Published:Updated:

அரசியல் கட்சிகளுக்கு 'அணி' ஆலோசனை!

விகடன் விமர்சனக்குழு
அரசியல் கட்சிகளுக்கு 'அணி' ஆலோசனை!
அரசியல் கட்சிகளுக்கு 'அணி' ஆலோசனை!
அரசியல் கட்சிகளுக்கு 'அணி' ஆலோசனை!

ப்போ இருக்கிற, பேரவை, இலக்கிய, மருத்துவ, வக்கீல், இளைஞர், மாணவர், மகளிர் அணிகள் தவிர  வேறு என்ன அணிகள்  புதுசா உருவாக்கி எல்லோரையும் கட்சிக்குள்ள கொண்டு வரலாம்.

1. செவிலியர்கள் அணி -  மருத்துவர் அணி இருக்கும்போது, கூடவே நர்ஸுகள் அணியும் இருந்தாதானே எல்லாம் ஆரோக்கியமா இருக்கும். தலைவர்கள் யாராவது மயக்கமடையும்போது (அதான் அப்பப்போ விசாரணை வருதே) கூடவே இருந்து பார்த்துக்க நர்ஸுகள் அணி ரொம்ப ரொம்ப முக்கியம்!

2. குமாஸ்தா அணி - வக்கீல் குமாஸ்தாக்களுக்கும் ஒரு அணி இருந்தா, அவங்களும் அவங்க குடும்பமும் ஒரு பதவியில இருப்பாங்க, அவங்க பொழப்பும் வாய்தா இல்லாம ஓடும்ல!

4. மகளிர் அணியை நிறைய அணிகளா பிரிக்கலாம் - சிறுமிகள் அணி, குமரிகள் அணி, கல்லூரி பெண்கள் அணி, மணமானோர் அணி, முதியோர் அணி-ன்னு  பிரிசிக்கிட்டோம்னா, பெண்கள் பெரும் அளவுல வருவாங்க!

அரசியல் கட்சிகளுக்கு 'அணி' ஆலோசனை!

4. மாணவிகள் அணி - அதென்னங்க மாணவர்களுக்கு மட்டும் தனி அணி, மாணவிகள் அணியையும் விரிவாக்கம் பண்ணுங்க, பள்ளி அளவுல, கல்லூரி அளவுல வெச்சா இன்னும் சீக்கிரமாகவே எல்லோரும் அரசியலுக்கு வந்திடுவாங்க!

5. தேநீர் கடை அணி - டீக்கடைக்காரங்க எல்லோருக்கும் ஒரு அணி வெச்சா நல்லா அரசியல் வியாபாரம் நடக்கும்!

6. ஓட்டுநர்கள் அணி - 24 மணி நேரமும் உழைக்கிற ஆட்கள் நம்ம ஓட்டுநர்கள்தான். ஓட்டுநர்களுக்கு தனியா ஓர் அணி இருந்தா, அவங்களுக்கும் பதவி கிடைக்கும். இன்னும் சுறுசுறுப்பா ஊக்கமா வேலை செய்வாங்க!

7. ஃபேஸ்புக் அணி - ஃபேஸ்புக்ல அங்கங்க எழுதிக்கிட்டு இருக்கிறவங்களை எல்லாம் ஒண்ணு சேர்த்து, அவங்களுக்கும் பதவி குடுத்து, கட்சியைப் பலப்படுத்தலாம்!

8. டுவிட்டர் அணி - தன்னோட பின் தொடர்பாளர்கள் எல்லோரையும் ஒண்ணு சேர்க்கலாம்!

9. துப்புரவு தொழிலாளர் அணி - தூய்மை இந்தியா திட்டத்துல இவங்கதான் முழுப்பங்கு ஆத்துறாங்க. அதனால, இவங்களையும்!

10. ஹோட்டல் தொழிலாளர் அணி - எல்லா அரசியல்வாதிகளும் அடிக்கடி வந்து போகுமிடம், இவங்களை முக்கியமா நல்ல பதவி குடுத்து கவனிச்சிக்கோங்க

அட அங்க என்னப்பா ஒரே சத்தம்... Pre KG  LKG / UKG பசங்களா... சீக்கிரம் உங்களுக்கும் தொடங்கிலாம் அணி!

-இராஜன், தென்காசி