Published:Updated:

ஹாய் மதன் கேள்வி-பதில்

பெண்களால் ஆண்களுக்குப் பாதிப்பா?

ஹாய் மதன் கேள்வி-பதில்

பெண்களால் ஆண்களுக்குப் பாதிப்பா?

Published:Updated:
 ##~##
ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

 பெண்களுக்கு மனத் துணிவு அதிகரித்து விட்டதே... இதனால் ஆண்களுக்கு எதுவும் பாதிப்பு உண்டா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்களைப் பாதிக்க நினைக்கும் ஆண்களுக்குப் பாதிப்பு உண்டு!

பா.அசோக், ஸ்ரீவில்லிபுத்தூர்.

  'அத்தனைக்கும் ஆசைப்படு’ என்றார் அலெக்சாண்டர். 'ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்றார் புத்தர். இருவரில் எவரது கொள்கையைப் பின்பற்றி வாழலாம்?

இரண்டும் வெவ்வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இன்பம் - பேரின்பம் இரண்டும் வேறுதானே?! புத்தர் சொன்னது தத்துவம். சச்சின் ஏன் இன்னமும் விடாமல் 'செஞ்சுரி’ அடித்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறார்? சாதனைக்குத் தூண்டு கோலாக இருப்பதும் ஆசைதான். ரௌடியாக வாழ்ந்து வந்த அரசியல்வாதி, தேர்தலில் நிற்க ஏன் ஆசைப்படுகிறார்? புத்தரேகூட ஞானம் பெற ஆசைப்படவில்லையா? ஆசைதான் பிறவிக்கு வழி வகுக்கிறது. பிறவி என்பது துன்பம் நிறைந்தது. ஆகவே தான், ஞானிகள் பிறவா வரம் வேண்டு கிறார்கள்!

ஹாய் மதன் கேள்வி-பதில்

மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.

கணிதத்தில் மதிப்பு கண்டுபிடிக்க'X’ - ஐப் பயன்படுத்தக் காரணம் என்ன? இதனைக் கண்டுபிடித்தது யார்?

ஆங்கில எழுத்துக்களில் இருபத்திநாலாவது எழுத்து X. ரோமன் எண்களில் X என்றால் பத்து (10). X-க்குத் தனி உச்சரிப்பு கிடையாது. உதாரணமாக, axe என்பதை உச்சரிக்கும்போது aks என்பதாகவே உச்சரிக்கிறோம். தெரியாத, புரியாத ஒளிக் கதிர் என்பதால்தான், X-ray என்று பெயர் வைத்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, X இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் எழுத்து (X mas!). 'அல்ஜீப்ரா’வில் தெரியாத விஷயத்துக்கு (unknown quantity) X என்று வைத்துக்கொண்டது கிறிஸ்து பிறப்புக்குப் பிறகுதான்! வைத்தது யார் என்று தெரியவில்லை!

ஜி.சந்தான கிருஷ்ணன், சென்னை-31.

உலகக் கோப்பை ஜெயித்துவிட்டதற்காக, ஒரேயடியாக கோடிக்கணக்கில் நமது கிரிக்கெட் வீரர்கள் மீது பரிசு மழை பொழிவது சற்று 'ஓவரா’கத் தெரியவில்லை?

ஒட்டுமொத்த இந்தியாவையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய வீரர்கள் இவர்கள்! கடைசியில், இதேபோல அத்தனை இந்தியர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது எப்போது, சொல்லுங்கள்!

  ஏ.சி. அறையில் நாட்டைப்பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் புரோக்கர்களைச் சந்தித்துக்கொண்டு, ஜஸ்ட் லைக் தட் 'இந்தக் கைக்கு அந்தக் கை’ பல்லாயிரம் கோடி ரூபாய் அமுக்கிக்கொள்ளும் அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கனவுகளுடனும், லட்சியத்துடனும், நம் நாட்டுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தரப் போராடி, வெற்றிக் கொடி நாட்டிய வீரர்களுக்குத் தரப்படும் ஒரு கோடி, இரண்டு கோடி எல்லாம் ஒன்றுமே இல்லை!

ஹாய் மதன் கேள்வி-பதில்

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

தொண்டனின் தன்மானத்துக்கும் தலைவனின் தன்மானத்துக்கும் என்ன வேறுபாடு?

தொண்டன் கட்சி மாறினாலோ, கூட்டணி மாறினாலோ, மனைவியை நிமிர்ந்து பார்க்கக் கூடக் கூச்சப்படுவான்!

மா.பாலசுந்தரம், விரகனூர்.

தேர்தல் நேரம் பணம் வரும் நேரம் என நினைப்பது சரியா?

சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு (2006-ம் ஆண்டிலேயே) ஓர் அறிக்கை தயாரித்தது. அதன்படி, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் (அரசியல்வாதிகள் மற்றும் மோசமான தொழிலதிபர் கள்) பதுக்கி இருக்கும் பணத்தின் மதிப்பு சுமார்

ஹாய் மதன் கேள்வி-பதில்

10 ஆயிரம் கோடி. இந்த அளவு பணத்தைக் கொள்ளையடித்து, வங்கிகளில் போடுவதற்காகத் தான் ஓட்டு போடப் பணம் தருகிறார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆனால், சாமானியர் களோ ஐந்து ஆண்டுகள் ஏழ்மையில் வாழ்ந்து விட்டு, ஒரே ஒருநாள் ஓட்டு போடப் பணம் வாங்குகிறார்கள். இதனால், ஏழைகளின் வாழ்க் கைத் தரம் எந்த வகையில் உயருகிறது? 1905-ல் இருந்து 2005 வரை மட்டும் இந்தியா வில் வறுமை காரணமாக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

சி.என்.ஸ்ரீனிவாசன், சென்னை-40.

குளம் என்றால் என்ன? குட்டை என்றால் என்ன?

குளம் செயற்கையானது. குட்டை இயற்கையாக உருவானது. குளம், குட்டையாக மாறும் - அரசியல்வாதிகள் அதில் குதித்த பிறகு!

விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

(ஒரு) காதல் எப்போது முடிவுக்கு வருகிறது?

முடிவுக்கு வந்தால்... அது காதல் அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism