Published:Updated:

மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 20

மெட்ராஸ் வரலாறு

தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது

மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 20

தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது

Published:Updated:
மெட்ராஸ் வரலாறு


அது ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை மாலையும், ஞாயிற்றுக்கிழமை மாலையும் சென்னை மக்கள் தகிப்பார்கள். அலுவலகத்தில் இருந்து ஆறுமணிக்குள் வீட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று பதறுவார்கள். குடிநீருக்காக சாலையைத் தோண்டுகிறார்கள் என்றால் கொலைவெறியர்களாக மாறிவிடுவார்கள். மின்சாரம் தடை பட்டால் மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ரகளை செய்வார்கள்.

ரொம்ப சஸ்பென்ஸ் வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் சென்னை தூர்தர்ஷனில் 'ஒளியும் ஒலியும்' என்ற தலைப்பில் ஐந்து அல்லது ஆறு திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் ஒரு சினிமா ஒளிபரப்புவார்கள். அதைப் பார்க்கத்தான் இப்படி ஒரு ஆவேசப் புறப்பாடு.

அந்த நாட்கள் என்று சொல்வது, 80-கள். மக்கள் அதற்காக காலையில் இருந்தே தயாராவதைப் பார்த்திருக்கிறேன். எல்லோருடைய வீடுகளிலும் டி.வி இருக்காது. தெருவுக்கு ஓரிருவர் வீட்டில் இருக்கும். தெரிந்தவர் நண்பர்கள் தயவோடு ஒளியும் ஒலியும் ஆரம்பிப்பதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்த தருணங்கள். ஒலியும் ஒளியும் என்றால், சம்பந்தப்பட்ட டி.வி. உரிமையாளர்கள் 25 காசு வசூலிப்பார்கள். சினிமாவுக்கு என்றால் 30 காசு. டி.வி. உரிமையாளர்கள் கிட்டத்தட்ட சேனல் உரிமையாளர்கள் போலத்தான். சில வீடுகளில் பாய் போட்டு அமர வைப்பார்கள். சில வீடுகளில் சிமெண்ட் தரையில் நெருக்கியடித்து உட்கார வேண்டியதுதான்.

மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 20

கதவுகள் வைத்த சாலிடேர் டி.வி-கள்தான் பெரும்பாலும். அந்தக் கதவுகள், சொர்க்கத்தின் கதவுகளுக்கு சமம். அதைத் திறக்கும்போது அப்படி ஒரு பரவசம். கிராமங்களில் பஞ்சாயத்து அலுவலக வாசல்களில் மணல்குவித்து இடம் பிடிக்க அடிதடி நடக்கும். சென்னையில் மணலுக்கு வழி இல்லை என்பதால், டி.வி-க்கு நெருக்கமாக அமர்வதற்கு அலைபாய்வார்கள். சில டி.வி உரிமையாளர்கள் ஒளி ஒலிக்கு நடுவே டீ தருவார்கள்.

இவ்வளவு ஏற்பாடுகள் இருந்தும் தொலைக்காட்சியிலேயே சில தொழில்நுட்பத் தடங்கல்கள் ஏற்பட்டு, கோழி ஒன்று சதுரமாக முட்டைப் போட்டுவிட்டுத் திகைத்துப் போய் திரும்பிப் பார்க்கும் சிலைடு போட்டுவிடுவார்கள். தடங்கலுக்கு வருந்துகிறோம் என்ற சிலைடே தொலக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி போல ஒளிபரப்பானது அப்போது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தடங்கல்கள் வரும். உடனே தாமரை, அல்லி, ரோஜா போன்ற மலர்களைக் காட்டுவார்கள். சில நேரங்கள் நான்கு பாடல்களிலேயே ஒலியும் ஒளியும் முடிந்துபோகும். ஏதோ இடைவேளையின்போதே தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பிவிட்டது மாதிரி புலம்புவார்கள்.

தொலைக்காட்சி தரும் தொல்லை போதாது என்று டி.வி. ஆன்டெனா ஒருபக்கம் தொல்லை கொடுக்கும். காற்றில் அது வேறு பக்கம் திரும்பிவிட்டாலும் டி.வி-யில் படம் தெரியாது. உடனே மொட்டை மாடிக்கு ஓடி, ஆன்டெனாவை இப்படியும் அப்படியுமாகத் திருப்புவார்கள். கீழே இருந்து ஒருவர், 'இன்னும் கொஞ்சம் லெஃப்ட், இல்லை ரைட்.. மொதல்லயே சரியா தெரிஞ்சது' என்றபடி வழிகாட்டுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 20

சில வேளைகளில் அசாம், மணிப்பூர் திரைப்படங்களையும் மொழி தெரியாமலேயே பார்த்துக்கொண்டிருப்போம். கீழே அவ்வப்போது ஆங்கிலத்தில் சப் டைட்டில் ஓடும். மக்களுக்கு வீட்டுக்குள் சினிமா நட்சத்திரங்களை தரிசிக்கும் திருப்தி அது. அன்றைய தூர்தர்ஷனுக்கு இருந்த மரியாதை இன்றைய 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

தூர்தரிஷனில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பும் நாட்களில் சில டி.வி. விற்கும் கடைகளில் கண்ணாடிக்கு அந்தப் புரத்தில் டி.வியை ஓடவிட்டிருப்பார்கள். சாலையில் நின்று மக்கள் பார்ப்பார்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்தியிலே ஒளிபரப்பாகும் மகாபாரதத்தைப் பார்க்க வீட்டிலேயே உட்கார்ந்திருப்பார்கள். அதனால், தெருவில் கூட்டம் குறைவாக இருக்கும். ஏதோ ஒரு ஊரில் மகாபாரதம் வெளியான நேரத்தில் கரன்ட் போனதால் ட்ரான்ஸ்ஃபார்மர்களை அடித்து நொறுக்கினார்கள். அது தூர்தர்ஷனின் பொற்காலம்.

மெட்ராஸ் வரலாறு : அது ஒரு அழகிய தூர்தர்ஷன் காலம் | பகுதி 20

93-ம் ஆண்டில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த சினிமா வார இதழ் நிறுவனம், முதன்முதலாக தொலைக்காட்சி சேனல் ஆரம்பித்தது. அன்றைய நாளில் தனியார் தொலைக்காட்சிக்குப் போதிய வரவேற்பு இல்லை. மேலும் கேபிள் டி.வி. சிஸ்டம் அப்போது இல்லை. அந்தத் தனியார் தொலைக்காட்சிக்கு என தனியாக ஒரு ஆன்டெனா வைக்க வேண்டியிருந்தது. அப்போதே அதன் விலை 12 ஆயிரம் ரூபாய். அதனால், பெரும்பாலானவர்கள் டி.வி-யும் வாங்கி அதற்கு இவ்வளவு விலைகொடுத்து ஆன்டெனாவும் வாங்குவதைத் தவிர்த்தனர்.

அந்த நாளில் அந்த சேனலுக்கு நடிகைகள் பேட்டி கொடுக்க மறுப்பார்கள். சில நேரங்களில் நான் வேலை பார்த்த சினிமா பத்திரிகையில் அவர்களின் பேட்டியைப் பிரசுரிப்பதாக இருந்தால் மட்டுமே டி.வி. சேனலுக்கு பேட்டி தருவதாக கன்டீஷன் போடுவார்கள்.

கேபிள் டி.வி. யுகம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. பல தனியார் தொலைக்காட்சிகள் வந்து அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கின. தடங்கலுக்கு வருந்தாத தனியார் சேனல்கள் ஒருவகையில் சமூக மாற்றத்துக்கான அடையாளம்தான்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism