பரிசு ரூ.100

தாலி எனக்கு... லுக் தோழிக்கு!

சென்னை

கீழ்க்கட்டளை பிரசவ ஆஸ்பத்திரியில் கணவன் - மனைவி...

''என்னடி, ரெண்டாவது பிரசவத்துக்கு உங்க அப்பா கண்டுக்காமலேயே இருக்காரு?''

''முதல் பிரசவத்துக்குப் பட்டதே இன்னும் தீரலை. நீங்களும் நாலு வருஷம்கூட கேப் விடாம அடுத்தடுத்து அவசரப்பட்டா அவரு எங்க போவாரு?''

''இதெல்லாம் உங்கப்பாவைக் கேட்டுட்டு முடிவெடுக்கற விஷயமா? என்ன இருந்தாலும் அவர் இப்படி கமுக்கமா இருக்கறது ரொம்ப தப்பு!''

''முதல் தப்பு என் மேலதான்... வீட்டுக்கு வாங்க, பேசிக்கலாம்!''

(கணவர் மிரட்சியாக மனைவியைப் பின் தொடர் கிறார்).

-ஆர்.நாகராஜன், சென்னை-117.

கரூர்

கரூர்-திருச்சி செல்லும் பேருந்து ஒன்றில்...

''அடப்பாவி மனுஷா! பக்கத்துல வொய்ஃபை வெச்சுக்கிட்டு எதிர் ஸீட்டு பொண்ணை 'லுக்' விடறியே?''

''புரியாம பேசாதே திலகா! அந்தப் பொண்ணு கட்டியிருக்கற புடவை மாதிரியே உனக்கும் வாங்கிக் கொடுக்கலா மான்னு நினைச்சுதான் நான் அவளைப் பார்த்தேன்!''

''உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா? தாலி கட்டும்போதே பக்கத்துல நின்ன தோழியைக் கண்ணடிச்ச ஆளாச்சே நீங்க!''

(கணவர் கப்சிப்!).

-பாலா, புதூர்.

செங்கல்பட்டு

ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் இரு பெண்கள்...

''ஏண்டிம்மா ஜானகி, உன் புருஷனுக்கு புரமோஷன் வந்துடுத்தா?''

''இல்லே மாமி! அவருக்குப் பின்னாடி சேர்ந்தவங் களுக்கெல்லாம் வந்துடுத்து. இவருக்கு நேரம் வரல!''

''சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே! உன் புருஷன் ஒரு அசமந்தம்!''

''வாஸ்தவம்தான்! இல்லேன்னா, இப்படி ஊர் வம்பு பேசறவங்க வாயிலேயெல்லாம் புரளுவாரா?''

''என்னடிம்மா, ஏதோ ஜாடைமாடையா என்னைத் திட்டற மாதிரி தெரியுது...''

''புரிஞ்சுகிட்டா சரி!''

-எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் பேக்கரியில் வெளியூர் நபரும் கடைக்காரரும்...

''ஏம்பா, முட்டை போடாத கேக் இருக்காப்பா?''

''எங்க ஊர்ல கோழிதான் சார் முட்டை போடும். கேக்கெல்லாம் முட்டை போடாது!''

(கேட்டவர் சிரிக்கிறார்).

-ரிஷிவந்தியா