Published:Updated:

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!
பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

நாடகங்களில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்த தமிழ் சினிமா,  ஆரம்ப காலத்தில் இருந்து, இப்போது வரை எவ்வளவோ மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. அதில் ஹீரோயின்கள் ஹீரோக்களை அழைக்கும் முறையும் நிறைய மாற்றங்களை கண்டு வந்திருக்கிறது.

நிஜத்தில் பெண்களின் நடவடிக்கைகளைப் பார்த்து சினிமாவில் மாற்றம் வந்ததா அல்லது சினிமாவைப் பார்த்து நிஜத்தில் பெண்கள் மாறிவிட்டார்களா என்பது கோழியிலிருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதைவிட சிக்கலான கேள்வி. அந்த மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் வெளிவந்த படங்களில் பெரும்பாலானாவை புராணக்கதைகளும், ராஜா ராணிக்கதைகளும்தான். அப்போதைய படங்களில் நாடகங்களின் பாதிப்பு வெகுவாக இருந்தன. மேலும் அப்போதைய படங்கள் பெரும்பாலும் சினிமா ஸ்டூடியோக்களில் படமாக்கப்பட்டன.

அப்போது வெளிவந்த  படங்களில் ஹீரோயின்கள், ஹீரோக்களை கடவுளுக்கு நிகராக மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. அதனால் அப்போதைய படங்களில் ஹீரோயின்கள், ஹீரோக்களை 'சுவாமி' மற்றும்  'பிராணநாதா' என்று அழைத்தார்கள். மேலும் ஹீரோயின்கள்,  ஹீரோக்களிடம் பேசும்போது, ஒரு மரியாதைக்காக கொஞ்சதூரம் தள்ளி நின்று தரையைப் பார்த்துப் பேசினார்கள்.

அதற்குப் பிறகு வெளிவந்த தமிழ் சினிமாக்களில், சமூக முன்னேற்றக் கருத்துக்கள் முன்னிலைப்படுத்தப் பட்டன. மேலும் அப்போது நடைமுறை வாழ்க்கையோடு பொருந்திப்போகும்படியான கதையம்சம் உள்ள சமூகப் படங்கள் வெளிவந்தன. எனவே அப்போது கொஞ்சம்  நாகரக மாற்றம் கண்ட தமிழ் சினிமாக்களில், ஹீரோயின்கள் ஹீரோக்களை 'அத்தான் மற்றும்' 'என்னங்க' என்று அழைத்தார்கள்.

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

அதன் பின்னரான காலகட்டத்தில் வெளிவந்த படங்கள், நகர வாழ்க்கையின் பாதிப்புகளை நாகரீகங்களை கொண்டிருந்தது. எனவே அப்போதைய படங்களில் ஹீரோயின்கள், ஹீரோக்களிடம் பேசும்போது அவ்வப்போது முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேசும் அளவுக்கு தைரியம் பெற்றிருந்தார்கள்.

அதன்பிறகு  தமிழ் சினிமாத்துறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. சினிமாப் படப்பிடிப்புகள் என்றால் நகரத்தில் உள்ள ஸ்டுடியோக்களில் எடுக்கப்படும் என்ற நிலைமாறி, வெளி ஊர்களுக்கு, கிராமங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த ஆரம்பித்தார்கள். அத்தகைய படங்களில் ஹீரோயின்கள், ஹீரோக்களை  'மச்சான்' மற்றும் 'யோவ்' என்று அழைத்தார்கள்.  மேலும் ஹீரோயின்கள், ஹீரோக்களிடம் பேசும்போது நேருக்கு நேர் முகத்தை நிமிர்ந்து பார்த்துப் பேசினார்கள்.

பிராண நாதாவிலிருந்து டேய்... லூசு வரை தமிழ் சினிமா காதலர்கள்!

அதன்பிறகு வெளிவந்த தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்கள் மற்றும் ஹீரோக்களுக்கு இடையேயான உறவு என்பது நண்பர்களைப் போல சகஜமான நிலையை அடைந்தது. எனவே இந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்த படங்களில் ஹீரோயின்கள், ஹீரோக்களை  'ஹேய்' மற்றும் 'ஷிவா' 'கார்த்திக்' என்று ஹீரோக்களின் பெயர் சொல்லியும் அழைத்தார்கள்.

இப்போது வரும் படங்கள் மேலும் மாற்றம் அடைந்துவிட்டன. இன்றைய படங்களில் ஹீரோயின்கள் ஹீரோக்களை 'டேய்' மற்றும் 'லூசு' என்று அழைக்கிறார்கள். இன்றைய படங்களில் ஹீரோயின்கள் மற்றும் ஹீரோக்களுக்கு இடையேயான உறவு என்பது மிக நெருக்கமாகவும், உரிமையானதாகவும் மாறிவிட்டது.

சினிமாக்களின் பாதிப்பு, நடைமுறை வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது என்பதை மறுக்க முடியாது. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. மேலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது என்பது முற்றிலும் உண்மை.

- ருத்ரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு