Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ரலாறு திரும்புகிறது. அந்தக் காலத்தில் தனது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை இலவசமாகக் கொடுத்ததன் மூலம் போட்டி நிறுவனமான நெட்ஸ்கேப்பைக் கொன்றே போட்டது மைக்ரோசாஃப்ட். இப்போது ஆன்ட்ராயிட் மென்பொருளை கூகுள் இலவசமாகக் கொடுக்க, மைக்ரோசாஃப்ட் திக்கித் தவிக்கிறது.

 ஓ.கே. இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் இருந்து, பல முறை மேகக் கணினிய

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருங்காலத் தொழில்நுட்பம்

நிகழ்வுகளைப்பற்றி விவாதித்து இருக்கிறேன். நிறுவனங்களுக்குப் பல விதங்களில் பயன்படும் வகையில், மேகக் கணினியம் வளர்ந்து வருவது பற்றி உங்களுக்கே ஒரு ஐடியா இருக்கும். ஆனால், சாமானியப் பயனீட்டாளர்களுக்கு மேகக் கணினியத் தொழில்நுட்பத்தால் என்ன பயன் என்ற கேள்வி அவ்வப்போது ஃபேஸ்புக்கிலும், விகடன் டாட் காம் பின்னூட்டங்கள், மெயில் எனப் பல இடங்களில் பல விதங்களில் கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளிக்கும்போது, கூகுள் கோப்புகள் (docs.google.com) போன்ற சேவைகளை உதாரணமாகக் காட்டுவது உண்டு.

இந்தத் துறையில் லேட்டஸ்ட்டாக நுழைந்து இருப்பது அமேசான் டாட் காம். சென்ற வாரக் கட்டுரையில் அமேசானின் மீது ஆப்பிள் நிறுவனம் Appstore என்ற வார்த்தை தங்களுக்குச் சொந்தமானது. அதை அமேசான் பயன்படுத்தக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்து இருந்ததைப்பற்றி சொல்லி இருந்தேன். இந்த வாரத்தில், அமேசான் வெளியிட்டு இருக்கும் Cloud Drive மற்றும் Cloud Player என்ற இரண்டு மேகக் கணினிய சேவைகளைப் பார்க்கும்போது, ஆப்பிள் ஏன் அமேசான் மீது கொலை வெறிகொண்டு இருக்கிறது என்பது புரிகிறது. டிசைனில் தொடங்கி, பயன்பாடு வரை ஆப்பிள் சாதனங்களின் ஆதிக்கம்பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. 10 வருடங்களுக்கு முன் iPod என்ற பெயரில் இசைப்பேழை ஒன்றை வெளியிட்ட தில் இருந்து தொடர்ந்து iPhone, iPad எனத் தொடர்

வருங்காலத் தொழில்நுட்பம்

வெற்றிகளைக் குவிக்கும் இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய குறை, அவர்களது மூடிய தன்மை (closed nature). ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாகவே தெரிந்திருக்கும். வாங்கிய அல்லது தரவிறக்கம் செய்யப்பட்ட இசையைச் சாதனத்துக்குள் கொண்டுசெல்ல வேண்டுமானால், அதற்கு அவர்களது iTunes மென்பொருள் தேவை. அவர்களது மென்பொருள் கடையான Appstore-ல் இருந்து வாங்க வேண்டும் என்றாலும், அதற்கு iTunes தேவை. இந்தக் கட்டுப்பாட்டின் மூலம், ஆப்பிள் பயனீட்டாளர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனிக்க முடியும்... கட்டுப் படுத்த முடியும்.

அமேசானின் இந்த வார மேகக் கணினிய வெளியீடு ஆப்பிளின் இந்த 'மூடிய’ கொள்கைக்கு நேரடியாக விடப்பட்ட சவால்.

எப்படி? விளக்கமாகப் பார்க்கலாம்.

இணையப் பயனீட்டாளர் எவருக்கும் அமேசான் 5 ஜிபி அளவிலான சேமிப்புத் தளத்தை இலவசமாக வழங்குகிறது. பதிவு செய்ய இந்த உரலியைச் சொடுக்குங்கள். http://www.amazon.com/clouddrive/learnmore. 5 ஜிபி என்பது ஜுஜுபி போலத் தெரியலாம். ஆனால், இதில் கிட்டத்தட்ட 1,000 பாடல்களையும் 2,000 புகைப்படங்களையும் சேமிக்க முடியும். இதற்கும் அதிகமாகத் தேவைப்பட்டால், அதை அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

'இது என்ன பெரிய விஷயம்? இதுபோல, மேகக் கணினியத்தில் கோப்புகளைச் சேமித்துவைத்துக்கொள்ள DropBox, Rdio, Google Docs, Picasa போன்ற பல சேவைகள் இருக்கின்றனவே என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் அவர்களின் இரண்டாவது வெளியீடான Cloud Player-ல் இருக்கிறது. ஆப்பிள் சாதனங்கள்போல் அல்லாது, உங்களது இசைக் கோப்புகள் மேகக் கணினியத்தில் சேமிக்கப்பட்டு இருப்பதால், இதைப் பயன்படுத்தி உங்களின் சேமிப்பில் இருக்கும் இசையை எந்த இடத்திலும் இயக்கிக்கொள்ளலாம். இணையத்தில் இணைக்கப்பட்டு இருக் கும் கணினிகள் மட்டும்

வருங்காலத் தொழில்நுட்பம்

அல்லாது, அலைபேசிகளிலும் இதை இயக்க முடியும் என்பது இதன் சிறப்பு!

இசை இயக்கும் மென்பொருளோடு அமேசான் நின்றுவிடாது என்பது எனது அனுமானம். வீடியோ இயக்கும் மென்பொருள், கோப்புகளைப் பார்க்க உதவும் மென்பொருள் என ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடலாம். ஏன், இவை அனைத்தையும் உள்ளடக்கிய கிண்டில் போன்ற சாதனத்தையும் வெளியிடக்கூடும். அப்படி நடந்தால், ஆப்பிளின் சந்தைப் பங்குக்கு கணிசமான அளவில் ஆபத்து நிச்சயம் வரும்!

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism