Published:Updated:

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

Published:Updated:
##~##

கோவை கொடீசியா சாலை அன்று செம கலர்ஃபுல்! 'ஹை டெசிபல்’ ஆடியோவால் திடும் திடும் என அதிர்கிறது ஏரியா. கலங்கடிக்கும் காஸ்ட்யூமில் கன்னாபின்னா சத்தங் களுடன் காத்திருக்கிறார்கள் யுவன் - யுவதிகள்!

 டுர்ர்ர்ர் என்று பி.எம்.டபிள்யூ. எஃப் 800 ஆர் பைக்கில் உறுமியபடி பாய்ந்துவந்து என்ட்ரி கொடுக்கிறார் உலகின் நம்பர் ஒன் 'ஃப்ரீ ஸ்டைல் பைக்கிங் சாம்பியன்’ க்றிஸ் ஃபெய்பெர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ரெட் புல்’ உற்சாக பான நிறுவனம் (கூல் டிரிங்ஸ்தான்) சமீபத்தில் நடத்திய பைக் சாகச நிகழ்ச்சியில்தான் இவ்வளவு உற்சாகம். ஜெர்மனி யைச் சேர்ந்த க்றிஸ், 25 வயதில் இருந்து மோட்டர் பைக் சாகசத்தில் பின்னி எடுக்கிறார். கடந்த 15 வருடங்களில் இந்தத் துறையில் சார் செய்த சாதனைகள் அதிகம்!  

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

நிகழ்ச்சியின் முன்னதாக கோவையின் 'த்ராட்லர்ஸ்’ உள்ளூர் பைக் சாகசக் குழுவினரின் சாகச நிகழ்ச்சி. பிஜூ, சத்யராஜ், பிரசாந்த் ஆகியோர் பைக்கின் ஹேண்ட் பாரைத் தொடாமல், பில்லியனில் சைடாக உட்கார்ந்தபடியே ஓட்ட, பைக்கின் பின் பகுதி தரையை உரச... முன் பக்க சக்கரத்தை உச்சத்தில் தூக்கியபடி, சுமார் அரைமணி நேரம் காட்டிய அமர்க்களத்தில் அசந்து போனார் க்றிஸ். அடுத்து தொடங்கியது க்றிஸின் அதகளம்!

எடுத்த எடுப்பிலேயே க்ளைமாக்ஸ். பைக்கின் முன் சக்கரத்தில் நின்றபடி பாய்ந்து வந்தவர் ஓர் இடத்தில் சட்டென்று பைக்கைவிட்டுக் கீழே குதித்து, மறுநொடி மின்னல் வேகத்தில் தன்னைக் கடந்து செல்லும் பைக்கைப் பிடித்து ஸ்டாண்ட் போட... அத்தனை பேரின் இதயமும் ஒரு நிமிடம் துடிக்க மறந்தது. அந்த பைக்கை இயந்திரமாகவும் நினைக்க முடியவில்லை. க்றிஸின் உடம்பில் எலும்புகள் இருப்பதையும் நம்ப முடிய வில்லை. வளைந்து, நெளிந்து அவர் சொன்னபடி எல்லாம் கேட்டது பைக்!

இப்படித்தான் கொடுக்கணும் உம்மா!

இன்னொரு பக்கம் 'சியர்ஸ் கேர்ள்ஸ்’ சிலரையும் ஜில்லென இறக்கி இருந்தது ரெட் புல் நிறுவனம். நிகழ்ச்சியின் இறுதி யில் உண்மையிலேயே சூடானது அரங்கம். தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்த பெண்ணைத் தன்னை நோக்கி நிற்கச் சொன்னார் க்றிஸ். தூரத்தில் இருந்து பைக்கில் பறந்து வந்தவர், பின் பக்கச் சக்கரத்தை அந்தரத்தில்தூக்கி,  தலையைச் சாய்த்து அம்மணியின் உதட்டோடு உதடாகப் பதியவைத்த உம்மா... யம்மா!

- எஸ்.ஷக்தி, படங்கள்:ஜா.ஜாக்சன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism