்பளமும் பெறாத அரசியல்வாதிகள் தவறிழைக்கும்போது ஏற்படும் வேகத்தைவிட,  சம்பளம் பெரும் அதிகாரிகள் தவறிழைக்கும் போது பன்மடங்கு அதிகரிக்கத்தான் செய்கிறது. கள்வரை பிடிக்கத்தான் காவல்துறை; ஆனால் இன்றோ காவல் கள்வர்களை பிடிக்கவேண்டிய அவலம் நிகழ்ந்திருப்பது தலைகுனிவான விஷயம்.

- அ. அப்பர்சுந்தரம் (மயிலாடுதுறை)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு