Published:Updated:

மேகிக்கு தடை, மைதாவுக்கு கிடையாதா..?

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?
மேகிக்கு தடை, மைதாவுக்கு கிடையாதா..?

மேகிக்கு தடை, மைதாவுக்கு கிடையாதா..?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?

மேகி நூடுல்சுக்கு மூடு விழா நடத்தியது பல்வேறு நச்சு உணவுப் பொருள்களின் அழிவுக்கு தொடக்க விழா என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மைதா  என்ற “மயான “மாவு கலந்த பரோட்டா, பப்ஸ், பிரட் உணவிற்கு தடை வெகு விரைவில் வர வேண்டும் என மைதா உணவால் சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் கடவுளிடம் வேண்டி வருகிறார்கள்.

'உணவே மருந்து' என்ற நிலையில் இருந்த நமது சமூகம், இன்று உணவுக்கு முன், பின் மருந்து எடுத்துக்கொள்ளும் அளவிற்கு  சர்க்கரையால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிற  நடிகையை வரவேற்பதில் மட்டுமல்ல, வெள்ளை நிற உணவையும் வரவேற்பதில் தமிழர்கள் முதலிடம்தான்.

வெள்ளை நிறத்தில் வந்து ஆளைக்கொல்லும் உணவாக நூடுல்ஸில் தொடங்கி சர்க்கரை, உப்பு , மைதா பரோட்டா, பிரட் நவீன ஆலையில் இருந்து வரும் பளபளக்கும் நார்ச்சத்து நீக்கப்பட்ட வெள்ளை நிற அரிசி என நம்மை ஆளும் உணவுகளால் நம் மரணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

மைதா என்ற மாவு, மயானத்திற்கு அழைக்கும் எமனின் மயக்க மாவு என்றால் மிகையாகாது. மைதா மூலம் தயாரிக்கப்படும் கேக் ,பிரட், குடும்ப நெருங்கிய உறவினர்  போல நம்மோடு ஒன்றி விட்ட  பரோட்டா போன்றவைகள்  எல்லாம் உணவின் வடிவில் நாம் உண்ணும் விஷம் என்றால் மிகையாகாது. மைதா பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. சீனா, ஐரோப்பா நாடுகள் முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?

மைதா என்பது கோதுமையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு எடுக்கப்படும் நார்ச்சத்து இல்லாத மாவை, மஞ்சள் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாற்ற துணியை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவமான பென்சொயிக்  பெராக்ஸ்சைடு , ஆலோசேன் என்ற இரண்டு வேதிப்பொருள்கள் மூலம் நிறம் மாற்றி மிருதுவான, கவர்ச்சிகரமான மாவாக ஆக்கப்படுவதாகும். இந்த மாவே பரோட்டா, கேக், பிரட் தயாரிப்பில் முன்னணி வகிகின்றன.

உலகிலேயே மிக அதிகமான லாபம் உள்ள தொழில் பரோட்டா கடை, பேக்கரி தொழில்தான். ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை குடும்ப உணவாக போற்றுவது பரோட்டாவைத்தான். தென் மாவட்டங்களில் தெருவுக்கொரு பரோட்டா கடையும், டாஸ்மாக் கடையும் இணை பிரியாத தம்பதிகளாக இணைந்தே இருக்கும்.

சுமார் 90% பேக்கரி உணவுப் பொருட்கள்  'மைதாவை' மூலப் பொருளாக கொண்டு, செயற்கை நிறமூட்டி, டால்டா, செயற்கை  சுவை ஊட்டிகள், சாக்கரின், சர்க்கரை, அஜினோமோட்டோ போன்ற உடலுக்கு தீங்கு செய்யும் பொருள்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து, பாதிப்பேரை சர்க்கரை நோய்க்கு ஆளாக்கி வருகிறது. தர்மம் மூலம் கிடைக்கும் புண்ணியம் தலைமுறைக்கு தொடருமோ இல்லையோ  சர்க்கரை நோய் கட்டாயம் பல தலைமுறைக்கு  தொடர்ந்து வரும்.

நம்  உடையைப்போல எங்கு சென்றாலும் சர்க்கரை நோய் மாத்திரைகள் நம்மோடு ஒன்றிவிட்டன.  உறவினர்களை விசாரிப்பதே சர்க்கரை அளவை விசாரித்து விட்டுத்தான் அவர் தம் குடும்ப உறவினர்களை விசாரிக்கும் நிலையில், உறவுகளில் சர்க்கரை நோய் ஒன்றி விட்டது.

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?

நமக்கு விஷத்தை உணவு வடிவில்  கொடுக்க அனுமதிக்கும் அரசும் நம் எதிரிதான்.  தரமான சாலை போட, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணாமல் தலைக்கவசம் போடச் சொல்லும் நீதிமன்றம்போல, டாஸ்மாக் மதுவை, சிகரட்டை அழிக்காமல் மக்கள்  நல் வாழ்வில் அக்கறை கொண்டதுபோல நம் வரிப்பணத்தில்  மது கேடு, புகை பகை என பல கோடிகள் விளம்பரம் செய்வதும் அடிப்படை பிரச்னையை புரிந்து கொள்ளாமல் நம் பணத்தை வீணாக்கும் வேலைகள். 

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?

மக்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லும் அரசாங்கம் மது, புகை நிறுவனங்களை ஏன் நிரந்தரமாக தடை செய்ய முடியாதா? 80 கோடிப்பேருக்கு உபதேசம் சொல்லும் அரசு, 80 நிறுவனங்களை தடை செய்ய முடியாதா? அரசுக்கு வருமானமே முக்கியம். நம்மைக் கொன்றவர், நமக்கு மாலை போட்டு அனுதாபம் சொன்ன வேலையைத்தான் அரசு செய்து வருகிறது.

டாஸ்மாக், மைதா  பரோட்டா, பன்னாட்டு இறைச்சிக் குப்பைகள், சிகரெட் போன்றவற்றிற்கு மக்களை அடிமையாக்கி விட்டு, அரசே இவை எல்லாம் உடலுக்கு தீங்கானது என பல கோடிகளில் விளம்பரம் செய்வது கேலிக்குரியதே.

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?

இந்தியாவிலேயே தமிழகம்தான் சர்க்கரை நோயாளி களின் தலைநகராக விளங்கி வருகிறது. 10 ல் ஒருவ ருக்கு சர்க்கரை நோய் உள்ளது. பல ஆயிரம் பரோட்டா கடைகள், பேக்கரி கடைகள்  பல கோடி பேருக்கு சர்க் கரை, இதய நோயை தந்துள்ளன என்றால் மிகையாகாது. கடுமையான உழைப்பாளிகளான விவசாயப் பெருமக்கள் கூட பரோட்டவால் சர்க்கரை  நோயால் இறக்கின்றனர்.

ஓர் இனத்தை அழிக்க அணுகுண்டோ, போர் முறைகளோ தேவை இல்லை. உணவின் மூலம் இன அழிப்பை எளி தாக  செய்ய முடியும் என்பதற்கு  பரோட்டாவும், டாஸ் மாக் சரக்கும் உதாரணங்களாக விளங்குகின்றன.
 
மைதா தயாரிப்பு உணவிற்கு ஏன் தடை வேண்டும்?

1. நார்ச் சத்து இல்லாத மைதா, ஹை க்ளைசெமிக் இன்டெக்ஸ் பிரிவில் உள்ளது.  அதாவது உடலில் வேகமாக சர்க்கரை அளவை   உயர்த்தும் உணவுப்பொருள்.

2. உடலில் அமிலத் தன்மையை அதிகப்படுத்தும். ஜீரண சக்தியை குறைக்கும்.

3. ரசாயன முறையில் ப்ளீசிங் செய்யப்பட்டு நிறமேற்றம் செய்யப்படும் மைதா, கணையத்தில் இன்சுலின் சுரப்பை பாதித்து, சர்க்கரை  நோயாளிகளை அதிகமாக்கும். உடல் எடை அதிகரிப்பு, சிறுநீரக செயல் இழப்பிற்கும் காரணமாகும்.

மேகிக்கு  தடை, மைதாவுக்கு கிடையாதா..?


அடிப்படையான உடல் நலக் கேட்டைத் தரும் உணவுகளை தடை செய்தாலே, ஒட்டு மொத்த இந்தியா விற்கும் மருத்துவ செலவு குறையும். அதை விட்டு விட்டு  பல ஆயிரம் கோடிகள் மக்களின் மருத்துவ திட்டத்திற்கு செலவழிப்பது தேவையா ? ஒரு பக்கம் விஷத்தையும் கொடுத்து, மறுபக்கம் மருந்தும் கொடுப்பது வேடிக்கையாக உள்ளது.

பாரம்பரியமான உணவை  உண்டு வாழும் 70 வயதை கடந்தவர்கள் நிமிர்ந்து நிற்க,  பரோட்டா, டாஸ்மாக் பிரியர்களாக இருக்கும் இளைஞர்கள் சர்க்கரை வியாதியோடு நடக்க முடியாமல் முடங்கிப்போவது நமது சமூக உணவுப் பழக்க வழக்கத்தின் மாற்றத்தால் வந்த மாற்ற முடியாத சோகம்.

பல ஆயிரம் பரோட்டா கடை உரிமையாளர்களும், மைதா தயாரிப்பு பொருட்கள்  முதலாளிகளும் சம்பாதிக்க, ஒட்டு மொத்த மக்களும்  சர்க்கரை நோய்க்கு ஆளாகி, மலடாகி சாக வேண்டுமா? பரோட்டா, பேக்கரி கடைக்கும் மேகியைப்போல  மூடுவிழா வேண்டும்.

மைதா உணவுப்பொருள்களை அரசு தடை செய்யுமா?


- எஸ். அசோக்
 
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு